அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்துகளுக்கு வரி விலக்கு - இலங்கை நிதியமைச்சர்
இம்மாதம் முதல் அனைத்து அரச ஊழியர்களுக்கும் மாதாந்திர கொடுப்பனவாக ரூபா 5000 வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ செய்தியாளர் சந்திப்பொன்றில் வெளியிட்டார்.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
இன்றைய நேரலை நிறைவடைகிறது
பிபிசி நேயர்களுக்கு வணக்கம்,
இத்துடன் இன்றைய நேரலை நிறைவு பெறுகிறது.
எங்களுடன் இந்த பக்கத்தில் இணைந்திருந்த அனைவருக்கும் நன்றி.
பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும்.
அரசு ஊழியர்களுக்கு சலுகைகள், அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு வரி விலக்கு - இலங்கை நிதியமைச்சர், ரஞ்சன் அருண் பிரசாத், இலங்கை
பட மூலாதாரம், BASIL RAJPAKSE
படக்குறிப்பு, பசில் ராஜபக்ஷ, இலங்கை நிதியமைச்சர்
இம்மாதம் முதல் அனைத்து அரச ஊழியர்களுக்கும் மாதாந்திர கொடுப்பனவாக ரூபா 5000 வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ செய்தியாளர் சந்திப்பொன்றில் வெளியிட்டார்.
ஓய்வூதியம் பெறுபவர்களும் இம்மாதத்திலிருந்து ஒரு வருட காலத்திற்கு 5000 ரூபா, அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளுக்கு அனைத்து வரிகளிலிருந்தும் விலக்கு என்று அவர் கூறினார்.
பெருந்தோட்டத் துறையில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதாந்தம் 15 கிலோ கோதுமை மாவு கிலோ ஒன்றுக்கு 80 ரூபா என்ற விலையிலும், சமுர்த்தி பயனாளிகளுக்கு மேலதிகமாக இந்த மாதம் முதல் மாதம் 1000 ரூபா வழங்கப்படும் என்று பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
அனைத்து மாற்றுத்திறனாளி வீரர்களுக்கும் இந்த மாதம் முதல் ரூ.5000 கூடுதல் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் விவசாயிகளுக்கு கூடுதலாக ஒரு கிலோ நெல்லுக்கு 25 ரூபாய் வழங்கப்படும் என்றும் நிதியமைச்சர் குறிப்பிட்டார்.
முதல்வர் நாற்காலியில் அஜித் குமார் - மதுரை சுவரொட்டியால் சர்ச்சை, ஜி. மணிவண்ணன்
பட மூலாதாரம், ㅤㅤㅤ
நடிகர் அஜித் குமார் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருப்பது போன்று சித்தரிக்கப்பட்டு மதுரையில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் சர்ச்சை ஏற்பட்டது.மதுரையை சேர்ந்த விஜய் ரசிகர்கள் அவரை, கட்சி அரசியலுக்கு வரும் நோக்கில் வித விதமான வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டி கவனத்தை ஈர்க்கும் நடவடிக்கையில் ஈடுபடுவார்கள்.அதே பாணியில் மதுரையை சேர்ந்த "தூங்காநகரம் அஜித் ஃபேன்ஸ்" என்ற பெயரில் அஜித் ரசிகர்கள் சிலர் அவரை அரசியலுக்கு அழைக்கும் வகையில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். அதில், "எங்களின் வலிமையை பட்டி தொட்டியும் தெரியும், சட்டசபையும் அறியும்!" என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும், சட்டசபை முகப்பு கட்டடத்தின் பின்னணியில் முதலமைச்சர் நாற்காலியில் நடிகர் அஜித்குமார் அமர்ந்திருப்பது போன்றும் சுவரொட்டியில் இடம்பெறும் காட்சி வடிவமைக்கப்பட்டு உள்ளது. நடிகர் அஜித்குமார் தனது ரசிகர் மன்றத்தை பல ஆண்டுகளுக்கு முன்னரே கலைத்திருந்த நிலையில், சமீபத்தில் அவருக்கு ரசிகர்கள் வழங்கிய "தல" எனும் பட்டத்தை கூட தவிர்க்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தடுப்பூசி செலுத்தி கொள்ளாத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் இல்லாத கட்டாய விடுப்பு - புதுச்சேரி சுகாதாரத்துறை, நடராஜன் சுந்தர், புதுச்சேரி
புதுச்சேரி சுகாதாரத்துறை
கொரோனா தொற்று தீவிரமடைந்தது வரும் சூழலில் புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் அனைவரும் 100 % இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள உத்தரவில், புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்களையும் அனைத்து அரசு மற்றும் ஒப்பந்த ஊழியர்களும் செலுத்தி கொண்டார்களா என்பதை சுகாதாரத்துறை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இரண்டு டோஸ் தடுப்பூசி மருந்து செலுத்திக்கொள்ளாத ஊழியர்களை கட்டாய விடுப்பில் அனுப்ப வேண்டும். அதேபோல இரண்டு தடுப்பூசி பூர்த்தி செய்யாத ஊழியர்களுக்கு சம்பளம் இல்லாமல் கட்டாய விடுப்பில் அனுப்ப வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அனைத்து தரப்பு அரசு மற்றும் ஒப்பந்த ஊழியர்களும் வரும் ஜனவரி 7ஆம் தேதிக்குள் 100% தடுப்பூசி போடப்பட்டிருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். அரசு அலுவலக வளாகத்தில் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், PUDUCHERRY GOVERNMENT
உத்தராகண்ட்: ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் பணியில் இறக்கும் படை வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 கோடி, முன்னாள் வீரர்களுக்கு அரசு வேலை - அரவிந்த் கேஜ்ரிவால் உறுதி
ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால், பணியில் உயிரிழக்கும் பாதுகாப்புப் படையினர் மற்றும் ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
"உத்தரகாண்டில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தால், காவல்துறையினர், ராணுவ வீரர் அல்லது துணை ராணுவப் படையினர் பணியின்போது ஏதேனும் ஒரு நடவடிக்கையில் உயிரிழந்தால், அவரது குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்,”என்று கேஜ்ரிவால் கூறியிருக்கிறார்.
உத்தராகண்ட் மாநிலத்தின் டேராடூனில் உள்ள பரேட் மைதானத்தில் திங்கள்கிழமை ஆம் ஆத்மி கட்சியின் நவ் பரிவர்தன் யாத்திரையில் பங்கேற்ற கேஜ்ரிவால், தமது கட்சியின் முதல்வர் வேட்பாளரான ஓய்வுபெற்ற கர்னல் அஜய் கொத்தியாலே, இறந்தவர்களின் உறவினர்களை நேரில் சந்தித்து உதவிகளை வழங்குவார் என்று தெரிவித்தார்.
உத்தராகண்டில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் அனைத்து முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் அரசு வேலை வழங்கப்படும் என்றும் அரவிந்த் கேஜ்ரிவால் உறுதியளித்தார்.
மேலும், ஆம் ஆத்மி அரசில் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என அவர் கூறினார்.
உத்தராகண்ட் மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், அங்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பாகவே பரப்புரை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
வந்துகொண்டிருக்கும் செய்தி, துப்பாக்கி தோட்டா பாய்ந்த புதுக்கோட்டை சிறுவன் உயிரிழப்பு
படக்குறிப்பு, தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்த சிறுவன் உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே பசுமலைப்பட்டியில் உள்ள போலீஸ் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் மத்திய தொழிலக காவல் படையினரின் பயிற்சியின்போது கடந்த 30ஆம் தேதி மலையடிவார வீட்டில் இருந்த சிறுவன் புகழேந்தி (11) தலையில் தோட்டா துளைத்த சம்பவத்தில் அந்த சிறுவனம் உயிரிழந்ததாக இன்று மாலையில் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புகழேந்திக்கு பல மணி அறுவை சிகிச்சை செய்து துப்பாக்கி தோட்டாவை மருத்துவர்கள் அகற்றினர். இந்த நிலையில், சிறுவன் புகழேந்தி இன்று மாலை உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
பெண்ணின் திருமண வயது குறித்த மசோதா நிலைக் குழுவில் ஒரே பெண் எம்.பி
பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் குழந்தை திருமண தடை சட்டத்திருத்த மசோதா ஆய்வுக் குழுவில் ஒரே பெண் எம்.பி மற்றும் இடம் பெற்றுள்ளார்.
கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டிற்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் உறுப்பினராக உள்ள திரிணமூல் காங்கிரஸ் எம்.பி சுஷ்மிதா தேவ், "பெண்ணின் திருமண வயது குறித்தான ஆய்வுக் குழுவில் அனைத்து பெண் எம்.பிக்களின் கருத்துகளும் இடம் பெற வழி செய்ய வேண்டும்," என்று குழுவின் தலைவரை வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து திமுக மகளிரணிச் செயலாளரும் எம்.பியுமான கனிமொழி, "மொத்தம் 110 பெண் எம்.பிக்கள் உள்ளனர். ஆனால், ஒவ்வொரு இளம் பெண்ணையும் பாதிக்கும் முக்கிய மசோதா குறித்த குழுவில் 30 ஆண் எம்.பிக்கள், ஒரு பெண் எம்.பியை மட்டும் தேர்வு செய்துள்ளனர். பெண்களின் ஆண்களே தொடர்ந்து தீர்மானிப்பார்கள். பெண்கள் மெளனப் பார்வையாளர்களாக இருக்க வேண்டும்." என்று கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
திருச்சி என்.ஐ.டி மாணவர்கள் 10 பேருக்கு கொரோனா
பட மூலாதாரம், NIT - TRICHY
படக்குறிப்பு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட என்.ஐ.டி மாணவர்கள் நலமுடன் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி என்.ஐ.டி மாணவர்கள் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
திருச்சி துவாக்குடியில் உள்ள தேசிய தொழில் நுட்பக் கழக (என்.ஐ.டி) மாணவர்களுக்கு படிப்படியாக வகுப்புகள் தொடங்கப்பட்டு வருகின்றன. இதன்படி, என்.ஐ.டிக்கு வருகை தந்துள்ள மூன்றாம் ஆண்டு மாணவர்கள் 500 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில், 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அனைவரும் விடுதி வளாகத்தில் உள்ள மையத்தில், தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். மாணவர்கள் அனைவரும் நலமாக உள்ளனர். பிற மாணவர்களுக்கு தொற்று ஏற்படாமல் இருக்க உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக என்று என்.ஐ.டி நிர்வாகத்தில் தெரிவித்தனர்.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்
பட மூலாதாரம், EDAPPADI PALANISWAMY
படக்குறிப்பு, எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாட்டில் ஆன் லைன் சூதாட்டத்திற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் ஆன் லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்த வங்கி ஊழியர் மணிகண்டன் குடும்பத்துடன் அண்மையில் தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தமது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கையை பகிர்ந்துள்ளார்.
அதில், "ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்பட்ட கடனால் வங்கி ஊழியர் மணிகண்டன் தனது குடும்பத்தினரை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட செய்தி மிகுந்த வேதனையையும், இந்த திமுக அரசின் மீது கோபத்தையும் ஏற்படுத்துகிறது. அதிமுக அரசு ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்திருந்தது,
நீதிமன்ற உத்தரவால் மீண்டும் ஆன்லைன் சூதாட்டம் தொடங்கப்பட்டுள்ளது, இளைஞர்கள்
மற்றும் பல குடும்பங்களையும் பாழாக்கும் இத்தகைய சூதாட்டத்தை அரசு சட்டம் இயற்றி தடை செய்ய மறுப்பது கண்டிக்கத்தக்கது. உடனடியாக ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்," என்று எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
உலக பெரும் பணக்காரர் நிறுவனத்தில் தமிழர் - அசோக் எல்லுசுவாமியை தேர்வு செய்த ஈலோன் மஸ்க்
பட மூலாதாரம், ASHOK ELLUSWAMY/LINKEDIN
படக்குறிப்பு, ஆட்டோ பைலட் தொழில்நுட்பம் குறித்து ஆராயும் குழுவில் முதல் ஊழியராக நியமிக்கப்பட்டுள்ள அசோக் எல்லுசுவாமி
உலக பெரும்பணக்காரர்களில் ஒருவரான ஈலோன் மஸ்குக்கு சொந்தமான, மின்சார வாகனங்களை தயாரிக்கும் டெஸ்லா நிறுவனத்தின் ஆட்டோ பைலட் குழுவின் தலைவராக தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்ட அசோக் எல்லுசுவாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
டெஸ்லா நிறுவனத்தின் ஆட்டோ பைலட் தொழில்நுட்பம் குறித்து ஆராயும் குழுவில் நியமிக்கப்பட்டுள்ள முதல் ஊழியரும் இவர்தான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த அசோக் எல்லுசுவாமி ? எப்படி ஈலோன் மஸ்க் இவரை தேர்வு செய்தார் ? மேலும் விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும்.
பஞ்சாபில் 5ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் ரூ. 5, 000 - காங்கிரஸ் தலைவர் சித்து அறிவிப்பு
பஞ்சாபில் மாணவிகள் படிப்பை தொடரும் வகையில் உதவித் தொகை மற்றும் மடிக்கணினி வழங்கப்படும் என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் சித்து அறிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக கூட்டணி மற்றும் தேர்தல் வியூகங்களை அரசியல் கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன.
இந்நிலையில், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சித்து நிகழ்ச்சி ஒன்றில் கூறுகையில், " பஞ்சாப் மாநிலத்தில் பெண்கள் கல்வியைத் தொடரும் வகையில் மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்படும். பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெறும் மாணவிக்கு ரூ. 20 ஆயிரம், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் ரூ. 15 ஆயிரம், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் ரூ. 5 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும்," என்று தெரிவித்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
பிகாரில் 87 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று
பிகாரில் மாநிலத்தில் பாட்னா நாளந்தா மருத்துவ கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் சிலருக்கு அறிகுறி இல்லாமலும் சிலருக்கு லேசான அறிகுறியும் இருந்துள்ளது. அனைவரும் மருத்துவமனை வளாகத்தில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
திண்டுக்கல்லில் இளைஞர் சுட்டுக் கொலை - 4 பேர் கைது, ஜி.மணிவண்ணன்
படக்குறிப்பு, திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்த ஐ.ஜி அன்பு
திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் பகுதியில் ராகேஷ்(26) என்பவர் நள்ளிரவில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து விசாரணை நடத்திய காவல்துறை, தென் மண்டல ஐ.ஜி அன்பு செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்த வழக்கில் ஜான் சூர்யா, கணேசமூர்த்தி, மரியபிரபு, பிரகாஷ் ஆகிய 4 பேர் கைது செய்யபட்டுள்ளனர். சம்பவம் நடந்து 12 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளிகளிடம் இருந்து இரண்டு அரிவாள், அவர்களால் தயாரிக்கப்பட்ட நாட்டுத் துப்பாக்கி ஆகியவை பறிமுதல் செய்யபட்டுள்ளன.
திண்டுக்கல் மாவட்டத்தில் குற்றங்களைத் தடுக்க அதிக அளவில் குண்டர் சட்டம் போடப்பட்டு வருகிறது. தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது," என்றார்.
7 பேர் விடுதலை: ஆளுநருக்கு மீண்டும் அழுத்தம் - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி, சுதாகர், பிபிசி தமிழுக்காக
படக்குறிப்பு, சிறைவாசிகள் தயாரித்த உணவு பொருட்களை ஆய்வு செய்த அமைச்சர் ரகுபதி
தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சேலம் மத்திய சிறையில் இன்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கொரோனா பரிசோதனைக்கு பிறகே மத்திய சிறைக்கு சிறைவாசிகளை அனுப்புகிறார்கள். ஆகையால் சிறைவாசிகளுக்கு கொரோனா பற்றிய அச்சமும் பயமும் தேவையில்லை.
வீரப்பனின் அண்ணன் மாதையன் 34 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். சிறப்பு பரோல் கேட்டால் கொடுப்பதில் பிரச்னையில்லை. முன் விடுதலைக்கு அரசு சில நிபந்தனைகள் விதித்துள்ளது. அந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டால், விடுதலை குறித்து பரிசீலிக்கப்படும்." என்றார்.
மேலும், "நன்னடத்தை சிறைவாசிகளின் முன்கூட்டிய விடுதலைக்கு பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொருவருக்கும் தனித்தனி அரசாணை வெளியிடப்பட இருப்பதால், முதற்கட்டமாக கடலூர், வேலூர் கோப்புகள் முதலமைச்சர் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஆளுநரின் அனுமதிக்கு பிறகு, விடுதலை செய்யப்படுவார்கள்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து நளினி தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. ஆளுநரே முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. உச்சநீதிமன்றம் நல்ல முடிவை தரும் என்று எதிர்பார்க்கிறோம். இது குறித்து மீண்டும் ஆளுநரிடம் அழுத்தம் கொடுக்கப்படும்." என்றார்.
லக்கிம்பூர் வன்முறை குற்றப்பத்திரிக்கை தாக்கல்
லக்கிம்ப்பூர் கேரி வன்முறை குறித்த 5,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை உத்தரபிரதேச காவல் துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்ப்பூர் மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம், விவசாயிகள் பேரணி நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட வன்முறையில், விவசாயிகள் 4 பேர் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த வழக்கில், மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டார். இந்நிலையில், 14 குற்றவாளிகள் பெயர்களுடன் 5, 000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
"திமுகவின் பி டீம் காங்கிரஸ்" - பா.ஜ.க அண்ணாமலை விமர்சனம், பிரபுராவ் ஆனந்தன், பிபிசி தமிழுக்காக
படக்குறிப்பு, சுதந்திர போராட்ட வீரர் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவிக்கும் அண்ணாமலை
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர், அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறுகையில், கருப்பு, சிவப்பு, நீலம் சேர்ந்து பாஜகவை தோற்கடிக்கும் என ஆ.ராசா எந்த அர்த்தத்தில் பேசினார் என தெரியவில்லை. ஆனால், கருப்பு, சிவப்பு, நீலம் மட்டுமல்ல அனைத்து நிறங்களும் எங்களுக்கு தேவை. எதையும் நாங்கள் ஒதுக்கவில்லை. பாஜகவை பொறுத்தவரை எல்லா நிறங்களை வைத்தும் அரசியல் செய்யவேண்டும் என நினைக்கிறது." என்றார்.
மேலும்,"காங்கிரஸ் ஒரு காற்றடைத்த பலூன்போல இருப்பதால்தான் ராகுல்காந்தி அவ்வப்போது பறந்து கொண்டே இருக்கிறார். ஒரு அகில இந்திய கட்சியின் தலைவர் அவ்வப்போது நாட்டைவிட்டு பறந்து போகிறார். இதற்கு கே.எஸ்.அழகிரி பதில் சொல்ல வேண்டும். எத்தனை நாள் காங்கிரஸ் திமுகவின் பி டீம் ஆக இருப்பார்கள் என பார்க்கலாம்." என்றார்.
டெஸ்ட் போட்டியில் விரட் கோலி விலகல் - முதுகு வலியின் காரணமாக
இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி ஜோகன்ஸ்பர்க்கில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.
இப்போட்டியில், இந்திய அணியின் கேப்டன் விரட் கோலி முதுகு வலியின் காரணமாக விளையாடவில்லை. இதையடுத்து, கே.எல்.ராகுல் அணியை தலைமையேற்று நடத்துவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
டெல்டாவில் 40, 000 ஏக்கர் நெற் பயிர்கள் பாதிப்பு - திடீர் கன மழையினால், ஜி.மணிவண்ணன்
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையினால், அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 40 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 2 நாட்களுக்கு முன் பெய்த கனமழையின் காரணமாக டெல்டா மாவட்டங்களில் நெல் அறுவடை பணிகளை தொடங்க முடியாமல் தவித்து வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
திடீரென பெய்த மழையின் காரணமாக சம்பா நெற்பயிர்கள் மூழ்கியதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக மழைநீரை வெளியேற்ற, வடிகால்வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும். பாதிப்புகளை விரவாக கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெளிப்படைத் தன்மையுடன் டாஸ்மாக் பார் டெண்டர் - அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்
பட மூலாதாரம், V.Senthilbalaji
தமிழ்நாடு டாஸ்மாக் மதுபானக் கூடங்களுக்கான (பார்) ஒப்பந்தம் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறுகிறது. எந்தவித ஒளிவுமறைவும் இல்லை என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
இது குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "உரிய வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் டாஸ்மாக் பார் டெண்டர் நடைபெறுகிறது. இது வரை 11, 700 விண்ணப்பங்கள் வந்துள்ளன. கடந்த 2019ம் ஆண்டு விதிமுறைகள் 66 மற்றும் கொரொனா வழிகாட்டுதல், சுகாதாரம் குறித்த 2 விதிமுறைகள் சேர்க்கப்பட்டு, மொத்தம் 68 விதிமுறைகளுடன் டெண்டர் நடைபெறுகிறது.
என் வீட்டு முன்பு போராட்டம் நடத்தியவர்கள், தங்களது கோரிக்கைகள் குறித்து என்னையோ, டாஸ்மாக் அதிகாரிகளையோ இது வரை நேரில் சந்தித்து மனு அளிக்கவில்லை. அரசியல் நோக்கத்துடன், களங்கம் கற்பிக்கும் வகையில் போராட்டம் நடத்தியுள்ளனர்" என்றார்.
டாஸ்மாக் பார் ஒதுக்கீட்டில் முறைகேடு என்று குற்றம்சாட்டி டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டு முன்பாக இன்று காலை போராட்டம் நடத்தினர். இதையடுத்து செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
போராட்டத்தை கைவிட்ட மீனவர்கள், பிரபுராவ் ஆனந்தன்
ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை கைவிட்டு விட்டு 2 வாரங்களுக்கு பின்னர் மீன்பிடிக்க இன்று கடலுக்கு சென்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டிணத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 68 மீனவர்களை இலங்கை கடற்படை கடந்த மாதம் கைது செய்தது.
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய கோரி கடந்த 13நாட்களாக ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், கடந்த 30ஆம் தேதி ராமேஸ்வரம் மீனவர்களுடன் ராமநாதபுரம் மாவட்டஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விரைவில் அழைத்து வர அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படு வருவதாக மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தார். இதையடுத்து ராமேஸ்வரம் மீனவர்கள் தங்களது காலவரையற்ற போராட்டத்தை திரும்ப பெற்றனர். ராமேஸ்வரத்தில் இருந்து 500 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இன்று மீன்பிடிக்க சென்றனர்.