சென்னையில் பிளஸ் 1
மாணவி ஒருவர்,
பாலியல் தொல்லையால் உயிரை மாய்த்துக்
கொள்வதாக எழுதியுள்ள கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது. `
மாணவி மரணம் தொடர்பாக பள்ளி மாணவர்கள்
உள்பட நான்கு பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது' என்கின்றனர் மாங்காடு போலீஸார்.
சென்னையை அடுத்துள்ள மாங்காட்டில்
வசித்து வரும் வங்கி ஊழியரின் மகள், பூந்தமல்லியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1
படித்து வந்தார். கடந்த
சனிக்கிழமையன்று காலையில் வங்கிப் பணிக்குத் தந்தை சென்றுவிடவே,
தாயும் மகளும் மட்டும் வீட்டில்
இருந்தனர்.வீட்டு
சமையலுக்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்காக மாணவியின் தாய் வெளியில்
சென்றுள்ளனர். இந்த இடைப்பட்ட நேரத்தில் அறைக்குள் சென்ற மாணவி,
நீண்டநேரமாக வெளியில் வரவில்லை எனக்
கூறப்படுகிறது.
கடையில் இருந்து வீட்டுக்கு வந்த
மாணவியின் தாய், கதவைத் தட்டியும்
திறக்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்து அருகில் இருந்தவர்களை உதவிக்கு
அழைத்துள்ளார். அவர்கள், வீட்டுக் கதவை
உடைத்துப் பார்த்தபோது மாணவி உயிரை மாய்த்துக் கொண்டது தெரியவந்தது. இதையடுத்துசம்பவ இடத்துக்கு வந்த மாங்காடு
போலீஸார், மாணவியின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம்
அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில்,
கடந்த சில நாள்களாக கடும்
மனஉளைச்சலில் மாணவி இருந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும்,
மாணவி எழுதி வைத்திருந்தஇரண்டு கடிதங்களையும் போலீஸார்
கைப்பற்றியுள்ளனர். அதில் ஒரு கடிதம் கிழிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில்,
`எனக்கு அந்தக் கனவு வந்து போகிறது.
பள்ளிக்கூடம் பாதுகாப்பான இடம் கிடையாது. உறவினர்கள்,
ஆசிரியர்கள் என யாரையும் நம்பக்
கூடாது. இந்த உலகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பானது கல்லறையும் தாயின்
கருவறையும்தான். பாலியல் அத்துமீறல்களை தடுத்து நிறுத்துங்கள்'
எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், `பெண்களை மதிப்பதை பெற்றோர் கற்றுத் தர வேண்டும்.இது மோசமான சமூகம்,
கடவுள் ஏன் இப்படி படைத்திருக்கிறார்.
என்னைப் பார்த்தாலே வெறுப்பாகிறது. எனக்கு ஆறுதல் சொல்லக்கூட ஆள் இல்லை.
என்னைத்தான் தப்பா பார்க்கறாங்க. யாரையும் நம்பாதீங்க. உன்னை நான் சும்மாவிட மாட்டேன்'
எனக் குறிப்பிட்டுள்ளார்.
அந்தக்
கடிதத்தில் மாணவி குறிப்பிடுகின்ற நபர், ஓர் ஆசிரியரின் மகன் என்பதால் மாணவி படிக்கும் பள்ளி,
முன்பு படித்த பள்ளி ஆகியவற்றில் உள்ள
ஆசிரியர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியின் செல்போன்,
கடிதம், சந்தேகவளையத்தில் உள்ள 17
வயது சிறுவன் உள்பட சிலரிடம் விசாரணை
நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக,
செய்தியாளர்களிடம் பேசிய
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,
` பள்ளி மாணவிகள் தற்கொலை சம்பவம்
தொடர்வது வேதனையளிக்கிறது. மாணவிகளுக்குத் தொடர்ந்து விழிப்புணர்வு அளிக்கிறோம்.
மேலும், உளவியல் ஆலோசனை அளிப்பதற்கும்
நடவடிக்கை எடுக்கப்படும்.பிரச்னை எதுவாக இருந்தாலும் பெற்றோரிடம் மனம்விட்டுப் பேசுங்கள்.
தற்கொலை முடிவை எடுக்க வேண்டாம்' என்றார்.
இதுதொடர்பாக,
மாங்காடு காவல்நிலைய போலீஸ்
வட்டாரத்தில் பேசியபோது, ``ஒன்பதாம் வகுப்பு
வரையில் வேறொரு பள்ளியில் மாணவி படித்து வந்துள்ளார். அப்போது யாரேனும் பாலியல்
தொல்லை கொடுத்தார்களா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. மாணவி முன்பு
படித்த பள்ளியின் ஆசிரியர்,
தற்போது படிக்கும் பள்ளியின்
ஆசிரியர்கள் சிலர் என விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. தற்போது வரையில்
யாரையும் கைது செய்யவில்லை. மூன்று மாணவர்கள், ஆசிரியர்கள், உறவினர்கள் என
அனைத்து தரப்பிலும் விசாரணை நடக்கிறது" என்கின்றனர்.