மோதி ஆட்சியில் தான் பருப்பு, எண்ணெய் வித்துக்கள், பருத்தி எம் எஸ் பியின் கீழ் கொண்டு வரப்பட்டன - வேளாண் அமைச்சர்
2014ஆம் ஆண்டோடு ஒப்பிடும் போது, குறைந்தபட்ச ஆதார விலை இரட்டிப்பாகியுள்ளது. முன்பு நெல் மற்றும் கோதுமை மட்டுமே குறைந்தபட்ச ஆதார விலையின் கீழ் கொள்முதல் செய்யப்பட்டன.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
குடியரசுத் தலைவர் வருகைக்காக பணிபுரிந்த 19 அதிகாரிகளுக்கு கொரோனா - உத்தராகண்ட் டிஜிபி
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
பதஞ்சலி பல்கலைக்கழகத்தின் முதலாமாண்டு பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள நேற்று நவம்பர் 28 ஹரித்வார் சென்றார் இந்திய குடியரசுத் தலைவர். அவரது வருகையை முன்னிட்டு பல்வேறு அரசு அதிகாரிகளும் பணிபுரிந்தனர்.
அப்பணியில் ஈடுபட்டிருந்த அரசு அதிகாரிகளில் 19 பேர் (இதில் 7 காவல்துறை அதிகாரிகளும் அடக்கம்) கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக உத்தராகண்ட் மாநிலத்தின் டிஜிபி அசோக் குமார் கூறியுள்ளதாக ஏ என் ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.
வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் மசோதா 2021 மக்களவையில் நிறைவேற்றம் - 2 மணி வரை அவை ஒத்திவைப்பு
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
இந்தியாவின் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் மசோதா 2021-ஐ எதிர்கட்சியினரின் முழக்கங்களுக்கு இடையில் மக்களவையில் தாக்கல் செய்தார்.
அது உடனடியாக நிறைவேற்றப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் அச்சட்டம் குறித்து முறையாக விவாதிக்கப்பட வேண்டும் என கூறினார். மேலும் மதியம் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச ஆதார விலை குறித்து விவாதிக்கப்படாத வரை பின்வாங்கமாட்டோம் - ராகேஷ் திகைத்
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
இந்தியாவில் யாரும் போராடக் கூடாது என விரும்புகிறது அரசு. ஆனால் குறைந்தபட்ச ஆதார விலை உட்பட மற்ற பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படாத வரை போராட்ட களத்திலிருந்து பின்வாங்கமாட்டோம் என சம்யுக்த் கிஷான் மோர்ச்சா என்கிற பல்வேறு விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கினைந்த அமைப்பின் தலைவரான ராகேஷ் திகைத் கூறியுள்ளதாக ஏ என் ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.
இந்திய நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் தொடங்கியது - சில நிமிடங்களில் ஒத்திவைப்பு
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
இந்திய நாடாளுமன்றத்தின் குளிர் கால கூட்டத் தொடர் இன்று (நவம்பர் 29) முதல் டிசம்பர் 23ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த கூட்டத் தொடருக்கு முன், இந்த நாடாளுமன்ற கூட்டத் தொடர் மிகவும் முக்கியமான ஒன்று. இக்கூட்டத் தொடரில் எல்லா பிரச்சனைகளை குறித்து விவாதிக்கவும், அனைத்து கேள்விகளுக்கு விடையளிக்கவும் தயாராக உள்ளோம். என இந்திய பிரதமர் நரேந்திர மோதி கூறினார்.
இன்று நாடாளுமன்றத்தில் விவசாய சட்டங்களை திரும்பப்பெறுவதற்கான சட்டத்தை தாக்கல் செய்யவிருப்பதாக செய்திகள் வெளியாயின. இருப்பினும் மூன்று விவசாய சட்ட மசோதாக்களை ரத்து செய்யுமாறு காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தியதாக ஏ என் ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.
அதே போல திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினரும் மகாத்மா காந்தி சிலைக்கு முன் விவசாய சட்டங்களை திரும்பப்பெறும் மசோதா 2021 குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என போராட்டம் நடத்தியதாகவும் ஏ என் ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.
இந்த கூட்டத் தொடர் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, ஆளுங்கட்சிக்கு எதிரான எதிர்கட்சியினரின் முழக்கங்களால் மக்ளவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டதாக ஏ என் ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.
திருச்சி அரியாற்றில் உடைப்பு - 1,200 ஏக்கர் பயிர்கள் மூழ்கின
பட மூலாதாரம், DISTRICT PRO
தொடரும் கன மழையால் திருச்சி மாநகரில் கருமண்டபம், தீரன் நகர், பிராட்டியூர், லிங்க நகர், சண்முகா நகர், உய்யகொண்டான் திருமலை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
அத்தியாவசியத் தேவைகளுக்கு மக்கள் படகுகளில் செல்கின்றனர். தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு, பொது மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
புங்கனூர் பகுதியில் அரியாற்றில் 120 அடி நீளத்திற்கு நேற்று உடைப்பு ஏற்பட்டது. இதனால், திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. ஆறு உடைப்பு, வெள்ளத்தில் 1, 200 ஏக்கரில் நெல், வாழை உள்ளிட்ட பயிர்கள் மூழ்கியுள்ளன. அரியாறு உடைப்பு சரி செய்யும் பணியில் பொதுப்பணித்துறை, நீர்வளத்துறையினருடன் பொதுமக்களும் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு பிபிசி தமிழிடம் கூறுகையில், "வெள்ளம் சூழ்ந்த குடியிருப்புகளில் இருந்து 800 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தினமும் 3, 400 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படுகின்றன. அரியாற்றில் ஏற்பட்டுள்ள உடைப்பை இன்று மாலைக்குள் அடைத்து விடுவோம். குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ள வெள்ள நீரை வடிய வைக்கவும் விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இயல்பு நிலை திரும்பி விடும்" என்றார்.
ஒமிக்ரான்: பயணத் தடையை நீக்க தென்னாப்பிரிக்கா வலியுறுத்தல்
பட மூலாதாரம், Getty Images
தென்னாப்பிரிக்கா மற்றும் அதன் அண்டை நாடுகள் மீதான பயணத் தடையை உடனடியாக நீக்க அந்நாட்டு அதிபர் சிரில் ராமபோசா வலியுறுத்தியுள்ளார்.
"தென்னாப்பிரிக்கா மீது விதிக்கப்பட்டுள்ள இந்த தடை நியாயமற்றது. பாகுபாடானது. இதனால் பெரும் அதிருப்தியடைந்துள்ளோம். பயணத் தடை அறிவியல் ரீதியிலானதல்ல. இந்த தடையினால் தென்னாப்பிரிக்காவின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படும்” என்று அவர் கூறியுள்ளார்.
பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா உள்ளிட்டவை பயணத் தடை விதித்திருக்கும் நாடுகளில் அடங்கும்.
“அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வரை கொரோனா திரிபு அடைவதை நிறுத்த முடியாது. பயணத் தடையினால் பயன் இல்லை“ என்று ராமபோசா தெரிவித்துள்ளார்.
திரிபு அடைந்த கொரோனா வைரஸ் ஒமிக்ரான் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டது. இது குறித்து உலக சுகாதார நிறுவனத்திற்கு (WHO) தெரிவிக்கப்பட்டது.
பிரிட்டனில் மூன்றாவது ‘ஒமிக்ரான்’ தொற்று கண்டுபிடிப்பு
பட மூலாதாரம், Getty Images
பிரிட்டனில் மூன்றாவது நபருக்கு கொரோனா ஒமிக்ரான் திரிபு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட நபர் தற்போது பிரிட்டனில் இல்லை எனவும், அவர் லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் பகுதிக்கு வந்துசென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒமிக்ரான் திரிபுக்கு எதிராக கட்டாய முகக் கவசம் உள்ளிட்ட நடவடிக்கைகளை பிரிட்டன் அரசு எடுத்துவரும் நிலையில், இந்தத் தகவல் வெளியாகி இருக்கிறது.
தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரான் திரிபு மிகவும் வேகமாகப் பரவக்கூடிய அபாயம் கொண்டதாக இருக்கலாம் என தொடக்ககட்ட ஆய்வுகளில் தெரிய வருகிறது.
நேரலைக்கு வரவேற்கிறோம்!
பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்.
இன்றைய நேரலைப் பக்கத்தில் முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குவோர் எம்.மணிகண்டன், ஜோ. மகேஸ்வரன்.