மோதி ஆட்சியில் தான் பருப்பு, எண்ணெய் வித்துக்கள், பருத்தி எம் எஸ் பியின் கீழ் கொண்டு வரப்பட்டன - வேளாண் அமைச்சர்
2014ஆம் ஆண்டோடு ஒப்பிடும் போது, குறைந்தபட்ச ஆதார விலை இரட்டிப்பாகியுள்ளது. முன்பு நெல் மற்றும் கோதுமை மட்டுமே குறைந்தபட்ச ஆதார விலையின் கீழ் கொள்முதல் செய்யப்பட்டன.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
இன்றைய நேரலை நிறைவடைகிறது
இத்துடன் இன்றைய நேரலையை நிறைவு செய்கிறோம்.
பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்புபக்கம் செல்லவும்.
வந்துகொண்டிருக்கும் செய்தி, ட்விட்டர் தலைமை அதிகாரியாக இந்தியரான பராக் அகர்வால் நியமனம் - யார் இவர்?
பட மூலாதாரம், PARAG AGARWAL
படக்குறிப்பு, பராக் அகர்வால்
ட்விட்டர் இணை நிறுவனர் ஜாக் டாசீ, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து விலகியதை அடுத்து, புதிய தலைமை நிர்வாகியாக இந்தியரான பராக் அகர்வால் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
ஜாக் டாசீ தமது பதவி விலகல் குறித்தும், பராக் அகர்வால் தமது கருத்து குறித்தும் தத்தமது ட்விட்டர் பக்கங்களில் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.
2006இல் ட்விட்டரை இணைந்து நிறுவிய டாசீ, அந்நிறுவனத்திலும் கட்டண நிறுவனமான ஸ்கொயர் என இரண்டிலும் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றினார்.
இந்த நிலையில், தமது பதவி விலகலை உறுதிப்படுத்தும் கடிதத்தில் "இறுதியாக நான் வெளியேற வேண்டிய நேரம் இது" என்று அவர் கூறியுள்ளார்.
ஏர்டெல், வோடாஃபோன், ஜியோ ப்ரீபெய்ட் கட்டண உயர்வு: வாடிக்கையாளர் மீது திணிக்கப்படுகிறதா நிதிச்சுமை?
பட மூலாதாரம், Getty Images
இந்தியாவின் மூன்று பெரிய தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், வோடாஃபோன் ஐடியா, ரிலையன்ஸ் ஜியோ ஆகியவை தங்களது ப்ரீபெய்ட் கட்டணங்களை உயர்த்தியுள்ளன.
இவற்றில் முதலில் கட்டண உயர்வு அறிவிப்பை வெளியிட்டது ஏர்டெல் நிறுவனம். நவம்பர் 22ம் தேதி, புதிய கட்டண அட்டவணையை வெளியிட்டு, அது நவம்பர் 26ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வரும் என்று அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.
இதைத் தொடர்ந்து, வோடாஃபோன் நிறுவனம், நவம்பர் 2ஆம் தேதி புதிய கட்டண அறிவிப்பை வெளியிட்டு, அது நவம்பர் 25ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வரும் என்று கூறியது.
இந்த வரிசையில் மூன்றாவதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் நவம்பர் 28ஆம் தேதி தனது ப்ரீபெய்ட் கட்டணங்களை உயர்த்துவதாக அறிவிப்பை வெளியிட்டு, அது டிசம்பர் 1ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வரும் என்று அறிவித்துள்ளது.
இந்த மூன்று நிறுவனங்களும், தங்களுடைய ப்ரீபெய்ட் திட்ட கட்டணங்களை, குறைந்தபட்சம் 16 ரூபாயில் இருந்து, அதிகபட்சமாக 500 ரூபாய் வரை உயர்த்தியிருக்கின்றன. இது சராசரியாக 20% முதல் 22% வரையிலான உயர்வாகும்.
"ஒமிக்ரான் திரிபு: உலக அளவில் தீவிர பாதிப்பு ஏற்படலாம்" - WHO எச்சரிக்கை
பட மூலாதாரம், Getty Images
கொரோனா வைரசின் ஒமிக்ரான் திரிபினால் உலக அளவில் ஏற்பட சாத்தியமுள்ள இடர்ப்பாடு 'மிக அதிகம்' என்றும், இதனால், சில பகுதிகளில் தீவிர விளைவுகள் ஏற்படலாம் என்றும் உலக சுகாதார நிறுவனம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
ராய்டர்ஸ், அசோசியேட்டட் ஃபாரின் பிரஸ் ஆகிய செய்தி முகமைகள் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பை செய்தியாக்கியுள்ளன.
உயர் இடர்பாடு மிகுந்த மக்கள் பிரிவினருக்கு தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்தவேண்டும்; அதிக எண்ணிக்கையில் தொற்று ஏற்படும் என்பதை எதிர்பார்த்து, அத்தியாவசிய சுகாதார சேவைகளை பேணுவதற்கான, இடர் நீக்கும் திட்டங்களை தயார் செய்யவேண்டும் என்று தங்கள் 194 உறுப்பு நாடுகளையும் உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
"முன்னர் வேறு திரிபுகள் எதிலும் இல்லாத அளவில் ஒமிக்ரான் திரிபில் முள்முடி பிறழ்வுகள் அதிகம் உள்ளன. இவற்றில் சில பிறழ்வுகள் பெருந்தொற்று உலக அளவில் எப்படிச் செல்லும் என்ற பாதையை பாதிக்கும் வகையில் உள்ளன. இந்த திரிபின் ஒட்டுமொத்த உலக அளவிலான இடர்ப்பாடு அதிகமாக உள்ளது," என்று உலக சுகாதார நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.இது குறித்து விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்
மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம் குறித்து எதிர்கட்சிகள் நாளை ஆலோசனை
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
12 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகளைக் குறித்து ஆலோசனை நடத்த எதிர்கட்சிகள் ஒரு சந்திப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த சந்திப்பு நாளை, மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் அலுவலகத்தில் நடைபெற உள்ளது என ஏ என் ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.
“விவசாயிகள் ஒரு குழுவல்ல, இந்த நாட்டின் மக்கள்” - பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்
YouTube பதிவின் முடிவு
இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோதி அரசு 2019ஆம் ஆண்டில் நிறைவேற்றிய சர்ச்சைக்குரியதாக கருதப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அந்த மசோதா மீது விவாதம் நடத்த வேண்டும் என்று கோரி எதிர்கட்சி உறுப்பினர்கள் குரல் எழுப்பியபோதும், எவ்வித விவாதமுமின்றி அதன் நடைமுறை நான்கு நிமிடங்களில் முடிக்கப்பட்டது.
இது குறித்து, இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேசிய காணொளி இணைக்கப்பட்டுள்ளது.
மோதி ஆட்சியில் தான் பருப்பு, எண்ணெய் வித்துக்கள், பருத்தி எம் எஸ் பியின் கீழ் கொண்டு வரப்பட்டது - வேளாண் அமைச்சர்
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
2014ஆம் ஆண்டோடு ஒப்பிடும் போது, குறைந்தபட்ச ஆதார விலை இரட்டிப்பாகியுள்ளது. முன்பு நெல் மற்றும் கோதுமை மட்டுமே குறைந்தபட்ச ஆதார விலையின் கீழ் கொள்முதல் செய்யப்பட்டது.
ஆனால் பிரதமர் நரேந்திர மோதி தலைமையின் கீழான ஆட்சியில், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி வகைகள் எல்லாம் கொள்முதல் செய்யப்படத் தொடங்கப்பட்டது என இந்திய அரசின் வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியதாக ஏ என் ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.
இப்படி ஒரு குழப்ப நிலையை இப்போது தான் பார்க்கிறேன் - ஜெயா பச்சன்
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
கடந்த பல ஆண்டுகளில், இந்திய நாடாளுமன்றத்தில் இப்படி ஒரு குழப்பநிலையை நான் இப்போது தான் பார்க்கிறேன். வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்படும் மசோதா 2021 பயங்கர குழப்ப நிலையில் நிறைவேற்றப்பட்டது.
இப்போது தனி நாடாளுமன்ற பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என நான் கருதுகிறேன். சிறு கட்சிகளுக்கு தங்களின் கருத்தை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைப்பதில்லை என சமாஜ்வாதி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் நடிகை ஜெயா பச்சன் கூறியுள்ளார்.
இந்திய அரசு, மக்களின் இழப்பை குறித்து, போராட்டத்தைக் குறித்து, காய்கறிகளின் விலை அதிகரித்து வருவதைக் குறித்து பேசி இருக்க வேண்டும். அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? நாம் எப்படி சாப்பிட முடியும்? காற்று, தண்ணீர் என எல்லாமே மாசுபட்டுள்ளது, நாம் எப்படி வாழ முடியும்? என கேள்வி எழுப்பியுள்ளார் ஜெயா பச்சன்.
அரசியல் பயத்தில் வேளாண் சட்டங்கள் திரும்பப்பெறப்படுள்ளது, சி ஏ ஏ திரும்பப்பெறப்பட வேண்டும் - அசாதுதீன் ஒவைசி
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
பல்வேறு மாநிலங்களில் அடுத்தடுத்து சட்டமன்றத் தேர்தல் வரவிருப்பதால், அதில் தோற்றுவிடுவோமோ என்கிற அரசியல் பயத்தில் இந்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பபெற்றுள்ளது.
இந்தியாவில் உள்ள ஒரு பெரிய குழுவினர் சி ஏ ஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம், இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 14-க்கு எதிரானது என கூறுகின்றனர்.
இந்திய அரசு சி ஏ ஏ சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என நாங்கள் கோருகிறோம் என கூறியுள்ளார் அகில இந்திய மஜ்லிஸ் இ இத்திஹதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி.
தெலங்கானாவில் 45 மாணவர்கள் & ஒரு ஆசிரியருக்கு கொரோனா
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
தெலங்கானாவில் சங்கா ரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த மகாத்மா ஜோதிபா பூலே பிற்படுத்தப்பட்டோர் நல்வாழ்வு பள்ளியைச் சேர்ந்த 45 மாணவர்கள் மற்றும் ஓர் ஆசிரியருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறார்கள் என ஏ என் ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.
ஒமிக்ரான் கொரோனா திரிபு தொடர்பான அபாயம் ‘மிக அதிகம்’ - உலக சுகாதார அமைப்பு
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட 50 பிறழ்வுகளைக் கொண்ட ஒமிக்ரான் திரிபின் போடு அபாயம் ‘மிக அதிகம்’ என உலக சுகாதார அமைப்பு கூறியதாக ஏ எஃப் பி முகமையில் கூறப்பட்டுள்ளதாக ஏ என் ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.
சில வாரங்களுக்கு முன் தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய இருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர், ஆனால் அவர்கள் டெல்டா திரிபால் தான் பாதிக்கப்பட்டிருப்பதாக உறுதி செய்யப்பட்டது.
இப்போது, ஒமிக்ரான் திரிபை கருத்தில் கொண்டு பல்வேறு மாநிலங்களும் பல பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
மேலும் 18 வயதுக்கும் குறைவான பதின் பருவத்தினர் மற்றும் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பான திட்டத்தை விரைவில் வெளியிட உள்ளதாக இந்தியாவின் கொரோனா டாஸ்க் ஃபோர்ஸ் தலைவர் டாக்டர் என் கே அரோரா கூறியுள்ளார். இதுபோக கூடுதல் மற்றும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவது தொடர்பாகவும் தடுப்பூசி செலுத்தல் தொடர்பான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு தன் கொள்கையை அடுத்த இரு வாரங்களுக்குள் வெளியிடும் என்றும் கூறினார்.
விவாதமின்றி வேளாண் சட்டங்கள் திரும்பப்பெறப்படும் மசோதா 2021 நிறைவேற்றப்பட்டது வருத்தமளிக்கிறது - ராகுல் காந்தி
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
இந்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் என நாங்கள் முன்பே கூறினோம். இன்று அந்த வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. வேளாண் சட்டங்கள் எந்தவித விவாதமும் இல்லாமல் திரும்பப்பெறப்பட்டது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அரசு விவாதங்களை நடத்த அச்சப்படுகிறது என இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கூறியதாக ஏ என் ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.
இது போக இந்திய நாடாளுமன்றத்தில் மக்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
உண்மை என்னவெனில், இந்த விவகாரத்தில் இந்திய மக்களின் வலிமையை பிரதிபலித்த விவசாயிகளை மத்திய அரசால் எதிர்கொள்ள முடியவில்லை. பல மாநிலங்களில் நடக்கவிருக்கும் தேர்தல் கூட இந்திய அரசின் மனதில் தோன்றி இருக்கலாம் எனவும் கூறியதாக ஏ என் ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.
வேளாண் சட்டங்கள் திரும்பப்பெறும் மசோதா 2021 மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
இந்திய அரசின் வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் மசோதா 2021-ஐ இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் தாக்கல் செய்தார்.
பல்வேறு கூச்சல் மற்றும் குழப்பங்களுக்கு மத்தியில் அச்சட்டம் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் மசோதா 2021 மக்களவையில் நிறைவேற்றப்பட்டது நினைவுகூரத்தக்கது.
மாநிலங்களவையிலும் நிறைவேறியது வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா
சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதற்கான மசோதா இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று காலை நிறைவேறியது. இதையடுத்து தற்போது இந்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மசோதா நிறைவேறியதை அடுத்து, அவை சிறிது நேரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலிருந்து 3 புதிய மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவியேற்பு
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இந்திய நாடாளுமன்றம்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் கனிமொழி என் வி என் சோமு, எம் மொஹம்மத் அப்துல்லா, கே ஆர் என் ராஜேஷ் குமார் ஆகியோர் இன்று மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.
இவர்கள் போக மகாராஷ்டிராவிலிருந்து ரஜினி பாட்டீல், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த லுயிசின்ஹோ ஃபலேரியோ ஆகியோரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
அரசு இச்சட்டத்தை நிறைவேற்றினாலும் அவர்கள் ‘மனதின் குரல் வேறு’ - ஆதிர் ரஞ்சன் செளத்ரி
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
அவையை முடக்கத்துக்கு எதிர்கட்சியினரை குறைகூறுகிறது அரசு. ஆனால் வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவதற்கான மசோதா 2021 விவாதமின்றி அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது. எதிர்கட்சிகள் அச்சட்டம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என கோருகிறது.
அரசு இச்சட்டத்தை நிறைவேற்றிவிட்டது என்றாலும், அவர்கள் மனதில் இருக்கும் குரல் வேறு என காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரான ஆதிர் ரஞ்சன் செளத்ரி கூறியதாக ஏ என் ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.
விவசாய சட்டங்களை திரும்பப்பெறும் மசோதா 2021 குறித்து போதுமான விவாதம் நடந்தது - அமைச்சர் பிரஹலாத் ஜோஷி
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
விவசாய சட்டங்களை திரும்பப்பெறும் மசோதா 2021 தொடர்பாக போதுமான விவாதம் நடந்தது. இருப்பினும் எதிர்கட்சியினர் ஆளுங்கட்சிக்கு எதிராக முழக்கமிட்டனர் என இந்தியாவின் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறியதாக ஏ என் ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.
ஆனால் மாநிலங்கலவை எதிர்கட்சித் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் சட்ட மசோதா 2021 குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என கூறியதாக அதே ஏ என் ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.
மக்களவையில் அவசரமாக இந்த சட்டங்களை நிறைவேற்றுவதன் மூலம், அரசு விவசாயிகளுக்கு சாதகமாக இருக்கிறது என நிரூபிக்க விரும்புகிறது என்றும் கூறியுள்ளார் மல்லிகார்ஜுன கார்கே.
வேதா இல்லம் அரசுடைமையாக்க நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் - எடப்பாடி பழனிச்சாமி
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, வேதா இல்லம்
ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடமிருந்து சேலம் பள்ளப்பட்டி பகுதியில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் விருப்ப மனு பெறப்பட்டு வருகிறது. இன்று கடைசி நாள் என்பதால் இந்த பணிகளை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது “அம்மா கிளினிக் தொடர்ந்து இயங்க திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கு பணியாற்றும் மருத்துவர்களையும், மருத்துவ உதவியாளர்களையும் பணியில் இருந்து நிறுத்தக் கூடாது.
அம்மா உணவகத்தில் பணியாற்றுபவர்களுக்கு சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது. சம்பளத்தை குறைக்காமல் பழையபடி முழு சம்பளம் வழங்க வேண்டும்.
வேதா இல்லம் அரசுடைமையாக்க, அதிமுக செயற்குழு கூட்டத்தில் ஆலோசனை செய்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்.
சேலத்தில் வீடு விழுந்து 6 பேர் இறந்துள்ளனர். இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனே வீடு கட்டித்தர வேண்டும். அதுவரை தற்காலிகமாக தங்க இட வசதி செய்து தரவேண்டும். இறந்தவர்களுக்கு 5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது இதை 15 லட்சமாக உயர்த்தி தரவேண்டும்.
தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழையால் டெல்டா விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். அதனால் மீண்டும் சேத மதிப்பு கணக்கிட்டு நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டும்.
மழை காலத்தில் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உணவு சரியாக வழங்கப்படவில்லை என்று எனக்கு தகவல் வந்தது. அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு மற்றும் மருந்து பொருட்கள் உடனே வழங்க வேண்டும்.
அதே போல கொள்முதல் செய்யப்பட்ட நெல் வீணாகிறது என கேள்விப்பட்டேன். நெல் மழையால் வீணாவதை உடனே தடுக்க வேண்டும்.
ஏற்கனவே மழை பெய்திருந்தது. அதனால் கூடுதலாக மோட்டார்கள் வைத்து தண்ணீர் இறைத்து இருக்கலாம். சென்னையில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெள்ள பாதிப்பு குறித்து மாநில அரசு கேட்கும் நிதியை வழங்கவேண்டும் என்று அதிமுக சார்பில் மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்” என எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.
வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறும் மசோதா 2021 நிறைவேற்றப்பட்டது - காலமான விவசாயிகளுக்கு சமர்ப்பணம்
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
இந்திய அரசு கடந்த ஆண்டு நிறைவேற்றிய மூன்று புதிய வேளாண் சட்ட மசோதாக்களை எதிர்த்து பஞ்சாப் உட்பட பல மாநில விவசாயிகள் ஓராண்டுக்கும் மேலாக போராடி வருகின்றனர்.
அப்போராட்டங்களைத் தொடர்ந்து, இன்று (நவம்பர் 29) இந்திய நாடாளுமன்ற மக்களவையில் அந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெறும் மசோதா 2021 தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது, வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி உயிர் தியாகம் செய்த 750 விவசாயிகளுக்கு சமர்ப்பணம். குறைந்தபட்ச ஆதார விலை உட்பட, பல பிரச்சனைகள் இன்னும் இருக்கின்றன என சக்யுக்த் கிசான் மோர்ச்சாவின் தலைவர் ராகேஷ் திகைத் ஏ என் ஐ முகமையிடம் கூறியுள்ளார்.
ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 60-க்கும் மேற்பட்ட ஆடுகள் மீட்பு
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஆடுகள் - கோப்புப் படம்
திருச்சி மாவட்டம் மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் உத்திரவின் பேரில் திருச்சி சரக காவல்துறை துணை தலைவர் மேற்பார்வையில் கடந்த 23.11.2021 அன்று ஆடு திருடுபவர்களை பிடிப்பதற்காக ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் மூன்று காவலர்களைக் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
மேலும் அனைத்து மாவட்டங்களிலும் ஆடு திருடும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. கடந்த 6 நாட்களில் திருச்சி மண்டலத்துக்கு உட்பட்ட திருச்சி, கரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஆடு திருட்டு வழக்கு சம்பந்தமாக மொத்தம் 12 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளது.
இதில் திருச்சி 3 ,கரூர் 1, புதுக்கோட்டை 8 என வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நான்கு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து சுமார் 3 லட்சம் மதிப்புள்ள 60-க்கும் மேற்பட்ட ஆடுகள் மீட்கப்பட்டு நீதிமன்றம் மூலம் உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டு குற்றவாளிகள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆடு திருடும் கும்பளை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.