ஆஸ்ட்ரியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று எண்ணிக்கை: நாடு முழுவதும் பொதுமுடக்கம் அறிவிப்பு

ஐரோப்பா முழுவதுமேகொரோனாதொற்று பரவல் அதிகரித்து வருகிறது. ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் புதிய தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. வேளாண் சட்டங்கள் வாபஸ் அறிவிப்பு: டெல்லி எல்லையில் விவசாயிகள் மகிழ்ச்சி

    விவசாயிகள் போராட்டம்

    பட மூலாதாரம், RAKESH TIKAIT

    படக்குறிப்பு, ராகேஷ் திகெய்த், பாரதிய கிசான் யூனியன் தலைவர்

    இந்தியா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என்று இன்று காணொளி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோதி வெளியிட்ட அறிவிப்புக்கு டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

    பிரதமரின் அறிவிப்பை அவர்கள் சக விவசாயிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடி வருகிறார்கள்.

    இதேவேளை, பிரதமரின் அறிவிப்பைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் சட்டத்தை திரும்பப் பெறுவதற்கான நடைமுறைகளை மத்திய அரசு நிறைவேற்றி முடிக்கும் வரை நாங்கள் காத்திருப்போம். என்று பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகெய்த் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    குறைந்தபட்ச ஆதார விலை விவகாரம் மட்டுமின்றி வேறு சில பிர்சனைகளும் உள்ளன. அவை தொடர்பாக மத்திய அரசு விவசாயிகள் தரப்புடன் பேச வேண்டும் என்று அவர் கூறினார்.

  2. இன்றைய நேரலைக்கு வரவேற்கிறோம்

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்,

    இன்றைய நேரலைப் பக்கத்தில் முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குவோர் எம் ஏ பரணிதரன், அ தா பாலசுப்ரமணியன், கெளதமன் முராரி.

    நேற்றைய நேரலைப் பக்கத்தைக் காண இங்கே சொடுக்கவும்