இந்தியா வரும் வெளிநாட்டினருக்கு அக்டோபர் 15 முதல் சுற்றுலா விசா: உள்துறை

சுற்றுலா விசா வழங்கப்பட்டாலும், விமான நிறுவனங்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக கொரோனா வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்க வேண்டும் என்று இந்திய உள்துறை தெரிவித்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. அக்டோபர் 7ஆம் தேதி நேரலை நிறைவடைகிறது

    வணக்கம் நேயர்களே,

    இத்துடன் இன்றைய நேரலையை நிறைவு செய்கிறோம்.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்புபக்கம் செல்லவும்.

    பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. வந்துகொண்டிருக்கும் செய்தி, வெளிநாட்டினர் சுற்றுலா விசாவில் இந்தியா வர அனுமதி: உள்துறை

    சுற்றுலா துறை

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, கோப்புப்படம்

    இந்தியாவுக்கு வர விரும்பும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு புதிய சுற்றுலா விசா வழங்குவதை மீண்டும் தொடங்குவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இந்த ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி முதல் புதிய சுற்றுலா விசாவில் வெளிநாட்டு பயணிகள் இந்தியாவுக்கு வர முடியும் என்று அமைச்சகம் கூறியுள்ளது

    இது தொடர்பாக இந்திய உள்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விமானங்களில் இருந்து வரும் வெளிநாட்டவர்கள் நவம்பர் 15 முதல் இந்தியாவுக்கு வர முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா பரவலைத் தடுக்க இந்திய சுகாதார அமைச்சகம் வழங்கிய அனைத்து வழிகாட்டுதல்களையும் விமான நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு பயணிகள் பின்பற்ற வேண்டும் என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    கொரோனா தொற்றுநோய் காரணமாக, கடந்த ஆண்டு வெளிநாட்டு பயணிகளுக்கு வழங்கப்பட்ட அனைத்து விசா அனுமதியையும் இந்தியா ரத்து செய்தது. மேலும், தொற்றுநோய் பலவலைத் தடுக்க சர்வதேச பயணங்களும் தடை செய்யப்பட்டன.

    விசா ரத்தானதால், இந்தியாவில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு அரசாங்கம் விசா வழங்கியது, ஆனால் சுற்றுலா விசா வழங்கலுக்கான தடையை நீட்டிக்க அரசாங்கம் முடிவு செய்திருந்தது. இந்த நிலையில், பல மாநில அரசுகள், பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் சுற்றுலா துறையின் பிரதிநிதிகளுடன் விவாதித்த பிறகு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு சுற்றுலா விசா வழங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

  3. இந்தியாவில் தடுப்பு மருந்தை கொண்டு செல்ல ட்ரோன்கள்

    கொரோனா தடுப்பு மருந்து செலுத்தும் இயக்கத்தில் ட்ரோன்களை பயன்படுத்த உள்ளதாக இந்தியாவின் மூத்த அரசு விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

    நாட்டின் வட கிழக்கு பகுதியில் உள்ள மலைப்பகுதியில் தடுப்பு மருந்தை கொண்டு செல்ல ட்ரோன்களை பயன்படுத்த இருப்பதாக விஞ்ஞானி சமிரன் பண்டா தெரிவித்துள்ளார்.

    2021ஆம் ஆண்டில் இறுதியில் இந்தியாவில் தடுப்பு மருந்து பெற தகுதியானவர்களுக்கு இரு டோஸ் தடுப்பு மருந்தும் வழங்கப்பட வேண்டும் என இலக்கு வைக்கப்பட்டுள்ளது .ஆனால் இந்த இலக்கை அடைய சீரான வேகத்தில் தடுப்பு மருந்து செலுத்தப்பட வேண்டும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    இந்தியாவில் இதுவரை மூன்று தடுப்பு மருந்துகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு 925 மில்லியன் டோஸ் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வ தகவல்படி நாட்டில் தடுப்பு மருந்து பெற தகுதியானவர்களில் 70 சதவீதம் பேருக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது.

    இந்தியாவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

    அதேபோல அமெரிக்கா மற்றும் ப்ரேசிலுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் அதிகம்பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். மணிப்பூரில் முதன்முதலாக ட்ரோன்கள் மூலம் தடுப்பு மருந்து கொண்டு செல்லும் முயற்சியை இந்தியா திங்களன்று மேற்கொண்டது.

  4. CSK vs PBKS:சென்னை அணிக்கு தொடர்ந்து 3வது தோல்வி

    சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான, நடப்பு ஐபிஎல் தொடரின் 53வது போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.

    இன்றைய தோல்வி சென்னை அணிக்கு தொடர்ச்சியாக மூன்றாவது தோல்வியாகும்.

    எனினும் ஏற்கனவே ப்ளே-ஆஃப் சுற்றுக்கு சென்னை அணி தகுதி பெற்று விட்டதால் இன்றைய தோல்வியால் தற்போதைக்கு சென்னை அணிக்கு எந்தப் பெரிய பாதிப்பும் இல்லை.

    https://bbc.com.im/tamil/sport-58831332

    பட மூலாதாரம், BCCI / IPL

    படக்குறிப்பு, https://bbc.com.im/tamil/sport-58831332%3C/span%3E%3C/span%3E%3C/figcaption%3E%3C/figure%3E%3C/div%3E%3C/article%3E%3C/li%3E%3Cli class="css-xxlek1">

    `காளிகாம்பாள் கோயிலை அண்ணாமலை தேர்வு செய்தது ஏன்?, ஆ. விஜயானந்த்

    பாஜக ஆர்ப்பாட்டம்
    கோயில் ஆர்ப்பாட்டம்

    தமிழ்நாட்டில் அனைத்து நாட்களிலும் கோயில்களைத் திறக்க வலியுறுத்தி, பா.ஜ.க சார்பில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், `போராடுவதற்கு வலுவான காரணங்கள் எதுவும் இல்லாததால் இப்படிப்பட்ட போராட்டத்தை அவர்களாகவே உருவாக்கிக் கொண்டனர்,' என்று தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

    கொரோனா இரண்டாம் அலை காரணமாக, தமிழ்நாட்டில் இறை வழிபாடு நடத்துவதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கோயில்கள், மசூதிகள், கிறிஸ்துவ தேவாலயங்களில் வார இறுதி நாள்களில் வழிபாடு நடத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

    அனைத்து நாள்களிலும் கோயில்களைத் திறக்க வலியுறுத்தி, பா.ஜ.க சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்குப் பதில் அளித்த தமிழ்நாடு அரசு, `மத்திய அரசின் வழிகாட்டுதலின்படிதான் அனுமதி அளிக்கப்படுகிறது' என தெரிவித்தது.

    இந்நிலையில், அனைத்து நாள்களிலும் கோவில்களைத் திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் பா.ஜ.கவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    குறிப்பாக, 12 திருக்கோவில்களின் முன்பாக இந்தப் போராட்டத்தை பா.ஜ.கவினர் நடத்தினர். சென்னை, பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள்கோயிலில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.

    இது தவிர, திருச்செந்தூர் முருகன் கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், பழநி தண்டாயுதபாணி திருக்கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம், தஞ்சை பெரிய கோயில், ராமநாதபுரம், ராமநாத சுவாமி ஆலயம், கோவை கோனியம்மன் ஆலயம், தில்லை நடராஜர் ஆலயம், நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம் எனப் பல பகுதிகளில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அண்ணாமலை, ``தமிழ்நாட்டில் திரையரங்குகளைத் திறந்த நிலையில், கோயில்களைத் திறக்க அனுமதி மறுக்கப்படுவது ஏன்? திரையரங்குகளில் மட்டும் கொரோனா பரவாதா? எங்களின் பூஜை அறைகளுக்குள் உங்களின் (தி.மு.க) சிந்தாந்தத்தைக்கொண்டு வர வேண்டாம். கொரோனாவை காரணம் காட்டி தடைவிதிக்கப்பட்டுள்ளதால் நாங்கள் வேறு வழியில்லாமல் போராட்டத்தில் இறங்கியுள்ளோம்" என்றார்.

    தொடர்ந்து பேசிய அண்ணாமலை, ``எப்போதுமே நாங்கள் நல்ல விஷயங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்போம். குறிப்பாக, பள்ளிகளைத் திறப்பதற்கு அரசு முடிவு செய்தபோது வரவேற்றோம். அதேநேரம், திரையரங்குகளைத் திறக்க முடிவு செய்தபோது எதிர்ப்பு தெரிவித்தோம். எங்களின் எதிர்ப்பையும்மீறி திரையரங்குகளைத் திறந்தார்கள்" என்றார். கோயிலை பூட்டுவதற்கு கொரோனா ஒரு காரணம் இல்லை.

    ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் தன்னிச்சையாக செயல்படுவோம் என்று கூறிய தி.மு.க, தற்போது மத்திய அரசின் வழிகாட்டலின்படி கோயில்களை மூடுவதாக தெரிவித்துள்ள கருத்தில் உண்மையில்லை. கடவுள் இல்லை என்பதுதான் தி.மு.கவின் சித்தாந்தம். ஆகவேதான், கோயில்களுக்குத் தடை போடுகிறார்கள்.நாங்கள் தமிழக அரசுக்கு பத்து நாள்கள் அவகாசம் தருகிறோம். அதற்குள் கோயில்களைத் திறப்பது தொடர்பாக நல்ல முடிவை எடுக்க வேண்டும்" என்றார்.

    பா.ஜ.கவின் போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ``போராடுவதற்கு வலுவான காரணங்கள் எதுவும் இல்லாததால் இப்படிப்பட்ட போராட்டத்தை அவர்களாகவே உருவாக்கிக் கொண்டனர். இந்து சமய அறநிலையத்துறையை பொறுத்தவரையில்மத்திய அரசின் வழிகாட்டுதலின்படிதான், கொரோனா நோய்த் தொற்று தளர்வுகளை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறோம். மத்திய அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கை என்னவென்றால், `அதிகமாகக் கூட்டம் கூடுகிற நிலையைத் தவிர்க்க வேண்டும், திருவிழாக்களை அனுமதிப்பது தொடர்பாக மாநில அரசுமுடிவு செய்ய வேண்டும்' என தெரிவித்துள்ளது.

    சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் கோவில்களுக்கு பக்தர்கள் அதிகமாக வரக் கூடிய சூழல் உள்ளது. வெள்ளி, சனி, ஞாயிறு தவிர மற்ற நான்கு நாள்களில் திருக்கோயில்கள் முழுமையாக திறந்துள்ளன. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் கோவில்கள் மூடப்பட்டிருந்தாலும் தெய்வத்துக்கு வேண்டிய அனைத்து பூஜைகளும் எப்போதும்போல நடந்து வருகின்றன. கொரோனா அபாயம் நம்மைவிட்டு நீங்கியவுடன் திருக்கோயில்களை முதல் பணியாக முதலமைச்சர் திறந்து வைப்பார்" என்றார்.

    தொடர்ந்து பேசிய சேகர்பாபு, `` பா.ஜ.க நடத்தும் போராட்டத்தை உற்று நோக்கினால், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாள்களில் எதாவது ஒரு நாளை போராட்டத்துக்கு உகந்த நாளாக அவர்கள் தேர்வு செய்திருக்கலாம். ஆனால், இன்றைக்கு காளிகாம்பாள் கோயிலுக்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள்வந்து செல்வார்கள். இவர்களின் இன்றைய போராட்டத்தால் அந்தக் கோயிலில் வழிபாடு என்பது 3 நாள்களாகக் குறைந்துவிட்டது.

    போராடுகிறவர்கள், கண்மூடித்தனமாக காரணங்களை உருவாக்கிக் கொண்டு போராடுகிறார்களே தவிர, கொரோனா நோய்த் தொற்றில் விலைமதிக்க முடியாத உயிர்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்ற நோக்கத்தை அவர்கள் உணர்ந்திருக்க வேண்டும். எம்மதமும் சம்மதமே என்பதுதான் முதல்வரின் கோட்பாடு.கொரோனா தொற்று முடிவுக்கு வந்ததும் வழிபாட்டுத் தலங்களைத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என்கிறார்.

    கோயில் ஆர்ப்பாட்டம்
  5. கடத்தல் கும்பலுக்கும் சீமானுக்கு தொடர்பா? - என்.ஐ.ஏ விசாரணை

    என்.ஐ.ஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழர் சற்குணன் விவகாரத்தில் சீமானின் தொடர்பு குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

    `சற்குணன் மூலமாக சீமானுக்கு பெரும் நிதி வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன,' என்கிறார் கே.எஸ்.அழகிரி.

    லட்சத்தீவின் மினிக்காய் (Minicoy) கடற்கரையில் கடந்த மார்ச் மாதம் ஏ.கே 47 துப்பாக்கிகள், 1000 கிலோ தோட்டாக்கள், 300 கிலோ ஹெராயின் போதைப் பொருள் ஆகியவற்றை கடலோர காவல்படை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக நடந்த விசாரணையின் முடிவில் இலங்கையைச் சேர்ந்த 6 பேர் மீது தேசிய புலனாய்வு முகமையின் அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர்.

    naam tamilar seeman

    பட மூலாதாரம், naam tamilar

  6. பாஜக புதிய தேசிய நிர்வாகிகள்

    பாஜகவின் புதிய தேசிய பொறுப்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    13 துணைத் தலைவர்கள், ஐந்து பொதுச் செயலர்கள் உள்ளிட்டோரின் பெயர்கள் வெளியாகியுள்ளன.

    80 பேரைக் கொண்டுள்ள தேசிய செயற்குழு உறுப்பினர்கள் பட்டியலை பாரதிய ஜனதா கட்சி அறிவித்துள்ளது.

    பிரதமர் நரேந்திர மோதி, மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, பியூஸ் கோயல் உள்ளிட்டவர்கள் இதில் இடம் பெற்றுள்ளனர்.

    தமிழ்நாட்டில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பெயர் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  7. விவசாயிகள் மீது மோதிய பாஜக எம்.பி கார்

    உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் பாஜக அமைச்சரின் மகன் கார் மோதியதில் நான்கு விவசாயிகள் இறந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில் ஹரியாணாவில் பாஜக எம்.பியின் கார் மோதி விவசாயி ஒருவர் காயமடைந்துள்ளார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    அம்பாலா அருகே நரைன்கார்க் எனும் இடத்தில் பாஜக எம்.பி நாயப் சைனியின் கார் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகள் மீது மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காயமடைந்த விவசாயி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    கார் உரிமையாளரான சைனி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று போராடும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

  8. 101 வயது நாஜி படை காவலர் மீது விசாரணை

    இரண்டாம் உலகப்போர் முடிந்த 76 ஆண்டுகளுக்குப் பிறகு நாஜி வதை முகாம் ஒன்றின் காவலராக இருந்த ஒருவர் 3,518 பேரை கொலை செய்ய உதவியதற்காக விசாரணையை எதிர்கொண்டுள்ளார்.

    ஜெர்மனி தலைநகர் பெர்லின் அருகே உள்ள இரண்டாம் உலகப் போரின்போது சாக்சென்ஹாசன் வதை முகாமில் 2 லட்சத்துக்கும் மேலானவர்களை அடைத்து வைத்திருந்தனர். சாக்சென்ஹாசன் வதை முகாமில் இவர் பணியாற்றியுள்ளார்.

    சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த கைதிகளை சுட்டுக் கொல்லவும் பிறரை சைக்லான் - பி (Zyklon B) நச்சுக் காற்றை செலுத்திக் கொல்லவும் ஜோசஃப் எஸ் எனும் அந்த நபர் உடந்தையாக இருந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    Nazi guard trial

    பட மூலாதாரம், Getty Images

  9. 'ஆர்யன் கான் கைதான கப்பலில் பாஜக பிரமுகர் இருந்தது ஏன்?'

    இந்தி நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதில் பாரதிய ஜனதா கட்சியால் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பான நார்கோடிக்ஸ் கன்ட்ரோல் பீரோ (என்.சி.பி) தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மஹாராஷ்டிர அமைச்சருமான நவாப் மலிக் குற்றம்சாட்டியுள்ளார்.

    "மும்பை கடற்கரையோரம் சொகுசுக் கப்பலில் கைது செய்யப்பட்டவர்கள், நார்கோடிக்ஸ் கன்ட்ரோல் பீரோ அலுவலத்துக்கு அழைத்துச் செல்லப்படுவதைக் காட்டும் காணொளியில், ஆர்யன் கானுடன் அலுவலகத்துக்குள் அழைத்துச் செல்பவரின் பெயர் கே.பி. கோஸ்வாமி. அவர் ஒரு தனியார் டிடெக்டிவ். பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மணீஷ் பானுஷாலியும் அந்தக் காணொளியில் உள்ளார்," என்று நவாப் மலிக் கூறியுள்ளார்.

    ஆர்யன் கான்

    பட மூலாதாரம், ani

  10. ஆப்பிரிக்க குழந்தைகளுக்கு மலேரியா தடுப்பூசி போட அனுமதி

    ஒரு நூற்றாண்டு ஆய்வுகள், போராட்டங்களுக்குப் பிறகு முதல் முறையாக ஆப்பிரிக்க குழந்தைகளுக்கு மலேரியாவுக்கான தடுப்பூசி போட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

    ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக குழந்தைகளையும் சிசுக்களையும் கொல்லும், மனித குலத்தை அச்சுறுத்தும் நோயாக மலேரியா இருந்து வருகிறது. நூறு ஆண்டுகால ஆராய்ச்சிகளுக்குப் பிறகு மலேரியாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்திருப்பது மருத்துவ உலகின் குறிப்பிடத் தகுந்த சாதனையாகும்.

    RTS, S என்று அழைக்கப்படும் இந்தத் தடுப்பூசி மலேரியாவுக்கு எதிராகச் சிறப்பாகச் செயல்படுவதாக ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நிரூபிக்கப்பட்டது. ​​

    கானா, கென்யா மற்றும் மலாவி ஆகிய நாடுகளில் முன்னோட்டத் நோய்த்தடுப்புத் திட்டங்களின் வெற்றிக்குப் பிறகு, இப்போது மலேரியா அதிகமாகப் பரவும் சஹாராவுக்கு கீழே இருக்கும் ஆப்பிரிக்க நாடுகளிலும் தடுப்பூசி போட வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. “இது ஒரு வரலாற்றுத் தருணம்” என்று உலக சுகாதார நிறுவனத்தின் டெட்ரோஸ் அதனோம் கூறியுள்ளார்.

    Historic go-ahead for malaria vaccine to protect African children

    பட மூலாதாரம், CRISTINA ALDEHUELA

  11. பாகிஸ்தானில் நிலநடுக்கம்: 20 பேர் உயிரிழப்பு, ஏராளமானோர் காயம்

    நிலநடுக்கம்

    பட மூலாதாரம், YAZDANI TAREEN

    பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 20 பேர் உயிரிழந்தனர். 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    உயிரிழந்தவர்களில் 5 பேர் குழந்தைகள் என்பதும் தெரியவந்திருக்கிறது.

    பலுசிஸ்தானின் ஹர்னய் பகுதியை மையமாகக் கொண்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.9 அளவாகப் பதிவாகி இருக்கிறது.

    குவெட்டா நகரின் கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் ஹர்னயில், ஏராளமான நிலக்கரிச் சுரங்கங்கள் இருக்கின்றன.

    இது தொடர்பாக பிபிசியிடம் பேசிய பலுசிஸ்தான் உள்துறை அமைச்சர், ஹர்னய் பகுதியில் பெருத்த சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் அவசரகால மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

  12. நேரலைக்கு வரவேற்கிறோம்!

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய நேரலைப் பக்கத்தில் முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குபவர்கள் எம் ஏ பரணிதரன், விக்னேஷ் கெளதமன் முராரி, எம். மணிகண்டன்.நேற்றைய நேரலைப் பக்கத்தைக் காணஇங்கே சொடுக்கவும்