CSK vs PBKS IPL 2021:சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர்ந்து 3வது தோல்வி; பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் கே.எல். ராகுல் சதத்தை தவறவிட்டார்

பட மூலாதாரம், BCCI / IPL
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான, நடப்பு ஐபிஎல் தொடரின் 53வது போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.
இன்றைய தோல்வி சென்னை அணிக்கு தொடர்ச்சியாக மூன்றாவது தோல்வியாகும்.
எனினும் ஏற்கனவே ப்ளே-ஆஃப் சுற்றுக்கு சென்னை அணி தகுதி பெற்று விட்டதால் இன்றைய தோல்வியால் தற்போதைக்கு சென்னை அணிக்கு எந்தப் பெரிய பாதிப்பும் இல்லை.
துபாயில் இன்று நடந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது.
சென்னையின் தொடக்க வீட்டுக்கா ஆட்டக்காரர் டூப்ளெஸ்ஸிஸ் அதிரடியாக விளையாடி 55 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தார்.
இன்னொரு தொடக்க ஆட்டக்காரரான ருதுராஜ் கெய்க்வாட் 14 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக வந்த மொயின் அலி டக் அவுட் ஆனார். ராபின் உத்தப்பா மற்றும் அம்பட்டி ராயுடுஆகியோர் இரண்டு மற்றும் நான்கு ரன்களில் ஆட்டமிழந்தனர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் மகேந்திர சிங் தோனி 15 பந்துகளில் இரண்டு பவுண்டரிகளுடன் 12 ரன்கள் எடுத்தார்.
தோனிக்கு பின்பு வந்தவர்களும் பெரிதாக ஒன்றும் ரன்கள் எடுக்காத நிலையில் 20 ஓவர் முடிவில் சென்னை அணி ஆறு விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பட மூலாதாரம், BCCI / IPL
பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சாளர்கள் அர்ஷ்தீப் சிங் மற்றும் க்ரிஸ் ஜோர்டான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று சேசிங்கை தொடங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி ஓவர்களிலேயே இலக்கை எட்டியது.
அந்த அணியின் கேப்டன் கே.எல். ராகுல் தொடக்க வீரராக களமிறங்கி 42 பந்துகளில் 98 ரன்கள் எடுத்தார். அவர் கடைசிவரை ஆட்டமிழக்கவில்லை. பந்துகள் எஞ்சியிருந்தும் இலக்கை எட்டிவிட்டதால் கே.எல். ராகுல் சதத்தை தவறவிட்டார்.
இன்னொரு தொடக்க வீரரான மயங்க் அகர்வால் 12 பந்துகளில் 12 ரன்கள் எடுத்தார்.
சர்பராஸ் கான் டக் அவுட் ஆக, ஷாருக் கான் 10 பந்துகளில் எட்டு ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியாக 13 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 139 ரன்கள் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி.
சென்னை அணியின் ஷர்துல் தாக்கூர் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்































