அமெரிக்க தேர்தல் முடிவுகள்: "வாக்கு எண்ணிக்கையை நிறுத்துங்கள்" – அதிபர் டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இன்னும் முழுமையாக வெளியாகாத சூழலில் சில நகரங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. வெற்றியை முடிவு செய்ய இயலாத நிலையில் அங்கு பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

அரிசோனாவில் இன்று முடிவுகள் வர வாய்ப்பில்லை

அரிசோனா மாகாண வாக்குப்பதிவு எண்ணிக்கை தொடர்பான சமீபத்திய தகவல் இது. அங்குள்ள மாரிகோப்பா பகுதி தேர்தல் துறை அலுவலர் மேகன் கில்பெர்ட்சன், இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கவில்லை என தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலவரப்படி, 11 தேர்தல் சபை வாக்குகள் கொண்ட அரிசோனாவில் பைடன் 51 சதவீதமும் டிரம்ப் 48 சதவீதமும் வாக்ககுளை பெற்றிருப்பதாக அறிய முடிகிறது. இதை வைத்து இங்கு பைடனுக்கு வெற்றி வாய்ப்பு உறுதியாகி விட்டதாக சில அமெரிக்க ஊடகங்கள் கணிக்கின்றன.