அமெரிக்க தேர்தல் முடிவுகள்: "வாக்கு எண்ணிக்கையை நிறுத்துங்கள்" – அதிபர் டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இன்னும் முழுமையாக வெளியாகாத சூழலில் சில நகரங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. வெற்றியை முடிவு செய்ய இயலாத நிலையில் அங்கு பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நன்றி நேயர்களே!

    அமெரிக்க தேர்தல் முடிவுகள் குறித்த இன்றைய நேரலை இத்துடன் நிறைவடைகிறது. மீண்டும் நாளை காலை 6 மணி அளவில் நேரலை தொடரும்.

    தேர்தல் முடிவுகள் குறித்த மேலதிக தகவல்களுக்கு பிபிசி தமிழுடன் இணைந்திருங்கள்.

  2. “என்ன முடிவு வந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும்”

    அமெரிக்க தேர்தலில் “அனைத்து வாக்குகளும் செல்லும், அப்படியென்றால் அனைத்து வாக்குகளும் எண்ணப்படுவது அவசியம்” என்று ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரும் மற்றும் வெளி விவகாரங்கள் துறை கமிட்டியின் தலைவருமான டேவிட் மெக் ஆலிஸ்டர் வலியுறுத்தி உள்ளார்.

    மேலும் பிரச்சனைகள் வராமல் இருக்க, தேர்தல் நடைமுறைகள் முடிந்து முடிவு என்னவாக இருந்தாலும், அதை அனைத்து கட்சிகளும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    அதிபர் டிரம்ப் வாக்கு எண்ணிக்கைகளை நிறுத்த சொல்வது, இதற்கு முன் நிகழ்ந்திராத சம்பவம் என்று மெக் ஆலிஸ்டர் குறிப்பிட்டுள்ளார்.

    “அமெரிக்க மக்களின் வாக்களிக்கும் உரிமையை தடுக்க முடியாது. தேர்தல் நடந்து கொண்டிருக்கும்போதே நீங்கள்தான் வெற்றியாளர் என அறிவித்துக் கொள்ள முடியாது. இதற்கு முன் இப்படி நிகழ்ந்தது இல்லை” என்றும் அவர் தெரிவித்தார்.

  3. வந்துகொண்டிருக்கும் செய்தி, வாக்கு எண்ணிக்கையை நிறுத்துங்கள் – அதிபர் டொனால்ட் டிரம்ப்

    வாக்கு எண்ணிக்கையை நிறுத்துங்கள் – அதிபர் டொனால்ட் டிரம்ப்

    பட மூலாதாரம், EPA

    அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் நெருங்கும் சமையத்தில், “வாக்கு எண்ணிக்கையை நிறுத்துமாறு” அதிபர் டிரம்ப் ட்வீட் செய்துள்ளார்.

    முன்னதாக புதன்கிழமை அன்று வெள்ளை மாளிகையில் பேசிய அவர், “அமெரிக்க மக்கள் மீது நடத்தப்படும் மோசடி இது” என்று இந்த தேர்தலை குறிப்பிட்டார்.

    அமைப்பு ரீதியிலான மோசடிக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றாலும் வாக்களிப்பதையும் நிறுத்துமாறு டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.

    பல மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்துமாறு டிரம்ப் தரப்பு சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

    நெவாடாவில் வசிக்காதவர்களின் சுமார் 10,000 வாக்குகள் பதிவாகியுள்ளதாக கூறி, குடியரசுக்கட்சியினர் வழக்கு தொடரப் போவதாக அறிவித்துள்ளனர்.

    அதிகளவில் அஞ்சல் வாக்குகள் அனுப்பப்பட்ட மாகாணங்களில் நெவாடாவும் ஒன்று. இதில் மோசடி நடைபெற வாய்ப்பிருப்பதாக பிரசாரம் செய்யும்போதே அதிபர் டிரம்ப் பேசினார்.

    மோசடி நடைபெற்றது என பல முறை டிரம்ப் கூறினாலும் , அதற்கான எந்த ஆதாரமும் இதுவரை இல்லை. வாக்கு எண்ணிக்கையை எதிர்த்து குடியரசுக்கட்சியினர் வழக்கு தொடரும் நான்காவது மாகாணம் நெவாடா. அடுத்து விஸ்கான்சினிலும் வழக்கு தொடர அவர்கள் ஆலோசித்து வருகின்றனர்.

  4. 'டிரம்ப்தான் வெற்றி பெறுவார்'- ஜோசியக் கணிப்பை ட்விட்டரில் பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா

    அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனை தோற்கடித்துவிட்டு டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறுவார் என ஜோசியத்தில் கணிக்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் முக்கிய தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளது சமூக ஊடகங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

    அதில் பைடனுக்கும் டிரம்புக்கும் கடுமையான போட்டி நிலவும் என்றும் ஆனால் இறுதியில் டிரம்பே வெற்றி பெறுவார் என ஜோசியத்தில் கணிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

    இதனை சுமார் 7000க்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் ரீட்வீட் செய்துள்ளனர்.

    அதாவது டிரம்பின் ராசி மற்றும் சூரியன் இருக்கும் இடம் ஆகியவற்றை வைத்து அந்த ஜோசியர் இதனை கணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அந்த ஜோசியர் யார் என்பதை மஹிந்திரா வெளியிடவில்லை.

    ஆனால், அவர் கூறியது உண்மையாக இருந்தால், அவரின் புகழ் உயரும் என்பதில் சந்தேகமில்லை. டிரம்ப்தான் வெற்றி பெறுவார் என்று வேறு சில ஜோசியர்களும் கணித்துள்ளதையும் பல ட்விட்டர் பயனாளிகள் பகிர்ந்தனர்.

    இந்தியாவில் ஒரு முக்கிய விஷயத்திற்கு ஜோசியம் பார்க்கும் வழக்கம் மிகவும் பிரபலமான ஒன்று. பிரதமர் நரேந்திர மோதி உள்ளிட்ட பல பிரபல அரசியல்வாதிகளும் இதனை நம்புகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  5. அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் சமன் ஆனால் என்னாகும்?

    அமெரிக்க அதிபர்கள் வாக்காளர்களால் நேரடியாகத் தேர்வு செய்யப்படுவதில்லை. அவர்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் அந்தந்த மாகாணங்கள் ஒரு கட்சிக்கு செல்லும்.

    ஒரு மாகாணத்தில் வென்ற கட்சி, அந்த மாகாணத்துக்கான தேர்தல் சபை உறுப்பினர்களை நியமிக்கும். இந்தத் தேர்தல் சபை உறுப்பினர்களே அதிபரைத் தேர்வு செய்வார்கள்.

    அமெரிக்க அதிபர் பதவிக்கு வர மொத்தமுள்ள 538 தேர்தல் சபை உறுப்பினர்களில், 270 அல்லது அதற்கு மேற்பட்ட தேர்தல் சபை உறுப்பினர்களைப் பெற வேண்டும்.

    ஒவ்வொரு அமெரிக்க மாகாணத்துக்கும் அதன் மக்கள் தொகை அடிப்படையில் தேர்தல் சபை உறுப்பினர்கள் உள்ளனர்.

    இரண்டு வேட்பாளர்களும் 269 வாக்குகள் பெற்றால் சமநிலை உண்டாகும். இதற்கு வாய்ப்பு அதிகம் இல்லை என்றாலும், இப்படி நடந்தால் அதிபர் எப்படி தேர்வு செய்யப்படுவார்?

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  6. நெவாடாவில் வாக்காளர் மோசடி நடந்ததாக வழக்கு தொடரவுள்ள குடியரசுக்கட்சி

    நெவாடாவில் வாக்காளர் மோசடி நடந்ததாக வழக்கு தொடரவுள்ள குடியரசுக்கட்சி

    பட மூலாதாரம், Getty Images

    நெவாடாவில் வசிக்காத சுமார் 10,000 வாக்குகள் பதிவாகியுள்ளதாக கூறி, குடியரசுக்கட்சியினர் வழக்கு தொடரப் போவதாக அறிவித்துள்ளனர்.

    அதிகளவில் அஞ்சல் வாக்குகள் அனுப்பப்பட்ட மாகாணங்களில் நெவாடாவும் ஒன்று. இதில் மோசடி நடைபெற வாய்ப்பிருப்பதாக பிரசாரம் செய்யும்போதே அதிபர் டிரம்ப் பேசினார்.

    மோசடி நடைபெற்றது என பல முறை டிரம்ப் கூறினாலும் , அதற்கான எந்த ஆதாரமும் இதுவரை இல்லை. வாக்கு எண்ணிக்கையை எதிர்த்து குடியரசுக்கட்சியினர் வழக்கு தொடரும் நான்காவது மாகாணம் நெவாடா. அடுத்து விஸ்கான்சினிலும் வழக்கு தொடர அவர்கள் ஆலோசித்து வருகின்றனர்.

  7. ஜோர்ஜாவில் விரைவில் முடிவுகள்…

    ஜோர்ஜாவில் விரைவில் முடிவுகள்…

    பட மூலாதாரம், Getty Images

    இன்னும் சுமார் 50,000 வாக்குச்சீட்டுகள் எண்ணப்பட வேண்டி இருப்பதாக ஜோர்ஜாவின் மூத்த தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    அந்த மாகாணத்தில் மணிக்கு 3000 வாக்குச்சீட்டுகள் எண்ணப்படுவதாக அமெரிக்க ஊடகங்கள் கணக்கிட்டுள்ளன. அப்படி பார்த்தால் இன்னும் 16 மணி நேரத்தில் அந்த மாகாண முடிவுகள் தெரிய வந்துவிடும்.

    எனினும், ஒருவர் பெரும்பாலான வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார் என்றால், யார் வெற்றியாளர்கள் என்பதை முன்பே கணித்துவிட முடியும்.

  8. நியூயார்க் வாக்குப்பதிவு நடந்த இடத்தில் கொரோனா பரவல்

    நியூயார்க் வாக்குப்பதிவு நடந்த இடத்தில் கொரோனா பரவல்

    பட மூலாதாரம், EPA

    நியூயார்க்கின் லாங் ஐலாந்தில் உள்ள சௌதாம்படனில் வாக்குச்சாவடியில் பணியாற்றிய குறைந்தது 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

    இதனால் டஜன் கணக்கானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    இதில் ஆறு வாக்குச்சாவடி பணியாளர்களும் அடங்குவர்.

    அமெரிக்காவில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு புதன்கிழமை அன்று மட்டும் முதல்முறையாக 1 லட்சம் பேருக்கு கொரோனா இருப்பது பதிவானது.

  9. தேர்தல் முடிவுகள் ஏன் இன்னும் தெரியவில்லை?

    அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்து நீண்ட நேரமாகிவிட்டது. அமெரிக்கத் தேர்தல்களில் முடிவுகள் உடனடியாகத் தெரியத் தொடங்கிவிடும்.

    இதற்கு மாறாக, வெள்ளை மாளிகையை மீண்டும் பிடிக்கப் போவது அதிபரும் குடியரசுக் கட்சி வேட்பாளருமான டிரம்பா, இல்லை ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனா என்பது இன்னும் தெளிவாகவில்லை. ஏன் இப்படி?

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  10. உண்மையில் அமெரிக்க தேர்தல் மிகுந்த குழப்பம் மிக்கதாக இருக்கிறதா?

    உண்மையில் அமெரிக்க தேர்தல் மிகுந்த குழப்பம் மிக்கதாக இருக்கிறதா?

    பட மூலாதாரம், EPA

    பல்வேறு உலக நாடுகளும் அமெரிக்க தேர்தல் குழப்பம் மிகுந்ததாக இருப்பதாகவும், வன்முறை வெடிப்பதற்கான அச்சுறுத்தல் இருப்பதாகவும் செய்திகள் வெளியிடுகின்றன.

    அமெரிக்காவில் சில பகுதிகளில் போராட்டங்கள் நடைபெறுவது உண்மைதான். சில மோதல்களும் கைது சம்பவங்களும் பதிவாகியுள்ளன. ஆனால், அந்த போராட்டங்கள் சிறிய அளவிலும், அமைதியான நிலையிலுமே நடக்கின்றன.

    இந்தாண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக அஞ்சல் வாக்குகள் அதிகம் இருப்பதால், தேர்தல் முடிவுகளில் தாமதல் ஏற்பட்டுள்ளது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

    இன்னும் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெறும் மாகாணங்களில், திட்டமிட்டப்படி அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

  11. முக்கிய மாகாணங்களில் என்ன நிலை?

    முக்கிய மாகாணங்களில் என்ன நிலை?

    பட மூலாதாரம், EPA

    தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்ள இன்னும் ஒரு சில மாகாணங்களே மீதம் இருக்கின்றன.

    மொத்தம் உள்ள 538 தேர்தல் சபை வாக்குகளில் 270 எடுத்தால் வெற்றி. தற்போதைய நிலவரப்படி பைடன் 243, டிரம்ப் 214 என்ற நிலை இருக்கிறது.

    அரிசோனா, ஜோர்ஜா, நெவாடா, பெனிசில்வேனியா, நார்த் கரோலினா மற்றும் விஸ்கான்சின் ஆகிய மாகாணங்களே மீதம் இருக்கின்றன.

    இங்கு வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    ஜோர்ஜா: இரவு முழுவதும் வாக்குகள் தொடர்ந்து எண்ணப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். அங்கு டிரம்ப் வெற்றி பெறும் வாய்ப்பு குறைந்து வருவதாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

    நெவாடா: இங்கு இரு வேட்பாளர்களிடேயே கடுமையான போட்டி நிலவுகிறது. வெறும் 8,000 வாக்கு வித்தியாசத்தில் தற்போது அங்கு பைடன் முன்னிலையில் உள்ளார். உள்ளூர் நேரம் காலை 9 மணி அளவில் அடுத்த கட்ட முடிவுகள் வரும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    பெனிசில்வேனியா: டிரம்பின் முன்னிலை விகிதம் இங்கு குறைந்துள்ளது. சுமார் 90 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுவிட்டது. 1,64,414 வாக்குகள் வித்தியாசத்தில் டிரம்ப் முன்னிலை வகிக்கிறார்.

    அரிசோனா: சுமார் 80,000 வாக்கு வித்தியாசத்தில் பைடன் முன்னிலை வகிக்கிறார். மேலும் முடிவுகள் இனிதான் தெரியவரும்

    நார்த் கரோலினா: பெரும்பாலான வாக்குகள் எண்ணப்பட்டு விட்டன. சுமார் 77,000 வாக்குகள் வித்தியாசத்தில் டிரம்ப் முன்னிலையில் உள்ளார்.

    விஸ்கான்சினில் யார் வெற்றி என்று இன்னும் தெரியவில்லை. அங்கு 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஜோ பைடன் முன்னிலை வகிக்கிறார். ஆனால், அந்த மாகாணத்தை பைடன் கைப்பற்றிவிட்டதாக சில செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

  12. தேர்தல் முடிவுக்கு முன்பே உயரும் பங்குச் சந்தைகள்

    கடந்த பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு, அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்த அடுத்த நாளே, அமெரிக்க பங்குச் சந்தைகள் நல்ல ஏற்றம் கண்டு இருக்கின்றன.

    போட்டி மிகவும் நெருக்கமாக இருப்பதால், தொழில் துறையில் பெரிய மாற்றங்கள் வருவதற்கான வாய்ப்பு குறைந்து இருக்கிறது.

    எனவே முதலீட்டாளர்கள், அமெரிக்க அதிபர் தேர்தலை கவனத்தில் எடுத்துக் கொண்டும் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்து இருக்கிறார்கள். பங்குகள் விலை ஏற்றம் கண்டு இருக்கின்றன.

  13. தேர்தல் முடிவை உச்ச நீதிமன்றத்தால் மாற்ற முடியுமா?

    அமெரிக்க தேர்தல் முடிவை எதிர்த்து அதிபர் டொனால்ட் டிரம்ப் நீதிமன்றம் சென்றால் தேர்தல் முடிவை உச்ச நீதிமன்றத்தால் மாற்ற முடியுமா? சட்ட நிபுணர் சொல்வது என்ன?

  14. அரிசோனா மாகாணத்தில் முன்னிலை வகிக்கும் பைடன்

    அரிசோனா

    பட மூலாதாரம், Reuters

    அரிசோனா மாகாணத்தில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன், முன்னிலை வகிப்பதாக சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.

    அந்த மாகாணத்தின் மக்கள் தொகை அதிகமுள்ள மரிகோபா கவுண்டியில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

    அந்த கவுண்டியில் டொனால்டு டிரம்பை விட, ஜோ பைடன் 74,514 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இதற்கு முந்தைய சுற்றுடன் சுமார் 11 ஆயிரம் வாக்குகள் குறைவே.

    தற்போது அரிசோனா மாகாணத்தில் சுமார் 68,000 வாக்குகள் வித்தியாசத்தில் பைடன் முன்னிலை வகிக்கிறார்.

    ஆனால், அரிசோனாவில் பைடன் வெற்றி பெற்றதாக கூறுவது முன்கூட்டியே எடுக்கப்படும் முடிவு என்று பிபிசி கருதுகிறது. எனினும் ஏபி செய்தி நிறுவனம் போன்ற மற்ற ஊடகங்கள் அரிசோனாவில் ஜனநாயக கட்சியினர் வெற்றி பெற்றதாக ப்ரொஜெட் செய்துள்ளனர்.

    இரவு முழுக்க மரிகோபா கவுண்டியில் வாக்குகள் எண்ணப்பட, குடியரசுக்கட்சியை சேர்ந்து சுமார் 200 பேர் அங்கு திரண்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

    டொனால்ட் டிரம்பின் வாக்குகள் எண்ணப்பட மாட்டாது என்று சமூக ஊடகங்களில் ஆதாரமில்லாமல் பரவிய செய்திகளுக்கு அவர்கள் எதிர்வினையாற்றினர்.

  15. அமெரிக்க தேர்தலை இந்த உலகம் எப்படி பார்க்கிறது?

    அமெரிக்க அதிபர் தேர்தலை இந்த உலகம் எப்படி பார்க்கிறது?

    பல்வேறு நாட்டின் ஊடகங்களும் அமெரிக்க தேர்தல் குழப்பம் மிகுந்ததாகவும், வன்முறை நடக்கும் அச்சுறுத்தல் இருப்பதாகவும் கூறியே செய்திகளை வெளியிடுகின்றன.

    லாஸ் ஏஞ்சலஸ், சியாடில், மற்றும் மினியபோலீஸில் நடந்த மோதல்கள் குறித்தும், போராட்டங்கள் குறித்தும் இரானின் அரசு வானொலி செய்தி வெளியிட்டது.

    “வன்முறை, துப்பாக்கிகள். இது வளர்ச்சி பெறாத அல்லது வளரும் நாடுகளில் தேர்தல் நடக்கும்போது நிகழும் நிகழ்வுகள் ஆகும். சுதந்திரமான நாட்டில், அதாவது அமெரிக்க தேர்தலில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழும் என்று நாம் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டோம்” என சீனாவில் கிளோபல் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

    நியூயார்க் மற்றும் பிற நகரங்களில் நடந்த போராட்டங்கள் மற்றும் போராட்டக்காரர்கள் – போலீஸார் இடையே நடந்த மோதல் காட்சிகளை ரஷ்ய ஊடகங்கள் ஒளிபரப்பின.

    கென்ய செய்தித்தாளில் “அமெரிக்காவின் அவமானம்” என்ற பெயரில் தலைப்புச் செய்தி வெளியானது.

    அமெரிக்க தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் “மிகுந்த குழப்பம்” நிலவுவதாக துருக்கி ஊடகங்கள் சுட்டிக்காட்டின.

    “ரிச்சர்ட் நிக்ஸன் ராஜினாமாவுக்கு பிறகு அமெரிக்கா மிகப்பெரிய அரசியல் மற்றும் நிர்வாக குழப்பத்தில் இருப்பதாக” ஸ்பெயின் நாட்டின் எல் முண்டோ செய்தி வெளியிட்டுள்ளது.

    தென் ஆப்பிரிக்க செய்தித்தளமான டெய்லி மேவ்ரிக் அமெரிக்க தேர்தல் தொடர்பாக கார்டூன் ஒன்றை வெளியிட்டுள்ளது.

    அதில் சுதந்திர தேவி சிலையின் கழுத்தில் டொனால்ட் டிரம்ப் கத்தி வைத்திருப்பது போன்று சித்தரிக்கப்பட்டிருந்தது.

    டொனால்ட் டிரம்பின் போட்டியாளரான ஜோ பைடன் தேர்தலில் முன்னிலை வகிப்பதாகவும் சில ஊடக செய்திகள் கூறுகின்றன.

    “டிரம்பின் வெற்றி தாலிபனின் வெற்றியா? பைடனின் வெற்றி, ஆப்கானிஸ்தானில் குடியரசு தொடரும் என்பதற்கான அறிகுறியா?” என ஆப்கானிஸ்தானின் ராஹே மடனேயட் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.

  16. டிரம்ப், பைடன் போட்டி குறித்து அமெரிக்க தமிழர்கள் என்ன சொல்கிறார்கள்?

    அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாக வழக்கமான நேரத்தைவிடக் கூடுதல் நேரம் ஆகியுள்ளது. கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக அங்கு தபால் வாக்குகள் அதிக அளவில் பதிவாகியுள்ளது அதற்கு காரணம் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    முடிவுகளில் ஜனநாயக கட்சியின் வேட்பாளரும் முன்னாள் துணை அதிபருமான ஜோ பைடன் டிரம்பைவிட சற்று முன்னிலை பெற்றுள்ளார்.

    பல இடங்களில் வாக்குப்பதிவை நிறுத்தக்கோரியும், முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் கூறி டிரம்ப் தரப்பு நீதிமன்றத்தை நாடியுள்ளது.

    தெளிவான முடிவுகள் இன்னும் வெளியாகாத சூழலில், இது குறித்து அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்கள் சிலரிடம் பேசியது பிபிசி தமிழ்.

    அமெரிக்க தமிழர்கள்

    பட மூலாதாரம், Reuters

  17. அமெரிக்க அதிபர் தேர்தல் எப்படி நடக்கும்?

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

    2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தல் உங்களுக்கு நினைவிருக்கிறதா?

    அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளின்டனை விட, சுமார் 3 மில்லியன் வாக்குகள் குறைவாக பெற்ற டொனால்ட் டிரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதே போன்ற நிலை, 2020 அதிபர் தேர்தலிலும் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் அதிபரை தேர்ந்தெடுப்பது என்பது மக்கள் கையில் இல்லையா?

    ஒட்டுமொத்த உலகமுமே கூர்ந்து கவனிக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல், எப்படி நடக்கும், அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவது எப்படி, என்பதை சற்று விரிவாக பார்க்கலாம்.

  18. “மோசடி குற்றச்சாட்டுகளால் தேர்தலுக்கு களங்கம்”

    “மோசடி குற்றச்சாட்டுகளால் தேர்தலுக்கு களங்கம்”

    பட மூலாதாரம், EPA

    அமெரிக்க தேர்தலானது “சட்ட நடவடிக்கை குழப்பங்களாலும், பொதுமக்கள் நம்பிக்கையினை குறைமதிப்பிடும் முயற்சிகளாலும் களங்கப்படுத்தப்பட்டுவிட்டதாக” சர்வதேச கண்காணிப்பு அமைப்பு ஒன்று கூறியுள்ளது.

    கொரோனா பாதிப்பு பிரச்சனை இருந்தும்கூட, பல சவால்களை கடந்து தேர்தல் நடத்தப்பட்டதாக ஐரோப்பாவின் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

    இந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், தற்போதைய அதிபர் முன்வைக்கும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால், பொதுமக்களுக்கு ஜனநாயகத்தின் மீது இருக்கும் நம்பிக்கைக்கு களங்கம் ஏற்பட்டது தெரிய வந்துள்ளதாக குறிப்பிட்டது.

    செவ்வாய்க்கிழமைக்கு முந்தைய நாள் வரை, அஞ்சல் வாக்குகள் மற்றும் முன்கூட்டியே நடந்த வாக்குப்பதிவுகள் குறித்து நூற்றுக்கணக்கான வழக்குகள் தொடரப்பட்டது.

    வாக்காளர் மோசடியை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று குடியரசு கட்சி மாகாணங்களும், இதுபோன்ற நடவடிக்கைகள் மக்கள் வாக்களிப்பதை தடுப்பதற்காகவே செய்யப்படுகிறது என்று ஜனநாயக கட்சியினரும் கூறுகின்றனர்.

    தேர்தல் நாளன்று இரவு பேசிய டொனால்டு டிரம்ப் தேர்தல் வாக்குகளில் மோசடி நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டினார்.

    தற்போது பெனிசில்வேனியா, விஸ்கான்சின், ஜோர்ஜா மற்றும் மிஷிகனில் வாக்காளர் மோசடி நடத்துள்ளதாக கூறி, வாக்கு எண்ணிக்கையை நிறுத்த முற்பட்டுள்ளது டிரம்ப் தரப்பு.

    ஆனால், டிரம்ப் கூறும் குற்றச்சாட்டுகள் எதற்கும் ஆதாரம் இல்லை.

  19. பைடனின் வெற்றிக்கு டிரம்பின் சட்ட நடவடிக்கை தடை போடுமா?

    பைடன் முன்னிலை பெற்றுள்ள நிலையில் தேர்தல் முடிவை மாற்ற முயல்கிறாரா டிரம்ப்? அவர் தொடர்ந்துள்ள வழக்குகள் பைடன் வெள்ளை மாளிகை செல்வதை தடுக்குமா?

    US President Election results 2020
  20. அமெரிக்க தேர்தலை தீவிரமாக கண்காணிக்கும் ரஷ்யா

    ரஷ்ய அரசியல்வாதிகளும், அந்நாட்டு ஊடகங்களும், அமெரிக்க தேர்தல் நிலவரங்களை தீவிரமாக கவனித்து வருகின்றன.

    அமெரிக்காவில் நிலவும் தேர்தல் குழப்பங்கள் தங்களுக்கு பயனளிக்கும் என்று ரஷ்யா நினைக்கிறது.

    அதாவது எதிராளி பலவீனமாக இருந்தால், தங்களுக்கு பலம் அதிகமாகும் என்ற கோணத்தில் ரஷ்யா இதனை பார்க்கிறது.

    தேர்தலால் அமெரிக்கா பிரிந்திருந்தால், அதுதான் அங்கு முக்கிய பிரச்சனையாக இருக்கும் என்றும், ரஷ்யா மீது மேலும் தடைகள் விதிக்கப்படாது என்பதுதான் அந்நாட்டின் கணக்கு.

    ஆனால், ரஷ்யாவில் சிலர் வேறு மாதிரியாகவும் இதனை பார்க்கிறார்கள். அமெரிக்கா ஸ்திரத்தன்மையுடன் இருந்தால், அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ரஷ்யாவுக்கு பல நன்மைகள் நடக்கலாம் என சிலர் நம்புகின்றனர். வலுவான அதிபர் வந்தால் மட்டுமே, ரஷ்யாவுடனான உறவுகளில் இருக்கும் பிரச்சனைகளை களைய முடியும் என்று அவர்கள் நினைக்கின்றனர்.