தனிமைப்படுத்திக்கொள்ளவில்லை என்றால் 1000 பவுண்ட் அபராதம்

பட மூலாதாரம், Getty Imagesஅ
வெளிநாடுகளில் இருந்து பிரிட்டனுக்கு வருபவர்கள், 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவில்லை என்றால் 1,000 பவுண்ட் அபராதம் விதிக்க பிரிட்டன் அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
விமானம் அல்லது ரயிலில் வரும் பயணிகள், எங்கே தனிமையில் இருக்கப்போகிறார்கள் என்ற தகவல்களை எல்லை பாதுகாப்பு படையினரிடம் வழங்க வேண்டும். இல்லையென்றால் அரசு ஒதுக்கும் இடத்தில் தங்க வேண்டும்.













