சமீபத்திய செய்திகள் என்ன?
கொரோனா வைரஸ் குறித்த புதிய செய்திகளை இன்றைய நேரலைப் பக்கத்தில் தெரிந்துகொள்ளலாம்.
உலகெங்கும் கோவிட்-19 நோய்த்தொற்றால் 3,28,172 பேர் இறந்துள்ளனர்; பாதிக்கப்பட்ட 18,99,350 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் குறித்த புதிய செய்திகளை இன்றைய நேரலைப் பக்கத்தில் தெரிந்துகொள்ளலாம்.
இந்த நேரலை தொகுப்பு இத்துடன் முடிகிறது.
நாளை காலை மீண்டும் வேறொரு நேரலை தொடங்கும். மேலதிக செய்திகளை பிபிசி இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள பிற கட்டுரைகளுக்கான இணைப்புகளில் படிக்கலாம்.

பட மூலாதாரம், Getty Images
இதுவரை ரயிலில் பயணம் செய்தவர்கள் பரிசோதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், அடுத்த வாரத்தில் இருந்து விமானத்தில் பயணிப்போரை தனிமைப்படுத்தும் திட்டம் இல்லை என்று அமைச்சர் மத்திய சிவில் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் தெரிவித்தார்.
இந்தியாவில் மே 25 முதல் உள்ளூர் விமானப் போக்குவரத்து சேவை தொடங்கப்பட இருக்கிறது. இதில் பயணிப்போருக்கான விதிமுறைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டன.
இந்நிலையில் டெல்லியில், மத்திய சிவில் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது விமான போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கப்படுவது தொடர்பாக மேலும் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
கொரோனா வைரஸ் தொற்றால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று சீனாவில் நாடாளுமன்றக்கூட்டம் துவங்கியது.
எப்போதும் ஆண்டின் தொடக்கத்தில் நடக்கும் இக்கூட்டத்தில் அந்நாட்டின் பிரதமர், அதிமுக்கிய தலைவர்களோடு, ஆயிரக்கணக்கான அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் கலந்து கொள்வார்கள்.
அந்தாண்டிற்கான புதிய சட்டங்கள் உள்ளிட்ட பல விஷயங்கள் விவாதிக்கப்படும். முன்னதாக இதில் குறைந்தளவு நபர்களே கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கபட்டிருந்தது. ஆனால் இன்று துவங்கிய கூட்டத்தில் அப்படி நடக்கவில்லை.
ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டனர். அதோடு, அவர்கள் ஒருக்கொருவர் கைக்குலுக்குவது போன்ற காட்சிகளும் அந்நாட்டு தேசிய ஊடகங்களில் வெளியாகின.
இதில் கலந்து கொண்ட சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் பிற முக்கிய அரசு அதிகாரிகள் மாஸ்க் அணியாமல் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பதினான்காயிரத்தை நெருங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
மும்பையில் ஒரு மருத்துவமனையில் 100க்கும் அதிகமான குழந்தைகள், தங்கள் தாய்மார்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தபோதும் நல்ல உடல் நலத்துடன் பிறந்துள்ளன.
லோக்மான்ய திலக் அரசு பொது மருத்துவமனையில் பிறந்த 115 குழந்தைகளில் மூன்று குழந்தைகளுக்கு கடந்த மாதம் முதலில் பரிசோதனை செய்யப்பட்ட போது கோவிட்-19 தொற்று இருப்பதாக காட்டியது. ஆனால் அடுத்தடுத்த சோதனைகள் அக்குழந்தைகளுக்கு தொற்று இல்லை என தெளிவுபடுத்தின என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, குழந்தை பிறக்கும் முன் இறந்த ஒருவரையும் சேர்த்து இரண்டு கர்ப்பிணி பெண்கள் கோவிட்-19 தொற்றால் இறந்துள்ளனர்.

பல இந்தியர்களுக்கு கிரிக்கெட் கடவுளாக இருக்கும் சச்சின் டெண்டுல்கருக்கு, ஓரளவிற்கு முடி திருத்தவும் வரும் என்பது யாருக்கு தெரியும்
கொரோனா ஊரடங்கால், பல முடி திருத்த நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், தனது மகனுக்கு தானே முடித்திருத்தம் செய்துள்ளார் சச்சின் டெண்டுல்கர்.
அதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் Instagram வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Instagram குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
Instagram பதிவின் முடிவு

பட மூலாதாரம், Getty Images
கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மாநில அரசின் வரி வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால், அரசின் செலவினங்களைக் கடுமையாகக் குறைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அரசாணைகளும் வெளியிடப்பட்டுள்ளன.
கொரோனாவின் காரணமாக மாநிலத்தின் வரி வருவாய் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு மார்ச் மாதம் மேற்கொள்ளப்பட்ட நிதிநிலை அறிக்கையை அப்படியே நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அதே சமயம் நோயைத் தடுப்பது, சிகிச்சை அளிப்பது போன்றவற்றுக்கான செலவுகள் வெகுவாக அதிகரித்துள்ளன. இந்த நிலையில், சூழலை ஆராய்ந்து நிதிச் சிக்கலை முடிந்த அளவுக்கு குறைக்கப் பார்ப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் நலத் திட்டங்கள், முதலீட்டுச் செலவுகள் ஆகியவற்றின் மூலம் பொருளாதாரம் மேம்படுமென நம்புவதாகவும் மாநில அரசு தெரிவித்திருக்கிறது.
கடந்த வாரம் மட்டும் 24 லட்ச அமெரிக்கர்கள் வேலைவாய்ப்பின்மை நிவாரணங்கள் கோரி பதிவு செய்துள்ளனர்.
இதோடு சேர்ந்து கொரோனா வைரஸ் தொற்று ஆரம்பத்தில் இருந்து இதுவரை 38.4 மில்லியன் அமெரிக்கர்கள் வேலையில்லாமல் அரசு நிவாரணங்களுக்காக பதிவு செய்துள்ளனர்.
கொரோனா வைரஸ் ஊரடங்கு தளர்த்தப்பட்டு தொழில்கள் திறக்கப்பட்டாலும், அங்கு தொடர்ந்து வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது.
உலகிலேயே அமெரிக்காவில்தான் கொரோனா வைரஸால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகம் பேர் உயிரிழந்ததும் அங்குதான்
அங்கு இதுவரை 15 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 93 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் மட்டும் ஏன் இவ்வளவு உயிரிழப்புகள். அந்நாடு இத்தொற்றை சரியாக கையாளவில்லையா. என்ன நடந்தது என்பதை இந்தக் காணொளி விரிவாக விளக்குகிறது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
இனி ரயிலுக்குள் துணி, போர்வைகள் வழங்கப்பட மாட்டாது. ஆரோக்கிய சேது செயலியில் 'இந்த நிறம்' இல்லையெனில் விமான நிலையத்திற்குள் அனுமதி கிடையாது. மத்திய அரசு என்னென்ன விதிமுறைகளை அறிவித்துள்ளது?

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டில் மேலும் 776 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக மாநில சுகாதாரத் துறைத் தெரிவித்துள்ளது. மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பதினான்காயிரத்தை நெருங்கியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 776 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், இதுவரை இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13967ஆக உயர்ந்துள்ளது.
இன்று தமிழ்நாட்டில் மட்டும் 689 பேருக்கு இந்நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தவிர, வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் எட்டுப் பேருக்கும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் 79 பேருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டிலிருந்து வந்தவர்களைப் பொறுத்தவரை சிகாகோவிலிருந்து 6 பேரும் மஸ்கட், மாலத்தீவிலிருந்து தலா ஒருவரும் இந்நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களைப் பொறுத்தவரை, மகாராஷ்டிராவிலிருந்து 76 பேரும் கேரளா, தில்லி, மேற்கு வங்கத்திலிருந்து தலா ஒருவரும் இந்நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்திற்குள் பாதிக்கப்பட்டவர்களில், சென்னையில் மட்டும் 567 பேருக்கு இத்தொற்று ஏற்பட்டுள்ளது.
செங்கல்பட்டில் 34 பேருக்கும், திருவள்ளூரில் 42 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 13 பேருக்கும் ராணிப்பேட்டையில் 4 பேருக்கும் தென்காசி, தூத்துக்குடியில் தலா ஐந்து பேருக்கும் இந்நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவர்களில் 3 பேர் அரசு மருத்துவமனைகளிலும் 4 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர்.
ஆகவே தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 94ஆக உயர்ந்துள்ளது. ஆகவே தமிழகத்தில் இறப்பு விகிதம் 0.69 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 400 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளனர்.
ஆகவே குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6282ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களோடு ஒப்பிட்டால் 44.97 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனா சோதனைகளைச் செய்யும் சோதனைச் சாலைகளின் எண்ணிக்கை 66 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் 41 சோதனைச் சாலைகள் அரசுக்குச் சொந்தமானவை.
கடந்த 24 மணி நேரத்தில் 12,464 பேருக்கு சோதனைகள் செய்யப்பட்டிருக்கும் நிலையில், மொத்த சோதனைகளின் எண்ணிக்கை 3,72,532ஆக உள்ளது.
வேறு நாடுகளில் இருந்து தமிழ்நாடு திரும்பியவர்களில் இதுவரை 61 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 25 பேருக்கு முதலில் எடுக்கப்பட்ட சோதனையில், நோய் இல்லை எனத் தெரியவந்தது. ஆனால், தனிமைப்படுத்தும் காலம் முடிவடைந்து சோதிக்கும்போது அவர்களுக்கு நோய்த் தொற்று இருப்பது தெரியவந்தது.
கோயம்புத்தூர், ஈரோடு, நாமக்கல், திருவாரூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா நோயாளிகள் யாரும் இல்லை.
சிங்கப்பூரில் இன்று புதிதாக அடையாளம் காணப்பட்ட 450 கோவிட்-19 நோயாளிகளையும் சேர்த்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
சிங்கப்பூரில் தற்போது கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அமலில் இருக்கும் நிலையில், நோய்த்தொற்று கட்டுக்குள் வருவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.
அங்கு தற்போது தங்குவிடுதிகளில் உள்ள அந்நியத் தொழிலாளர்களில் 27,106 பேருக்கு வைரஸ் தொற்று உள்ளது. இதுவரை 82,000 அந்நியத் தொழிலாளர்களுக்கு வைரஸ் தொற்றுப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
நேற்றுவரை 11,198 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதார அமைச்சு கூறியுள்ளது. இந்நிலையில் அங்கு பாலர் பள்ளிகள் ஜூன் 2ஆம் தேதி முதல் இயங்கத் துவங்கும்.
அனைத்துப் பள்ளிகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. மேலும் ஆசிரியர்களும் இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வேலைக்குச் செல்வோரின் எண்ணிக்கை ஜூன் 2ஆம் தேதிக்குப் பிறகு அதிகரிக்கும் என்பதால் குழந்தைப் பராமரிப்பு நிலையங்களும், அன்றைய தினம் மீண்டும் இயங்கத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
தமிழகத்தில் மேலும் புதிதாக 776 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதில் சென்னையில் மட்டும் 567 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 400 பேர் சிகிச்சை முடிந்து வெளியேறி உள்ளனர்.

பட மூலாதாரம், AFP
மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 50 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,059ஆக உயர்ந்துள்ளது.
இன்று 90 பேர் கோவிட்-19 நோயில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர். மலேசியாவில் 82.1 விழுக்காடு நோயாளிகள் குணமடைந்திருப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்று நோய்த்தொற்று இருப்பதாக அடையாளம் காணப்பட்டவர்களில் 35 பேர் புக்கிட் ஜலீல் குடிநுழைவு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் ஆவர்.
இவர்களில் 15 பேர் இந்திய பிரஜைகள் என்றும், 14 பேர் மியான்மர் குடிமக்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் இருக்கும் வேளையில் சட்ட விரோத குடியேறிகள், செய்தியாளர்கள் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுப்பது நிறுத்தப்பட வேண்டும் என ஐநா நிபுணர்கள் பலர் வலியுறுத்தி உள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாட்டில் உள்ள அனைத்து அந்நியத் தொழிலாளர்களுக்கும் கோவிட்-19 பரிசோதனை செய்யப்படும் என மலேசிய அரசு அண்மையில் அறிவித்தது.
எனினும் பரிசோதனைக்காக வரும்போது தங்களை கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக சட்ட விரோதக் குடியேறிகள் மற்றும் அகதிகள் மத்தியில் அச்சம் பரவியது.
இதையடுத்து அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என அரசுத் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. எனினும் அதை மீறி அண்மைய சில தினங்களாக அதிரடி சோதனை நடவடிக்கைகள் மூலம் ஏராளமான கள்ளக்குடியேறிகளை மலேசிய குடிநுழைவுத் துறை, காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர்.
இந்த நடவடிக்கை குறித்து செய்திகளைச் சேகரிக்கும் ஊடகவியலாளர்களுக்கு பல்வேறு வகையிலும் தொல்லைகள் ஏற்படுவதாக ஐநா நிபுணர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
தென் ஆப்பிரிக்காவில் பிறந்து இரண்டு நாட்களே ஆன கைக்குழந்தை ஒன்று கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளது.
குறைப்பிரசவத்தில் பிறந்த அக்குழந்தையின் தாய்க்கு கொரோனா இருப்பது முன்பு கண்டறியப்பட்டது.
அந்நாட்டில் கொரோனாவால் உயிரிழக்கும் முதல் குழந்தை மரணம் இதுவாகும்.
அக்குழந்தைக்கு நுரையீரல் பிரச்சனை இருந்ததாகவும். பிறந்த உடனேயே வென்டிலேட்டர் கருவி தேவைப்பட்டதாகவும் சுகாதார அமைச்சர் ஸ்வெலி கிசே தெரிவித்தார்.
இந்தியாவில் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கான விதிமுறைகளை இந்திய விளையாட்டு ஆணையம் வெளியிட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக அனைத்து பயிற்சியாளர்கள், விளையாட்டு வீரர்களை கண்காணிக்கவும், அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கவும் ஒரு குழு அமைக்கப்படும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏழை நாடுகளின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் அதனை பணக்கார நாடுகள் கவனிக்க வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனத்தின் சிறப்பு தூதர் டேவிட் நபரோ பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
"ஒருபக்கம் இத்தொற்று மனித உயிர்களை பறிக்கும் அபாயத்தை கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் ஏழை நாடுகளிடம் இதனை சமாளிக்கக்கூடிய அளவிற்கு போதிய மருத்துவ வசதிகள் இல்லை" என்று அவர் குறிப்பிட்டார்.
இதனால் மக்களின் வாழ்வாதாரம் ஒரே இரவில் இல்லாமல் போகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
"ஆசியா, ஆப்பிரக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க சமூகங்களில் மக்கள் பலரும் பசியால் வாடுவது மிக அதிகமாகி வருகிறது. இந்தப் பெருந்தொற்றால், பல தசாப்தங்கள் கண்டிறாத ஏழ்மை மற்றும் ஊட்டச்சத்தின்மை பிரச்சனைகளை பார்க்கப் போகிறோம்" என்று டேவிட் நபரோ குறிப்பிட்டார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் 'விண்ணைத்தாண்டி வருவாயா'.
இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில், மீண்டும் சிம்பு, த்ரிஷா கூட்டணியில் கெளதம் வாசுதேவ் மேனன் 'கார்த்திக் டயல் செய்த எண்' என்கிற குறும்படத்தை இயக்கியிருக்கிறார்.
விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து கெளதம் மேனன், அதன் இரண்டாம் பாகத்தை எடுக்கத் திட்டமிட்டிருந்தார்.
அது குறித்து அவர் அப்போது அளித்திருந்த பேட்டி ஒன்றில், இந்தப் படத்தை தயாரித்து இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும், கார்த்திக் கதாபாத்திரத்தில் நடிகர் மாதவன் நடிக்க இருப்பதாகவும் கூறியிருந்தார்
கதைப்படி, முதல் பாகத்திலிருந்து எட்டு ஆண்டுகள் கழிந்துவிட்டதாகக் கதைக்களம் இருக்கும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், கொரோனா லாக்டவுண் காலத்தில் வீட்டிலிருந்தபடியே 'கார்த்திக் டயல் செய்த எண்' என்கிற குறும்படத்தை கெளதம் மேனன் இயக்கியிருக்கிறார்.
அதற்காக எப்படி செல்போனில் வீடியோ எடுக்க வேண்டும் என அவர் த்ரிஷாவிற்கு கற்றுக் கொடுக்க, அந்த வீடியோவை த்ரிஷா அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
சிம்பு மற்றும் த்ரிஷாவின் நடிப்பில் வெளியாகியுள்ள அந்தக் குறும்படத்தில் நாயகன் இயக்குநர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதால் இப்போது இயக்குநர்கள் சந்திக்கின்ற பிரச்சனைகள் குறித்தும், ஓடிடி பிளாட்ஃபார்ம் குறித்து பேசுவதும் அதில் இடம்பெற்றுள்ளது. இந்தக் குறும்படம் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகின்றது.

சிறப்பு ரயிலில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக்கோரி திருப்பூர் மாவட்டம் குணங்கள்பாளையம் பகுதியில் உள்ள பின்னலாடை தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வந்த 200க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் இன்று திடீரென சாலையின் ஓரம் அமர்ந்து போராடத்தில் ஈடுபட்டனர்
தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட வடமாநிலத் தொழிலாளர்களின் விவரங்களை சேகரித்திக்கொண்டு, சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.