இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒரு லட்சத்தைக் கடந்தது
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது.
இந்திய அரசு இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி இதுவரை 1,01,539பேர் இந்தியா முழுவதும்கோவிட்- 19 தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றைய எண்ணிக்கையை விட இன்று கூடுதலாக 4,970 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 134 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும் இந்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் ஒட்டுமொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3163 ஆக உள்ளது.
