You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

இந்தியா முழுவதும் மே 31 வரை முடக்க நிலை நீட்டிப்பு

கொரோனா வைரஸ் தொற்றால் உலக அளவில் இதுவரை 46 லட்சத்து 26ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவு தெரிவிக்கிறது. கோவிட்-19 நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. உலக பொருளாதாரத்தில் 8.8 ட்ரில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்படும் - அதிர்ச்சி தரும் தகவல்

  2. மாணவர்கள் கல்வி கற்க டிடிஎச் சேனல்கள்

    மாணவர்களுக்குக் கல்வி தொடர்பாக உதவ சுயம் பிரபா டி.டி.எச் சேனல்கள் தொடங்கப்பட்டு இருக்கிறது. இணைய வசதி இல்லாத மாணவர்களுக்கு இது உதவும் என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

    அதில் தற்போது 12 சேனல்கள் உள்ளன.

  3. நிர்மலா சீதாராமன் கூறியது என்ன?

    இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பின்போது சமூக முடக்கம் அறிவிக்கப்பட்டதிலிருந்து இதுவரை மத்திய அரசு செய்தவற்றையெல்லாம் பட்டியலிட்டார் நிர்மலா சீதாராமன்.

    8.19 கோடி விவசாயிகளுக்கு நேரடியாக தலா ரூ 2000 ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. இதன் மதிப்பு 16, 394 கோடி.

    தேசிய சமூக உதவி திட்டத்தின் கீழ் அதன் பயனாளிகளுக்கு முதற்கட்டமாக ரூ 1405 கோடியும், இரண்டாம் தவணையாக ரூ 1402 கோடியும் வழங்கப்பட்டிருக்கிறது.

    மருத்துவ உபகரணங்கள் வாங்க 15 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது.

    ஜன் தன் கணக்கு வைத்துள்ள 20 கோடி பெண்கள் 10,025 கோடி பணம் செலுத்தப்பட்டுள்ளது.

    2.2 கோடி கட்டட தொழிலாளர்களுக்கு 3950 கோடி பணம் செலுத்தப்பட்டுள்ளது.

    6.81 கோடி பேருக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்பட்டுள்ளது

  4. 5-ம் கட்ட பொருளாதார தொகுப்பு விவரங்களை வெளியிடும் நிர்மலா சீதாராமன்

    இந்திய பிரதமர் மோதி அறிவித்த ரூ. 20 லட்சம் கோடி பொருளாதார திட்டத்தில் 5வது மற்றும் இறுதி கட்ட விவரங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து வருகிறார்

  5. தொடரும் சோகம்

    மகாராஷ்டிராவிலிருந்து மத்திய பிரதேச மாநிலம் இந்தூருக்கு சென்றுகொண்டிருந்த ஒரு புலம் பெயர்ந்த தொழிலாளி அவரது மனைவி மற்றும் இரண்டு பேர் லாரி மோதி உயிரிழந்துள்ளனர்.

    பெரு நகரங்களிலிருந்து சொந்த ஊருக்கு நடந்து சென்றுகொண்டிருக்கும், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தினமும் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் சோகம் தொடர்ந்து வருகிறது.

  6. இந்தியா: கடந்த 24 மணி நேரத்தில் 4987 பேருக்கு கொரோனா தொற்று

    இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 4987 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்றும், 120 மரணங்கள் நிகழ்ந்துள்ளது என்று இந்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.

    இந்தியாவில் இதுவரை 90927 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 2872 மரணங்கள் நிகழ்ந்துள்ளது

  7. ஐரோப்பாவில் குறைந்து வரும் கொரோனா மரணங்கள்

    ஐரோப்பாவில் கொரோனா மரணங்கள் குறைந்து வருகின்றது. கொரோனாவின் மையமாக இருந்த இத்தாலியில் கடந்த மார்ச் 27-ம் தேதி 900 மரணங்கள் ஏற்பட்ட நிலையில், நேற்று 262 மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அதேபோல் பிரான்ஸ், ஸ்பெயின், பிரிட்டனிலும் மரணங்கள் குறைந்து வருகின்றது.

    மார்ச் 13 க்குப் பிறகு டென்மார்க்கில் முதல் முறையாக புதிய கோவிட் -19 இறப்பு எதுவும் பதிவாகவில்லை.

  8. கொரோனா பிரச்சனை: டிரம்பை கடுமையாக விமர்சித்த ஒபாமா

    கொரோனா வைரஸ் பிரச்சனையை அமெரிக்க அதிபர் டிரம்ப் கையாளும் விதம் குறித்து, அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா விமர்சனம் செய்துள்ளார்.

    ’’பல தலைவர்களும், அதிகாரிகளும் தாங்கள் பொறுப்பில் இருப்பதை உணரவில்லை. நமது நாட்டுத் தலைமையில் இருக்கும் தோல்விகளை இந்த கொரோனா பெருந்தொற்று நமக்குக் காட்டியுள்ளது’’ என மாணவர்கள் மத்தியில் ஆன்லைனில் உரையாடிய ஒபாமா தெரிவித்துள்ளார்.

  9. ஆன்மாவை அசைத்து பார்க்கும் 10 ஓவியங்கள்

    இந்தியாவின் ஆன்மாவை உலுக்கி கொண்டிருக்கிறது புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்சனை. வெறும் காலுடன் நடக்கும் குழந்தை, கண்ணீர் சிந்தும் தகப்பன், மனைவியை தோளில் சுமந்து நடக்கும் கணவன் - இவர்கள்தான் இப்போது இந்தியாவின் அடையாளம். இதற்கெல்லாம் மேலாக தண்டவாளத்திலும், சாலைகளிலும் தினம் தினம் கொத்து கொத்தாக செத்துக் கொண்டிருக்கிறார்கள் இந்தியா கட்டியெழுப்பியவர்கள். கடந்த 50 நாட்களில் இந்தியாவை அசைத்து பார்த்த 10 நிகழ்வுகளை ஓவியங்களாக இங்கே பகிர்கிறோம்.

    ஓவியங்கள் : கோபால்

  10. நேற்றைய முக்கிய செய்திகள்

    • நைஜீரியாவின் வடக்கு பகுதிகளில் இருக்கும் இஸ்லாமிய பள்ளிகளில் பயிலும் குழந்தைகளை பயணக் கட்டுப்பாடுகளை மீறிநெரிசல் மிகுந்த வாகனங்களில் ஏற்றி அவர்களது சொந்த ஊருக்குஅனுப்பி வைக்கப்பட்டதால் குர்-ஆன் கற்பிக்கும் அந்த பள்ளிகளை மூடுவதற்கு ஆதரவாக நைஜீரியாவில் இருக்கும் சில அரசியல்வாதிகள் குரல் எழுப்பியுள்ளனர்.
    • தங்களது சொந்த மாநிலங்களுக்குஅவர்களில் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு கோவிட்- 19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இன்னும் பல நூறு குழந்தைகளின் சோதனை முடிவுகள் வெளியாகவில்லை.மார்ச் மாத இறுதியிலேயே இந்த பள்ளிகள் மூடப்பட்டு விட்டன என்பதால் செல்வதற்கு இடம் இல்லாத குழந்தைகள் தெருக்களில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தனர்.
    • உத்தரப்பிரேதசத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் சென்ற லாரி விபத்தில் சிக்கியதில் 24 பேர் உயிரிழந்தனர். இந்தியாவின் வட மாநிலங்களில் இது போன்ற அவல நிலை தொடர்கிறது.
    • இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அறிவித்த 20 லட்சம் கோடி மதிப்புடைய பொருளாதார உதவி தொகுப்பு குறித்த விவரங்களை தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் (சனிக்கிழமை) வெளியிட்டுள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
    • இன்று விண்வெளி, பாதுகாப்பு தளவாட உற்பத்தி, அணுசக்தி, விமானப்போக்குவரத்து உள்ளிட்ட எட்டு துறைகளுக்கான முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
    • இஸ்ரேல் ஆக்கிரமிப்பின் கீழிருக்கும் பாலஸ்தீன பகுதிகளில் மிதமான நோய்த்தொற்று அறிகுறிகள் உடைய நோயாளிகள் தனிமைப்படுத்தப் படுவதற்கான கூடாரங்கள் உலக சுகாதார நிறுவனத்தின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ளன.
    • ஐரோப்பிய நாடுகளில் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தி வரும் சூழலில், கிரீஸ் நாட்டில் 500க்கும் மேற்பட்ட கடற்கரைகள் பொதுமக்கள் வருகைக்காக திறக்கப்பட்டுள்ளன.
    • மாலத்தீவில் சிக்கியுள்ள கன்னியாகுமரி மாவட்ட கட்டுமான தொழிலாளர்களுக்கு கொரோனா நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாகவும் உடனடியாக தமிழகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கவும் கட்டுமான தொழிலாளர்கள் சமூக வலைதளங்கள் மூலம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • புதுக்கோட்டை நகராட்சி சார்பில் காய்கறிகள் வாங்க வரும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து வந்தால் இலவசமாக ஒரு கிலோ பரங்கிக்காய் வழங்கப்படுகிறது. நோய்த்தொற்று பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
    • தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கடைசி நபரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்று இல்லாத நாடாக கம்போடியா அறிவித்துக்கொண்டது
  11. வணக்கம் பிபிசி தமிழ் நேயர்களே!

    கொரோனா வைரஸ் தொடர்பான அனைத்து செய்திகளையும் உங்களுக்காக எழுத்து, ஒலி, ஒளி, வரைகலை வடிவத்தில் பிபிசி டெல்லி அலுவலகத்திலிருந்து செய்தியாளர்கள் மு.நியாஸ் அகமது மற்றும் நந்தக்குமார் ஆகியோர் தொகுத்து வழங்குகிறோம். நேற்றைய செய்திகளை

    சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர

    • பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
    • பிபிசி தமிழ் ட்விட்டர்
    • பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
    • பிபிசி தமிழ் யு டியூப்