தமிழகத்தில் 10 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு

சென்னையில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கையை மண்டலவாரியாகப் பார்க்கும்போது, ராயபுரம் மண்டலம் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது. இந்த மண்டலத்தில் தற்போது 971 பேர் உள்ளனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. மீண்டும் திறக்கப்பட்ட உணவுவிடுதிகள், காஃபி ஷாப்கள் - மகிழ்ச்சியில் ஆஸ்திரேலியர்கள்

    கோப்புப்படம்

    பட மூலாதாரம், Getty Images

    ஆஸ்திரேலியாவின் நியூ செளத்வேல்ஸ் மாகாணத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் உணவு விடுதிகள் மற்றும் காஃபி ஷாப்கள் ஆகியவை திறக்கப்பட்டுள்ளன.

    அதேபோல், உணவுகளுக்கு பப்களும் திறக்க அனுமதிக்கப்பட்ட நிலையில், மதுபான விடுதிகள் திறக்க அனுமதிக்கப்படவில்லை.

    ஆஸ்திரேலியாவின் மற்ற நகரங்களில் இன்னமும் கட்டுப்பாடுகள் நீடித்து வரும் நிலையில், அந்நாட்டின் அதிக மக்கள்தொகை உள்ள நகரான சிட்னியில் உணவு விடுதிகள் மற்றும் காஃபி ஷாப்கள் ஆகியவை திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.

    அதேவேளையில் சிட்னியில் உள்ள அனைத்து விடுதிகளும் இன்று திறக்கப்படவில்லை.

    மேலும் உணவு விடுதிகள் மற்றும் காஃபி ஷாப்களில் ஒரு குறிப்பிட்ட சமயத்தில் 10 பேருக்கு மட்டுமே அனுமதி உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    கடந்த மாதத்தில் ஆஸ்திரேலியாவில் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 1 சதவீதத்துக்கும் குறைவாகவே இருந்துவந்தது.

    கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் உலக அளவில் சிறப்பாக செயல்படும் நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்றாக கருதப்படுகிறது.

    இதுவரை ஆஸ்திரேலியாவில் 100க்கும் குறைவான மரணங்களே பதிவாகியுள்ளன.

  2. நேற்று நடந்த சில முக்கிய நிகழ்வுகள்

    இன்றைய செய்திகளைத் தெரிந்துகொள்ளும் முன்னர் நேற்றைய முக்கியச் செய்திகளைத் தெரிந்துகொள்ளலாம்.

    • ரேஷன் அட்டை இல்லாத உள்நாட்டிலேயே புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு இலவசமாக ஐந்து கிலோ அரசி அல்லது கோதுமை வழங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
    • சிங்கப்பூரில் நேற்று புதிதாக 752 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 958 பேர் கோவிட் 19 நோயிலிருந்து மீண்டுள்ளனர்.
    • பிரான்ஸ் குடிமக்கள் வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதம் சுற்றுலாவுக்கு செல்ல முடியும் என அந்நாட்டின் பிரதமர் எட்வர்ட் பிலிப்பி தெரிவித்துள்ளார்.
    • தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 447 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 363 பேருக்கு அத்தொற்று ஏற்பட்டுள்ளது.
    • ரஷ்யாவில் சுமார் 2 லட்சத்து 52 ஆயிரம் பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு 2305 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
    கோப்புப்படம்

    பட மூலாதாரம், Getty Images

  3. வணக்கம் நேயர்களே!

    கொரோனா வைரஸ் தொடர்பான தமிழக, இந்திய, இலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உங்களுக்காக பிபிசி டெல்லி அலுவலகத்திலிருந்து சிவக்குமார் உலகநாதன் மற்றும் நந்தகுமார் தொகுத்து வழங்குகிறோம்.

    கோவிட்-19 பெருந்தொற்று தொடர்பான அனைத்து செய்திகளையும் இங்கு உடனுக்குடன் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

    கோப்புப்படம்

    பட மூலாதாரம், Getty Images