லாரியில் சென்ற புலம் பெயர் தொழிலாளர்கள் 8 பேர் விபத்தில் பலி, 50 பேர் காயம்
லாரியில் ஏறி சொந்த ஊர்களுக்குத் திரும்பிக் கொண்டிருந்த புலம் பெயர் தொழிலாளர்கள் 8 பேர் மத்தியப் பிரதேசத்தில் நடந்த சாலை விபத்தில் கொல்லப்பட்டனர். மேலும் 50 பேர் இந்த விபத்தில் காயமடைந்தனர்.
மகாராஷ்டிரத்தில் இருந்து உத்தரப்பிரதேசத்தில் உள்ள தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுகொண்டிருந்தபோது, அவர்கள் சென்ற லாரியும் ஒரு பஸ்சும் மோதிக்கொண்டன.
மத்தியப் பிரதேச மாநிலம் குணா என்ற இடத்தில் உள்ள கண்டோன்மென்ட் காவல்நிலையப் பகுதியில் புதன்கிழமை இரவு இந்த விபத்து நடந்தது.
இந்த விபத்தில் உயிரிழந்த உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரண உதவியாக வழங்க உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.