கொரோனா வைரஸ்: தமிழகத்தில் புதிதாக 669 பேர் பாதிப்பு - அண்மைய தகவல்கள்
உலகிலேயே கொரோனா வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடான அமெரிக்காவில் இதுவரை 13,09,159 பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 78,792 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு: இயங்க அனுமதியளிக்கப்பட்ட 34 கடைகளின் பட்டியல் -

பட மூலாதாரம், Getty Images
தமிழகத்தில் நாளை முதல் 34 வகையான கடைகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன் பட்டியல்,
1)டீக்கடைகள் (பார்சல் மட்டும்)
2)பேக்கரிகள் (பார்சல் மட்டும்)
3)உணவகங்கள் (பார்சல் மட்டும்)
4)பூ, பழம், காய்கறி மற்றும் பலசரக்கு கடைகள்
5)கட்டுமானப் பொருட்கள் விற்கும் கடைகள்
6)சிமெண்ட், ஹார்டுவேர், சானிடரிவேர் விற்கும் கடைகள்
7)மின் சாதனப் பொருட்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள்
8)மொபைல் போன் விற்கும் மற்றும் பழுதுநீக்கும் கடைகள்
9)கணினி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள்
10)வீட்டு உபயோக இயந்திரங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் கடைகள்
11)மோட்டார் இயந்திரங்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள்
12)கண் கண்ணாடி மற்றும் பழுது நீக்கும் கடைகள்
13)சிறிய நகைக் கடைகள் ( குளிர்சாதன வசதி இல்லாதவை)
14)சிறிய ஜவுளிக் கடைகள் ( குளிர்சாதன வசதி இல்லாதவை) - ஊரக பகுதிகளில் மட்டும்
15)மிக்ஸி, கிரைண்டர் பழுது நீக்கும் கடைகள்
16)டிவி விற்பனை மற்றும் டிவி பழுது நீக்கும் கடைகள்
17)பெட்டி கடைகள்
18)பர்னிச்சர் கடைகள்
19)சாலையோர தள்ளுவண்டி கடைகள்
20)உலர் சலவையகங்கள்
21)கூரியர் மற்றும் பார்சல் சர்வீஸ்
22)லாரி புக்கிங் சர்வீஸ்
23)ஜெராக்ஸ் கடைகள்
24)இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன விற்பனை நிலையங்கள்
25)இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன பழுது நீக்கும் கடைகள்
26)நாட்டு மருந்து விற்பனை கடைகள்
27)விவசாய இடுபொருட்கள் மற்றும் பூச்சி மருந்து விற்பனை கடைகள்
28)டைல்ஸ் கடைகள்
29)பெயிண்ட் கடைகள்
30)எலக்ட்ரிகல் கடைகள்
31)ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் விற்பனை கடைகள்
32)நர்சரி கார்டன்கள்
33)மரக்கடைகள் மற்றும் பிளைவுட் கடைகள்
34)மரம் அறுக்கும் கடைகள்
கொரோனா வைரஸ்: மெக்கானிக் உருவாக்கிய புதுமையான இரு சக்கர வாகனம்
காணொளிக் குறிப்பு, கொரோனா வைரஸ்: சிறப்பு இரு சக்கர வாகனத்தை உருவாக்கிய திரிபுரா பைக் மெக்கானிக் தேவையே கண்டுபிடிப்புகளின் தாய் என்பார்கள். இந்தியாவின் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த இந்த ஆட்டோமொபைல் பொறியாளர் கொரோனா வைரஸ் காலத்தில் தனது மகளை பள்ளிக்கு அழைத்து செல்வதற்காக சமூக இடைவெளியுடன் கூடிய ஒரு பைக்கை உருவாக்கி இருக்கிறார்.
இலங்கையில் மக்கள் நாளை முதல் வெளியே செல்ல புதிய நடைமுறை
இலங்கையில் நாடு தழுவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு நாளை முதல் சில விதிமுறைகளுக்கு அமைய தளர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ள பின்னணியில், தொழில்சார் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான அனுமதியை நாளை (மே 11) முதல் வழங்கவுள்ளதாக அரசாங்கம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது.இதன்படி, அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.எனினும், ஊரடங்கு தளர்த்தப்பட்டு மக்களை வெளியில் செல்ல அனுமதிக்க புதிய நடைமுறை ஒன்றை நாளை முதல் அமல்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் அரசாங்கத்தினால் நாட்டு பிரஜைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையிலுள்ள இறுதி இலக்கத்தை அடிப்படையாகக் கொண்டே வெளியில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அடையாள அட்டையில் இறுதி இலக்கம் 1 அல்லது 2ஆக காணப்படுமாயின், அவர்களுக்கு திங்கட்கிழமையும், 3 அல்லது 4ஆக காணப்படுமாயின் அவர்களுக்கு செவ்வாய்க்கிழமையும் வெளியில் செல்ல அனுமதி வழங்கப்படும்.அதேபோன்று 5 அல்லது 6 என்ற இறுதி இலக்கங்களை கொண்ட அடையாள அட்டை உரிமையாளர்களுக்கு புதன்கிழமையும், 7 அல்லது 8 என்ற இறுதி இலக்கங்களை கொண்ட அடையாள அட்டை உரிமையாளர்களுக்கு வியாழக்கிழமையும் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.9 அல்லது 0 இலக்கங்களை இறுதியாகக் கொண்ட அடையாள அட்டை உரிமையாளர்களுக்கு வெள்ளிக்கிழமை மாத்திரமே வெளியில் செல்ல முடியும்.

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, (கோப்புப்படம்) செல்பேசி மூலம் தாய்க்கு பிரியாவிடை அளித்த பிபிசி தயாரிப்பாளர்
''என் தாய் உயிரிழப்பதற்கு சில மணி நேரம் முன்பு, அவருடன் வீடியோ கால் மூலம் உரையாடினேன். நான் அவரிடம் ஆறுதலாக பேசி அவரை தூங்க வைத்தேன். ஆனால் அவர் மீண்டும் எழமாட்டார் என நான் நினைக்கவே இல்லை.''
பிபிசி தயாரிப்பாளர் ஆன்ட்ரு வெப் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள தனது தாயை சென்று பார்க்க முடியவில்லை. அவரது தாய் இறப்பதற்கு முன்பு வீடியோ கால் மூலமாகவே பேசினார்.
விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்.
கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தொடங்குகிறதா?
தென் கொரியாவில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலின் இரண்டாவது அலை ஏற்படுமோ என்ற அச்சம் நிலவி வரும் நிலையில், அந்த நாட்டில் கோவிட்-19 நோய்த்தொற்றின் பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. எனவே, தலைநகர் சோலில் உள்ள மதுபான விடுதிகள், கேளிக்கை விடுதிகள் உள்ளிட்டவை மீண்டும் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
அதாவது, கடந்த ஒரு மாதத்தில் இல்லாத அளவுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரே நாளில் தென் கொரியாவில் 34 பேருக்கு புதிதாக கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தென் கொரியாவில் கொரோனா வைரஸால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,874ஆக அதிகரித்துள்ளது.
தென் கொரியாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியபோது அந்த நாடு எடுத்த தடுப்பு நடவடிக்கைகள் உலகம் முழுவதும் பல்வேறு தரப்பினரின் பாராட்டை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

பட மூலாதாரம், Getty Images
இலங்கையில் சமீபத்திய நிலவரம் என்ன?
இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 847ஆக அதிகரித்துள்ளது.இலங்கையில் இதுவரை ஒன்பது பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ள நிலையில், 260 பேர் சிகிச்சைகளுக்கு பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.சுகாதார மேம்பாட்டுப் பணியகம் இந்த தகவலை இன்று வெளியிட்டுள்ளது.இதன்படி, 578 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.அத்துடன், 135 பேர் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் மருத்துவமனைகளில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
உண்மையில் கொரோனா வைரஸ் எங்கிருந்து தொடங்கியது?
மாலத்தீவில் இருந்து இந்தியர்களை அழைத்து வந்த கப்பற்படை கப்பல்
இந்தியாவில் முடக்க நிலை கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில், வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு கடந்த வாரம் அறிவித்திருந்தது.
அந்த வகையில், கடந்த சில நாட்களாக அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலிருந்து இந்தியர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் தாயகம் திரும்பி வருகின்றனர்.
இந்த நிலையில், மாலத்தீவில் வசித்து வந்த 698 இந்தியர்கள் இந்திய கப்பற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். ஐலஷ்வா என்ற கப்பலின் மூலம் மீட்கப்பட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தை வந்தடைந்ததாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
X பதிவை கடந்து செல்லX பதிவை அனுமதிக்கலாமா?எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காதுஇந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
டாஸ்மாக் விவகாரத்தில் தமிழக அரசு மீது ரஜினிகாந்த் கடும் விமர்சனம்
தமிழகத்தில் முடக்க நிலை முடிவுக்கு வரும் வரை டாஸ்மாக் மூடப்பட வேண்டும் என்றும் ஆனால் இணையதளம் வாயிலாக விற்பனை செய்ய தடை கிடையாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளதை நடிகர் ரஜினிகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “தயவு கூர்ந்து கஜானாவை நிரப்ப நல்ல வழிகளை பாருங்கள்” என்றும் அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இது சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.
X பதிவை கடந்து செல்லX பதிவை அனுமதிக்கலாமா?எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காதுஇந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
முடக்க நிலையால் பாதிக்கப்படும் ஆட்டிசம் குறைபாடுடைய குழந்தைகள்
இந்திய உள்துறை அமைச்சகத்தின் புதிய அறிவிப்பு
இந்தியா முழுவதும் பல்வேறு மாநில அரசுகள் முடக்க நிலையை தளர்த்தி வரும் நிலையில், தொழிற்சாலைகளுக்கான வழிகாட்டுதலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
“தொழிற்சாலைகளில் உற்பத்தியை தொடங்கும் முதல் வாரத்தை பரிசோதனை மேற்கொள்வதற்காக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அப்போது, அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும், நெறிமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளதை உறுதிசெய்யுங்கள்; உடனடியாக அதிக உற்பத்தி இலக்குகளை அடைய முயற்சிக்காதீர்கள்” என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
X பதிவை கடந்து செல்லX பதிவை அனுமதிக்கலாமா?எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காதுஇந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
வந்துகொண்டிருக்கும் செய்தி, இந்தியாவில் இரண்டாயிரத்தை தாண்டிய கொரோனா உயிரிழப்புகள்
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62,939ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 3,277 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், நாடு முழுவதும் கடந்த மணிநேரத்தில் 24 மணிநேரத்தில் கோவிட்-19 நோய்த்தொற்றால் உயிரிழந்த 127 பேரையும் சேர்த்து இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,109ஆக அதிகரித்துள்ளது.
அதே சமயத்தில், நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 19,358ஆக உள்ளது.

பட மூலாதாரம், Getty Images
"எங்கள் சுகாதார அமைப்பின் பலவீனத்தை கொரோனா வெளிப்படுத்தியது"
தங்கள் சுகாதார அமைப்பில் இருந்த பலவீனங்களை கொரோனா வைரஸ் அடையாளம் காட்டி உள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார மையத்தின் இயக்குநர் லீ பின் சீன ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
சீனா இப்படி தனது பிழைகளை ஒப்புக் கொள்வது மிகவும் அரிதானது.
நோய்த்தடுப்பு, பொது சுகாதாரம், தரவுகளை திரட்டுதல் ஆகிய விஷயங்கள் மேம்படுத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
கொரோனா உலகளாவிய தொற்றை சமாளிப்பதற்கு வடகொரியாவுக்கு சீனா உதவத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கொரோனா தொற்று சீனாவின் ஆட்சி நிர்வாகத்திற்கு சவாலாக இருந்ததாகவும் அவர் கூறினார்.
சீனாவின் சுகாதார அமைப்பிலும் பெருந்தொற்றுகளை சமாளிப்பதற்கான ஏற்பாடுகளிலும் இருக்கிற பலவீனமான கன்னிகளை கண்டறிய இந்த கொரோனா தொற்று உதவியதாக அவர் தெரிவித்தார்.
வுஹான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று தோன்றியபோது அதன் ஆரம்பகட்ட அறிகுறிகளுக்கு மிக மெதுவாக எதிர்வினை ஆற்றியதாகவும், சர்வதேச சமூகத்தை விரைவாக எச்சரிக்கத் தவறிவிட்டதாகவும் சீனா மீது குற்றம் சாட்டப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
டிரம்ப் நிர்வாகத்தின் மீது ஒபாமா குற்றச்சாட்டு
அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகத்தின் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அந்த நாட்டின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கடுமையாக விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
கொரோனா வைரஸ் விவகாரத்தில் அமெரிக்காவின் செயல்பாடு “குழப்பங்கள் நிறைந்த பேரழிவுவை” ஏற்படுத்தியுள்ளதாக அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையில் அமெரிக்காவின் செயல்பாட்டிற்கு டிரம்ப் நிர்வாகத்தின் அணுகுமுறையே முக்கிய காரணம் என்று அவர் கூறியுள்ளார்.
“அரசாங்கத்திடம் ‘இதனால் எனக்கு என்ன’ என்ற மனப்பான்மை நிலவுவதே தற்போது நேர்ந்துள்ள குழப்பம் நிறைந்த பேரழிவிற்கு காரணம்” என்று ஒபாமா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோ பைடனை ஆதரித்து தான் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக அவர் மேலும் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பராக் ஒபாமா உலகம் முழுவதும் 40 லட்சத்தை தாண்டிய கொரோனா வைரஸ் பாதிப்புகள்
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவின்படி, உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,23,539ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கோவிட்-19 பெருந்தொற்று நோயால் இதுவரை உலகம் முழுவதும் 2.79.307 பேர் உயிரிழந்துள்ள நிலையில், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 13,75,618ஆக அதிகரித்துள்ளது.
உலகிலேயே கொரோனா வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடான அமெரிக்காவில் இதுவரை 13,09,159 பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 78,792 பேர் உயிரிழந்துள்ளனர்.
நோய்த்தொற்று பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்த நிலையில் ஸ்பெயின், இத்தாலி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும், உயிரிழப்பில் பிரிட்டன், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளும் இருக்கின்றன.

பட மூலாதாரம், Getty Images
நேற்று நடந்தவை - சில முக்கியத் தகவல்கள்
இன்றைய செய்திகளைத் தெரிந்துகொள்ளும் முன்னர் நேற்றைய முக்கியச் செய்திகளைத் தெரிந்துகொள்ளலாம்.
- தமிழகத்தில் கொரோனா கால ஊரடங்கு தளர்வுகளில் ஒரு பகுதியாக தேநீர் கடைகள் செயல்படுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு திங்கள்கிழமை முதல் அமல்படுத்தப்படவுள்ளது.
- தமிழகத்தில் தொடர்ந்து ஆறாவது நாளாக நேற்றும் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 500ஐ கடந்தது. தமிழகத்தில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 526.
- நேற்றைய நிலவரப்படி, இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 844ஆக உள்ளது. அங்கு ஊரடங்கை மீறியதாக இதுவரை 50 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- மலேசியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 54 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
- ஹாங்காங் ஆராய்ச்சியாளர்கள் கொரோனாவை கட்டுப்படுத்த மூன்று மருந்துகளை கலந்து ஒரு கலவையை உருவாக்கி உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த மருந்து கலவை நல்ல பலன்களை தருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
- வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் அனுப்பிய செய்தி ஒன்றில் கொரோனாவை எதிர்கொள்ள வட கொரியாவுக்கு உதவ தயார் எனக் கூறி உள்ளார்.
வணக்கம் நேயர்களே!
கொரோனா வைரஸ் தொடர்பான தமிழக, இந்திய, இலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உங்களுக்காக பிபிசி டெல்லி அலுவலகத்திலிருந்து தொகுத்து வழங்குவது சாய்ராம் ஜெயராமன்.
கோவிட்-19 பெருந்தொற்று தொடர்பான அனைத்து செய்திகளையும் இங்கு உடனுக்குடன் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

பட மூலாதாரம், Getty Images
