மகாராஷ்டிரா ரயில் விபத்து - 5 லட்சம் ரூபாய் நிவாரணம்
மகாராஷ்டிரா கார்மாடடில் நிகழ்ந்த ரயில் விபத்தில் உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது
You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"எந்தெந்த பகுதிகளை சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை நிறமாக வகைப்படுத்துவது என்பதை மத்திய அரசு முடிவு செய்கிறது. ஆனால், உண்மையில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகங்களுக்குதான் அந்தந்த பகுதிகளின் உண்மையான நிலவரம் தெரியும்."
மகாராஷ்டிரா கார்மாடடில் நிகழ்ந்த ரயில் விபத்தில் உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது
உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகள் கொரோனா வைரஸ் சிக்கலை சமாளிக்கப் போராடி வரும் நிலையில் வைரஸ் தொற்று வராமல் இருக்க, அல்லது தொற்றை குணப்படுத்த ஏராளமான உடல் நல அறிவுரைகள் பகிரப்பட்டு வருகின்றன. இவற்றில் பல பயனற்றவை என்ற போதும் தீங்கும் விளைவிக்காதவை. சில அறிவுரைகள் அபாயகரமானவை.
அப்படிப் பரவலாகப் பகிரப்படும் அறிவுரைகள் சிலவற்றையும் அது தொடர்பாக அறிவியல் என்ன சொல்கிறது என்பதையும் இங்கே பார்ப்போம்.
மதுவால் கொரோனாவைத் தடுக்க முடியம் என்ற அறிவுரை அடிக்கடி பகிரப்படுகிறது. இது தவறான தகவல் மட்டுமல்ல. தீங்கு விளைவிக்கும் வாய்ப்புள்ளதும் ஆகும்
சென்னையில் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டல வாரியான பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
சென்னையில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக இருக்கிறது கோடம்பாக்கம். அங்கு இதுவரை 461 பேருக்கு இத்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதற்கு அடுத்த இடத்தில் திருவிக நகர் இருக்கிறது.
சென்னையில் எந்நதெந்த பகுதிகளில் எத்தனை பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை கீழே இணைக்கப்பட்டுள்ள ட்வீட்டில் தெரிந்து கொள்ளுங்கள்
சென்னையை தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் நேற்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.
கடலூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்குவதற்காக சுமார் 2 கிலோமீட்டருக்கு மேல் மக்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.
ஒருகட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே மது வாங்க வரிசையில் நின்றவர்கள் சோர்வினால் சமூக இடைவெளி பின்பற்றாமல் ஒருவரை ஒருவர் அருகில் நிற்கும் சூழல் உருவானது.
இதனால், நகராட்சி நிர்வாகத்திடம் காவல்துறையின் அறிவுறுத்தலின் படி கிருமிநாசினி தெளிக்கும் வாகனம் வரவழைக்கப்பட்டு அங்கு இருந்தவர்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், இது தொடர்பாக மனித உரிமை ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்
கொரோனா வைரஸ் உடலுக்குள் சென்று என்ன செய்கிறது? ஏன் மரணம் கூட ஏற்படுகிறது? இதன் பின் உள்ள அறிவியல் என்ன?
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 56,342 ஆகியுள்ளது.
தற்போது 37,916 பேர் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று இந்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை தெரிவித்துள்ளது.
இதுவரை 16,539 பேர் குணமடைந்துள்ளனர். 1886 பேர் இறந்துள்ளனர்.
கோவிட்-19 தொற்று உறுதியானபின் ஒருவர் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளார்.
கடந்த 24 மணிநேரத்தில் 3,390 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் 103 பேர் இறந்துள்ளனர் என்றும் அந்த அமைச்சகம் இன்று காலை 9 மணியளவில் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் வெளிமாநிலத்தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் மோதியதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து கிடைத்திருக்கும் முதற்கட்ட தகவல்களை சற்று விரவாக பார்க்கலாம்.
வெள்ளிக்கிழமை காலை ஒளரங்காபாத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கார்மாத் என்ற இடத்தில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என பிபிசி மராத்தி சேவையிடம் ஒளரங்காபாத் காவல்துறை கண்காணிப்பாளர் மோக்ஷதா பாட்டில் தெரிவித்தார்.
"இவர்கள் ஜல்னா என்ற இடத்தில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார்கள். தற்போது ஊரடங்கு அமலில் உள்ளது. புசாவலில் இருந்து ஒரு ரயில் புறப்படுகிறது என்ற தகவல் அறிந்த அவர்கள் கார்மாதில் இருந்து புசாவலுக்கு ரயில்வே ட்ராக்கில் நடந்து சென்றிருக்கிறார்கள். அப்போது ஏற்பட்ட இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் காயமடைந்துள்ளார்" என்றும் மொக்ஷாடா பாட்டில் குறிப்பிட்டார்.
அந்தத் தொழிலாளர்கள் மத்தியப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவின் ஜல்னா மற்றும் ஒளரங்காபாத் இடையே வெளிமாநிலத் தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் மோதி 15 பேர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வருத்தம் அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலை தொடர்புகொண்டு பேசியதாகவும், அவர் இச்சூழலை கண்காணிப்பதாகவும் பிரதமர் மோதி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் ரயில்வே ட்ராக்கில் நடந்து கொண்டிருந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் மோதியதில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக தெற்கு மத்திய ரயில்வே செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இறந்தவர்கள் அனைவரும் மத்தியப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் சொந்த ஊர் திரும்ப புசாவல் நகரில் இருந்து ரயில் இருக்கும் என்ற தகவலின்பேரில் அவர்கள் அந்த ரயில் நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர் என்று ஒளரங்காபாத் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோக்ஷதா பாட்டில் பிபிசி மராத்தி சேவையின் நிரஞ்சன் சாவலிடம் தெரிவித்துள்ளார்.
ஜல்னா மற்றும் ஒளரங்காபாத் இடையே இந்த சம்பவம் நிகழ்ந்ததாக ஏன்என்ஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
ரயில்வே ட்ராக்கில் சில தொழிலாளர்கள் நடந்து கொண்டிருப்பதை பார்த்த சரக்கு ரயிலை இயக்கியவர், ரயிலை நிறுத்த முயன்றதாகவும், ஆனால், அது அத்தொழிலாளர்கள் மீது மோதியதாகவும் ரயில்வே அமைச்சகம் விளக்கமளித்திருப்பதாகவும் ஏஎன்ஐ கூறுகிறது.
இதில் படுகாயம் அடைந்த 5 பேர் ஒளரங்காபாத்தில் உள்ள மருத்துவமைனயில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் நம்மை தாக்காமல் இருக்க, அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஆனால் முறையாக எப்படி கைக்கழுவ வேண்டும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. அதை விளக்குகிறது இந்த காணொளி.
வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வங்கதேசத்தில் இருந்து 167 இந்தியர்கள் தாயகம் திரும்ப உள்ளனர்.
இவர்கள் அனைவருமே மருத்துவம் பயிலும் மாணவர்கள் ஆவர்.
இன்று காலை 11 மணிக்கு வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து புறப்படும் இந்த விமானம் ஜம்மு காஷீமரில் தரையிறங்கும்.
இந்தியத் தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவிற்கு 448 பேருக்கு இத்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் அங்கு மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,980ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 66 பேர் உயிரிழந்துள்ளனர்.
வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணி தொடங்கியிருக்கிறது. வந்தே பாரத் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மீட்புத்திட்டத்தில் முதல் கட்டமாக 177 இந்தியர்களுடன் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், கேரளா மாநிலம் கோழிக்கோடை வந்தடைந்தது.
இந்தியா திரும்பும் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துவரும் நிலையில், சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறிச் சந்தையே அதற்கான முக்கியக் காரணமாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. இந்த விபரீதம் எப்படி நடந்தது?
கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால், அமெரிக்க பொருளாதாரம் மோசமடைந்துள்ள நிலையில், கடந்த வாரத்தில் மட்டும் 32 லட்சம் அமெரிக்கர்கள் வேலையில்லாமல் இருப்போருக்கான நிவாரணத்தை கோரியுள்ளது தெரிய வந்துள்ளது.
இதனால், மார்ச் மாதம் நடுவில் இருந்து அங்கு வேலையில்லாமல் இருப்போரின் எண்ணிக்கை 3.33 கோடியாக அதிகரித்துள்ளது. இது அமெரிக்காவில் பணிபுரிவோரின் எண்ணிக்கையில் சுமார் 20 சதவீதமாகும்.
மார்ச் மாதத்தில் மட்டும் 69 லட்சம் அமெரிக்கர்கள் வேலையில்லாமல் இருப்போருக்கான நிவாரணத்தை கோரியிருந்தனர்.
அந்நாட்டின் ஒரு சில பகுதிகளில் ஊரடங்கு முடிந்து பொருளாதாரம் திறக்கப்பட்டுவிட்டாலும், வேலையில்லாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கொரோனா தொற்றால் போக்குவரத்துத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், ஊபர், ஏர் பிஎன்பி போன்ற நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை அறிவித்தன. மொத்த அமெரிக்க பொருளாதாரத்திலும் இது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏப்ரல் மாதத்திற்கான வேலைவாய்ப்பின்மை விகிதம் 15 சதவீதத்திற்கும் மேல் இருக்கும் வாய்ப்பு இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு அந்நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம், 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 3.5 சதவீதமாக குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்றைய செய்திகளைத் தெரிந்துகொள்ளும் முன் நேற்று நடந்த சில முக்கியச் செய்திகளின் தொகுப்பைப் பார்ப்போம்.
கொரோனா வைரஸ் தொடர்பான தமிழக, இலங்கை, இந்திய மற்றும் சர்வதேச செய்திகளை உங்களுக்காக பிபிசி டெல்லி அலுவலகத்திலிருந்து செய்தியாளர்கள் அபர்ணா ராமமூர்த்தி மற்றும் விக்னேஷ் ஆகியோர் தொகுத்து வழங்குகிறோம்.
கோவிட்-19 தொற்று தொடர்பான அனைத்து செய்திகளையும் இங்கு உடனுக்குடன் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.