தமிழகத்தில் 5 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு

சென்னையில் இன்று மட்டும் 316 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2644ஆக உயர்ந்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. தொடரும் போராட்டங்கள்

    மதுபானக்கடைகளை திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அலுவலகத்தில் கருப்பு சின்னம் அணிந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அலுவலகம்

    பட மூலாதாரம், பிபிசி தமிழ்

  2. 'ஏழை நாடுகளுக்கு உதவி தேவை'

    உதவி தேவைப்படும் நாடுகளில் ஜிம்பாப்வேயும் ஒன்று

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, உதவி தேவைப்படும் நாடுகளில் ஜிம்பாப்வேயும் ஒன்று

    ஏழை நாடுகளில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கவும், வைரஸ் தொற்றால் உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்கவும், மேலும் 4.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவை என ஐநா கோரியுள்ளது.

    மார்ச் மாதம் ஐநாவின் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான திட்டம் ஒன்று தொடங்கப்பட்டு 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கோரப்பட்டது. அதில் பாதி தொகை ஏற்கனவே கிடைத்துவிட்டது.

    ஐநாவின் மனிதாபிமான விவகாரங்களின் பொதுச் செயலர் மார்க் லோகாக், ”உலகின் ஏழை நாடுகளில் கொரோனா வைரஸின் மோசமான தாக்கங்களை காண முடியும்,” என்று தெரிவித்தார்.

    ”தற்போது செயலாற்றவில்லை என்றால், சண்டை, பசி, வறுமை ஆகியவை அதிகரிக்கும். பஞ்சம் பலமடங்கு பெருகும்.” என அவர் தெரிவித்தார்.

    மேலும் அதீத நடவடிக்கைகள் தேவை எனவும் கூறினார்.

    இந்த கொரோனா தொற்றால் அதிக பாதிப்புகளை சந்திக்கக்கூடிய மேலும் 9 நாடுகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. ஏற்கனவே அந்த பட்டியலில் 50க்கும் மேற்பட்ட நாடுகள் உள்ளன. ஒன்பது நாடுகளில் பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், ஜிம்பாப்வே ஆகிய நாடுகளும் அடங்கும்.

    ஏற்கனவே தங்கள் நாட்டில் இந்த நெருக்கடியை சமாளித்து வரும் நாடுகள் 900மில்லியன் டாலருக்கு மேல் ஏழை நாடுகளுக்கு உதவ உறுதியளித்துள்ளன என ஐநா தெரிவிக்கிறது.

  3. மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டம்

    ராமநாதபுரம் அருகே திணைக்குளம் கிராமத்தில் மதுக்கடையை திறப்பதை எதிர்த்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பெண்கள் போராட்டம்

    பட மூலாதாரம், பிபிசி தமிழ்

  4. அமெரிக்காவில் இலவச உணவளிக்கும் இந்தியர்கள்

    அமெரிக்காவின் சியாட்டல் நகரில் செயல்பட்டு வரும் இந்திய உணவகம் ஒன்று, மருத்துவர்களுக்கு தினசரி இலவச உணவுகளை விநியோகித்து வருகிறது.

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  5. சீறிப்பாயும் வேலையின்மை: இந்தியாவிலேயே புதுவை, தமிழகம் முதலிடம் - என்ன ஆனது?

  6. அதிகரிக்கும் வனவிலங்கு வேட்டை

    ஆஃப்ரிக்கா நாடான கென்யாவில் வைரஸ் தொற்று காரணமாக சுற்றுலாவுக்கு வருவோரின் எண்ணிக்கை கடுமையாக சரிந்துள்ளதால், வனவிலங்குகளை வேட்டையாடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் மற்றும் பாதுகாவலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    சுற்றுலாத் தொழில் முற்றிலும் முடங்கிப் போயிருப்பதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி சிரமப்படுவதாகவும், அதன் காரணமாக வனவிலங்குகளை வேட்டையாடி அதை உணவாக சாப்பிட்டு வருவதாகவும் லீவா வனவிலங்கு பாதுகாப்பு மண்டல அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

  7. குவியும் கூட்டம்

    திருவள்ளூர் மாவட்டத்தில் மதுபானக் கடைகளில் கூடியுள்ள மக்கள்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  8. திமுக கூட்டணி போராட்டம்

    தமிழகத்தில் மதுபானக் கடைகளை திறப்பதை கண்டித்து திமுக தலைவர் ஸ்டாலின் இல்லத்தில் நடைபெற்ற போராட்டம்

  9. தமிழகத்தில் திறக்கப்பட்ட மதுக்கடைகள்

    தமிழகத்தில் சென்னையை திவிர்த்து பிற மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில் கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த இருவர் முதல் இரு டோக்கன்களை பெற்று வரிசையில் நிற்கின்றனர்.

    மதுபான கடையில் முதல் டோக்கன் பெற்ற நபர்

    பட மூலாதாரம், பிபிசி தமிழ்

    இரண்டாம் டோக்கன் பெற்ற நபர்

    பட மூலாதாரம், பிபிசி தமிழ்

  10. தெற்காசிய நாடுகளில் என்ன நிலை?

    பாகிஸ்தான்

    பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் 1,049 பேருக்கு புதிதாக தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அதிகபட்சமாக 40 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானில் இதுவரை 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    மேலும் அந்நாட்டில் மே 10ஆம் தேதியிலிருந்து ரயில் சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள ஊழியர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

    வங்கதேசம்

    வங்கதேசத்திலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அங்கு இதுவரை 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    நேபாளம்

    நேபாளத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 82ஆக உயர்ந்துள்ளதையடுத்து அந்நாட்டில் மே 18ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இலங்கை

    இலங்கையில் இதுவரை 700க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் மேலும் அங்கு 8 உயிரிழந்துள்ளனர். மேலும் சிகிச்சை

  11. வந்துகொண்டிருக்கும் செய்தி,

    இந்தியாவில் கோவிட் 19ஆல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்து 952ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,783 ஆக அதிகரித்துள்ளது.

  12. பிரதமர் மோதி ஆற்றி வரும் உரை

    • உலக நாடுகளுக்கு இந்தியா தொடர்ந்து உதவிபுரிந்து வருகிறது மேலும் அதை தொடர்ந்து செய்வோம்.களைப்படைந்தவுடன் ஓய்வு என்பது இதற்கு தீர்வாக இருக்காது. இதை வெல்வதற்கு அனைவரும் சேர்ந்து போராட வேண்டும்.
    • இந்த கடினமான நேரத்தில் பிறருக்கு உதவ, சட்டம் ஒழுங்கை காக்க, தூய்மையை நிலைநாட்ட பலர் 24 மணிநேரமும் பணியாற்றி வருகின்றனர் அவர்கள் அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
    • சர்வதேச அளவிலோ நல்லது நாட்டிலோ யாருக்கு தேவையோ அல்லது யாரெல்லாம் நெருக்கடியில் இருக்கிறார்களோ அவர்களுக்கு எந்த வேறுபாடுமின்றி இந்தியா ஆதரவாக நிற்கிறது.
  13. வந்துகொண்டிருக்கும் செய்தி,

    புத்த பூர்ணிமாவையொட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோதி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

  14. விமானப் பயணக் கட்டணங்கள் குறைய வாய்ப்புள்ளதா?

    விமானப் பயணம்

    பட மூலாதாரம், Getty Images

    முடக்கநிலை முடிந்து உலகெங்கும் விமானங்கள் மீண்டும் இயங்கத் தொடங்கும் பொழுது விமானப் பயணக் கட்டணம் கட்டாயம் குறைய வேண்டும். எனினும் அதன் பின்பு குறைந்தது 50 சதவிகிதம் மீண்டும் அதிகரிக்கும் என்று இன்டர்நேஷனல் ஏர் டிரன்ஸ்போட் அசோசியேசன் எனும் சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பு தெரிவித்துள்ளது.

    ஊரடங்கு காரணமாக இயக்காமல் வைத்துள்ள தங்கள் விமானங்களை மீண்டும் பறக்கவிட வேண்டும் என்று விமான போக்குவரத்து நிறுவனங்கள் மிகவும் ஆவலாக இருப்பதால், விமானப் பயணம் தொடங்கும் பொழுது தேவைக்கு அதிகமான அளவில் விமானங்கள் இயக்கப்படும் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

    எவ்வாறாயினும் விமான பயணங்கள் மேற்கொள்வோர் எண்ணிக்கை மிகவும் குறைந்த அளவிலேயே இருக்கும் என்பதால் அந்த அழுத்தத்தின் காரணமாக விமான நிறுவனங்கள் பயண கட்டணத்தை குறைக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

  15. வந்துகொண்டிருக்கும் செய்தி, தற்போதைய நிலவரம்

    இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு தற்போது 33514 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

    corona update
  16. பரிசோதனை இலக்கை தொடர்ந்து தவறவிடும் பிரிட்டன்

    பிரிட்டனில் பரிசோதனை

    பட மூலாதாரம், AFP/Getty images

    நாளொன்றுக்கு ஒரு லட்சம் பரிசோதனைகளை செய்ய வேண்டும் என்ற இலக்கை பிரிட்டன் தொடர்ந்து நான்காவது நாளாக தவறவிட்டுள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 69,463 பரிசோதனைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    சமீபத்திய அரசு தரவுகள்படி ஐரோப்பாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30,000ஆக இருக்கும் முதல் நாடு பிரிட்டன் ஆகும்.

  17. கொரோனா வைரஸ்: அமெரிக்கா மீது தொடுக்கப்பட்ட ’மோசமான தாக்குதல்’ - டிரம்ப்

    trump

    பட மூலாதாரம், Getty Images

    கொரோனா வைரஸ் தொற்று பரவல், அமெரிக்கா மீது இதுவரை இல்லாத அளவு தொடுக்கப்பட்ட ஒரு மோசமான தாக்குதல் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    இதற்கு காரணம் சீனா என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் குண்டு வீசியது, இருபது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த 9/11 தாக்குதல் ஆகியவற்றைக் காட்டிலும் இது மோசமான தாக்குதல் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே சீனா இந்த கொரோனா தொற்று பரவலை சரியாக கையாளவில்லை என டிரம்ப் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், இந்த கருத்தையும் தெரிவித்துள்ளார்.

    ஆனால் அமெரிக்காவில் டிரம்ப் இதை சரியாக கையாள தவறிவிட்டார் என்பதிலிருந்து திசை திருப்பவே தங்கள் மீது குற்றம் சுமத்துவதாக சீனா தெரிவித்துள்ளது.

    சீனாவின் வுஹான் நகரில் தொடங்கப்பட்டதாக நம்பப்படும் இந்த கொரோனா தொற்று பரவலால் அமெரிக்காவில் இதுவரை 73000 பேர் உயிரிழந்துள்ளனர்.

  18. மீண்டும் திறக்கப்பட்ட முடிதிருத்தும் நிலையங்கள் - எச்சரிக்கைகள், கட்டுப்பாடுகள் என்ன?

    முடித்திருத்தும் இடம்

    பட மூலாதாரம், Getty Images

    கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் விதிகளை சமீபத்தில் தளர்த்திய நாடாக ஜெர்மனி மாறியுள்ளது. ஆனால் ஐரோப்பா முழுக்க முடி திருத்தும் நிலையங்கள் கவனமாக செயல்பட வேண்டிய தேவை எழுந்துள்ளது.

    காத்திருப்புக்கான பகுதி கிடையாது, பத்திரிகைகள் கிடையாது, நுனிகளை மட்டும் சீர் செய்வதற்கான கட்டிங் கிடையாது, வாடிக்கையாளருக்கும், முடி திருத்துபவருக்கும் முகக்கவசம் கட்டாயம்.

    ஜெர்மனியில் மார்ச் 23ல் இருந்து அமலில் இருந்த முடக்கநிலை முடிந்து சலூன்களை இப்போது திறக்க அனுமதி தரப் பட்டுள்ளது. ஆனால், வேலை செய்யும் முறை, வழக்கமான நடைமுறைகளில் இருந்து மாறியுள்ளது.

    ஜெர்மன் பொருளாதார மற்றும் சமூக நல விவகாரங்கள் அமைச்சகங்கள் இதற்கான விதிமுறைகளை அறிவித்துள்ளன. வாடிக்கையாளருக்கு இடையில் 1.5 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

  19. இன்று முதல் டாஸ்மாக் மது விற்பனை - கட்டுப்பாடுகள் என்ன?

    தமிழ்நாட்டில் இன்று மது விற்பனை துவங்குவதால் அதற்கான விரிவான ஏற்பாடுகளை மாநில அரசு அறிவித்துள்ளது. வயதின் அடிப்படையில் மது வாங்கவிருப்பவர்களுக்கான நேரக் கெடுவும் விதிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் மதுக் கடைகளைத் திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

    இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட பொதுநல மனு தள்ளுபடி செய்யப்பட்டு, பல்வேறு நிபந்தனைகளுடன் மதுக்கடைகளைத் திறக்க இந்த அனுமதி வழங்கப்பட்டது.

    • தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணி முதல் மாலை ஐந்து மணி வரை கடைகள் திறந்திருக்கும்.
    • இதில் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணிவரை மதுபானங்களை வாங்கலாம்.
    • 40 முதல் 50 வயது உடையவர்கள் பிற்பகல் ஒரு மணி முதல் மூன்று மணி வரை மதுபானங்களை வாங்கலாம்.
    • 40 வயதுக்கு கீழே உள்ளவர்கள் பிற்பகல் மூன்று மணி முதல் ஐந்து மணிவரை மதுபானங்களை வாங்கலாம்.
    • ஒவ்வொரு மதுபானக் கடையிலும் இரு கான்ஸ்டபிள்களும் 2 ஊர்க்காவல் படையினரும் இடம்பெற்றிருப்பார்கள்.
    • சாத்தியமான இடங்களில் கூடுதல் கவுண்டர்களைத் திறக்கவும் கூறப்பட்டுள்ளது.
    • ஒவ்வொரு ஊராட்சிக்கும் 2 பறக்கும்படையினரும், ஒவ்வொரு நகரத்திலும் 4 பறக்கும் படையினரும் காவல் பணியில் ஈடுபடுத்தப்படவிருக்கிறார்கள்.
    • மது வாங்கச் செல்பவர்கள் டாஸ்மாக் கடைக்கு அரை கி.மீ.க்கு முன்பாகவே வாகனங்களை, வரிசையாக நிறுத்தி விட்டுச் செல்ல வேண்டும்.

    சென்னை நகரை ஒட்டியுள்ள, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டப் பகுதிகளில் மதுபானக் கடைகள் திறக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    டோக்கன் விநியோகம் செய்து மதுவை விற்க வேண்டும், சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளன.

    பணம் கொடுத்து வாங்குபவர்களுக்கு ஒரு பாட்டில் மதுபானமும் மின்னணு பணப் பரிவர்த்தனை மூலம் வாங்குவோருக்கு இரண்டு பாட்டில்கள் வழங்கலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    மொத்தமாக யாருக்கும் மதுவை விற்பனை செய்யக்கூடாது எனவும் அப்படி விற்பனைசெய்யும் கடைகளை மூட வேண்டுமெனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    ஆன்லைனிலும் டாஸ்மாக் நிறுவனம் மதுவை விற்கலாம் எனவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. எனினும், ஆன்லைனில் மது விற்பனையைச் செய்ய முடியாது என அரசுத் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

    tasmac liquor sales tamil nadu coronavirus alcohol lockdown tamilnadu

    பட மூலாதாரம், Getty Images

  20. நேற்று நடந்தவை - சில முக்கியச் செய்திகள்

    • கோவிட் -19க்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாகக் கூறிவந்த போலி மருத்துவர் க. திருத்தணிகாச்சலம் தமிழக காவல்துறையால் புதனன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
    • கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக அமெரிக்க அரசு அமைத்திருந்த சிறப்பு குழுவை கலைக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
    • சீனாவில் கொரோனா வைரஸ் பரவலின் மையமாக விளங்கிய ஹூபே மாகாணத்தில் பள்ளிகள் மீண்டும் இயங்கத் தொடங்கின.
    • ஐரோப்பிய நாடுகளிலேயே கொரோனா வைரஸால் அதிகமான உயிரிழப்பை சந்தித்த நாடாகவும், உலகளவில் அமெரிக்காவிற்கு அடுத்தபடி அதிக பலி எண்ணிக்கை கொண்ட நாடாகவும் பிரிட்டன் உருவெடுத்துள்ளது.
    • தமிழகத்தில் இன்று மது விற்பனை தொடங்கவுள்ள நிலையில் மதுபானங்கள் மீதான கலால் வரியை 15 சதவீதம் உயர்த்தி உள்ளது தமிழக அரசு.
    • இரான் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது.
    • கொரோனாவைரஸ் குறித்து ஆய்வில் ஈடுபட்டிருந்த ஆராய்ச்சியாளர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார், அவரை சுட்டவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
    coronavirus world news

    பட மூலாதாரம், Getty Images