தமிழகத்தில் ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்ட பெரும்பாலான நபர்கள் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. கொரோனா சமயத்தில் விமானங்கள் எப்படி இயங்குகின்றன?

  2. சீனா வுஹான்: பள்ளிக்கு திரும்பிய 57ஆயிரம் மாணவர்கள்

    கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய வுஹான் மாகாணத்தில் இத்தனை நாட்களாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் மீண்டும் இயங்க தொடங்கி உள்ளன.

    தேர்வுகளுக்காக தயாராகும் மூத்த மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு திரும்பி இருக்கிறார்கள். 57,000 மாணவர்கள் பள்ளிக்கு வந்திருப்பதாக கூறுகிறது சீன அரசு ஊடகம்.

    சீனா வுஹான்: பள்ளிக்கு திரும்பிய 57ஆயிரம் மாணவர்கள்

    பட மூலாதாரம், Getty Images

    சீனா வுஹான்: பள்ளிக்கு திரும்பிய 57ஆயிரம் மாணவர்கள்

    பட மூலாதாரம், Getty Images

    சீனா வுஹான்: பள்ளிக்கு திரும்பிய 57ஆயிரம் மாணவர்கள்

    பட மூலாதாரம், Getty Images

  3. மது வாங்க வரிசையில் நிற்கும் மக்கள்

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    ஹரியானா மாநிலம் குருகிராமில் மதுவாங்க வரிசையில் நிற்கும் மக்கள்.

  4. வந்துகொண்டிருக்கும் செய்தி, தமிழ்நாட்டில் மதுபானங்கள் மீது கூடுதல் வரி

    நாளை தமிழ்நாடு முழுவதும் மதுபானக் கடைகள் திறக்கவிருக்கும் நிலையில், மதுபானங்கள் மீதான ஆயத் தீர்வை வரி 15 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், சாதாரண வகை மதுபானத்தின் 180 மி.லி. பாட்டிலின் விலை 10 ரூபாய் அளவுக்கும்நடுத்தர மற்றும் ப்ரீமியம் வகை மதுபானத்தின் 180 மி.லி. பாட்டிலின் விலை 20 ரூபாய் அளவுக்கும் அதிகரித்துள்ளது.

  5. உலகில் சில விமானங்கள் மட்டும் இயங்குவது எப்படி?

    உலகமே முடங்கியிருக்கும் சூழலில் சில பகுதிகளில் மட்டும் விமானம் இயக்கப்படுகிறது. அது எப்படி இயங்குகிறது? என்ன நடக்கிறது? என்பதை விளக்குகிறது இந்த காணொளி.

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  6. வன உயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு அச்சுறுத்தலான கொரோனா

    வன உயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு அச்சுறுத்தலான கொரோனா

    பட மூலாதாரம், Getty Images

    கொரோனாகாரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் சுற்றுச்சூழல் மேம்பட்டிருக்கிறது என பேசப்பட்டு வரும் நிலையில், கொரோனா காரணமாக வன உயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் தடைப்படுவதாகக் கூறுகிறார் ஆப்ரிக்க வன உயிர் பாதுகாப்பு அறக்கட்டளையின் தலைவர்.

    ஆப்ரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தாலும், ஆப்ரிக்காவின் 30 பில்லியன் டாலர்கள் மதிப்புடைய சுற்றுலா துறையை முற்றும் முழுவதுமாக சிதைத்திருக்கிறது கொரோனா.

    பிபிசியிடம் பேசிய அந்த அறக்கட்டளையின் தலைவர் சார்லி,சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்ததன் காரணமாக தனது அமைப்புக்கு வரும் நன்கொடை 2 மில்லியன் டாலர்கள் அளவில் குறையும் என்கிறார்.

    இதன் காரணமாக வன பாதுகாப்பு பணியில் உள்ள ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக வேட்டையாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் கூறுகின்றனர்.

  7. இரண்டு மீட்டர் இடைவெளிக்கு பின்னணியில் உள்ள அறிவியல் என்ன?

    சித்தரிப்பு

    பட மூலாதாரம், Getty Images

    பணியிடங்களில் ஊழியர்கள் இரண்டு மீட்டர் இடைவெளியை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட வேண்டுமா என்பது குறித்து உலகில் பல நாடுகளில் விவாதிக்கப்படுகிறது. சமூக இடைவெளியை அலுவலகங்களில் பின்பற்றுவதன் மூலம் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என பலர் நம்புகின்றனர்.

    அதே நேரம், மற்றவர்களிடம் இருந்து விலகி இருப்பது எப்போதும் சாத்தியமில்லை என்பதால், முடக்கநிலைக்குப் பிறகு பணியிடங்களுக்கு திரும்பி செல்லும்போது சமூக இடைவெளியை பின்பற்றவேண்டியது அவசியமில்லை என அலுவலகங்கள் முடிவுசெய்தால் தினசரி வாழ்க்கை எளிதாக இருக்கும் என்றும் சிலர் கருதுகின்றனர்.

    விரைவில் இது தொடர்பாக அறிவியலாளர்களின் சமீபத்திய ஆய்வுகள் வெளிவர உள்ளன. இந்த ஆய்வறிக்கை வைரஸ் பரவுவது குறித்து இது வரை நாம் தெரிந்துகொள்ளத பல அபாயகங்களை சுட்டிக்காட்டும். இது பலருக்கு வைரஸ் குறித்த பயத்தை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

  8. உயிரிழப்புகளில் பிரிட்டன் இரண்டாம் இடம்

    ஐரோப்பிய நாடுகளிலேயே கொரோனா வைரஸால் அதிகமான உயிரிழப்பை சந்தித்த நாடாக பிரிட்டன் உருவெடுத்துள்ளது.

    இதுவரை அதிகமான உயிரிழப்புகளை சந்தித்த நாடாக இருந்த இத்தாலியில் 29,315 பேர் கோவிட்- 19 தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

    ஆனால் பிரிட்டனில் சமீபத்திய நிலவரப்படி 29,501 பேர் உயிரிழந்துள்ளனர்.

    உலகளவில் அமெரிக்காவிற்கு அடுத்தபடி அதிகமான உயிரிழப்புக்களை சந்தித்த நாடு ஆகியுள்ளது பிரிட்டன்

  9. வந்துகொண்டிருக்கும் செய்தி, இந்தியாவின் அண்மைய நிலவரம்

    இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்குகிறது.

    தற்போதைய நிலவரப்படி 49,391 பேர் கோவிட்- 19 தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை தெரிவித்துள்ளது.

    இவர்களில் 1694 பேர் உயிரிழந்துள்ளனர். 14182 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 33,514 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

    இந்திய நிலவரம்
  10. சென்னையில் கோவிட்-19 தொற்று அதிகம் பரவுவது ஏன்?

    கொரோனா வைரஸ் பரவல் மற்றும் அரசின் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மே 5 மாலை 6 மணிக்கு தொலைக்காட்சி மூலம் தமிழக மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.

    corona in chennai tamil nadu edappadi palanisami

    பட மூலாதாரம், Getty Images

  11. ஹூபேவில் பள்ளிகள் திறப்பு

    சீனாவில் கொரோனா வைரஸ் பரவலின் மையமாக விளங்கிய ஹூபே மாகாணத்தில் பள்ளிகள் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளன.

    முதல் கட்டமாக 9 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் வகுப்புகளுக்கு திரும்பியுள்ளனர்.

    அவர்கள் இந்தக் கோடைக்காலத்தில் முக்கியமான தேர்வுகளை எழுத உள்ளனர். சீனாவின் பிற பகுதிகளில் உள்ள பள்ளிகள் மார்ச் மாதமே இயங்கத் தொடங்கிவிட்டன.

  12. சிறப்பு குழுவை கலைக்க உள்ள டிரம்ப்

    கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக அமெரிக்க அரசு அமைத்திருந்த சிறப்பு குழுவை கலைக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    இன்னும் சில வாரங்களுக்குள் இக்குழு கலைக்கப்படும் என துணை அதிபர் மைக் பென்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார். உலகிலேயே அதிகமானவர்கள் கோவிட் -19 தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நாடான அமெரிக்காவில் இதுவரை சுமார் 12 லட்சம் பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    "துணை அதிபர் மற்றும் சிறப்பு நடவடிக்கை குழுவினர் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால் தற்போது நாம் வேறு கண்ணோட்டத்தில் பார்க்கிறோம். பாதுகாப்பு மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவது ஆகியவற்றை கொண்டுள்ள கண்ணோட்டம் அது. அதற்காக வேறு ஒரு குழு அமைக்கப்படலாம்," என்று தெரிவித்துள்ளார் டிரம்ப்.

    எனினும் நவம்பரில் நடக்கவுள்ள அதிபர் தேர்தலை கருத்தில்கொண்டு, அமெரிக்காவின் பொருளாதாரத்திற்காக பொது சுகாதாரத்தில் அமெரிக்க அதிபர் சமரசம் செய்து கொள்வதாக அவரது விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

    trump

    பட மூலாதாரம், Getty Images

  13. நேற்று நடந்தவை - சில முக்கிய தகவல்கள்

    கொரோனா விழிப்புணர்வு

    பட மூலாதாரம், Getty Images

    கொரோனாவுக்கான தடுப்பு மருந்துக்கான ஆரம்ப கட்ட ஆய்வில் இந்திய மருந்து நிறுவனங்கள் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் செவ்வாயன்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஏறத்தாழ 30 தடுப்பு மருந்துகள் வெவ்வேறு நிலையில்உள்ளதாகவும், சில பரிசோதனை கட்டத்தை அடைந்து விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

    கொரோனா நிவாரணத் தொகை அளித்ததால் ஏற்பட்ட நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க நடப்பாண்டில் இரண்டாம் காலாண்டில் மட்டும் 3 லட்சம் கோடி டாலர் கடன் வாங்க இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    மக்கள்தொகை நெருக்கம் அதிகம் உள்ள நகரம் என்பதாலும், பொது கழிப்பறைகளை மக்கள் அதிகம் பயன்படுத்துவதாலும் கொரோனா தொற்று சென்னை மாநகரத்தில் வேகமாக பரவி உள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செவ்வாயன்று தெரிவித்தார்.

    சிங்கப்பூரில் செவ்வாய் ஒரே நாளில் மட்டும் புதிதாக 632 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருந்தது உறுதியானது. புதிதாக நோய்த் தொற்றியோரில் 9 பேர் மட்டுமே சிங்கப்பூர் குடிமக்கள் ஆவர். மற்ற அனைவரும் அந்நியத் தொழிலாளர்கள்.

    கொரோனா பரவல் தடுப்பு முடக்கநிலைகாரணமாக இந்தியா திரும்ப முடியாமல் பல்வேறு நாடுகளில் தவிப்பவர்களை மீட்க மே 7 முதல் மே 13ஆம் தேதி வரை 64 விமானங்கள் இயக்கப்படும் என்று விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரிதெரிவித்துள்ளார்.

    கொரோனா தொற்று காரணமாக இலங்கையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது.

    பாரிஸ் அருகே டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி நிமோனியா இருப்பதாக சிகிச்சை பெற்ற நபருக்கு உண்மையிலேயே கொரோனா இருந்திருக்கிறது என்கிறார் அந்த நோயாளரின் மருத்துவர். அப்படியானால் இப்போது கூறப்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே கொரோனாபிரான்ஸிற்கு வந்திருக்கிறது.

    நியூசிலாந்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்று புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. ஏற்கனவே கடந்தவாரம் நியூசிலாந்து அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தியிருந்தது.

  14. வணக்கம் நேயர்களே!

    கொரோனா வைரஸ் தொடர்பான தமிழக, இந்திய மற்றும் சர்வதேச செய்திகளை உங்களுக்காக பிபிசி டெல்லி அலுவலகத்திலிருந்து செய்தியாளர்கள் விஷ்ணுப்ரியா ராஜசேகர் மற்றும் விக்னேஷ் ஆகியோர் தொகுத்து வழங்குகிறோம்.

    கோவிட்-19 கொரோனா தொற்று தொடர்பான அனைத்து செய்திகளையும் இங்கு உடனுக்குடன் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.