You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

இந்தியாவில் 40 ஆயிரத்தை கடந்தது கொரோனா வைரஸ் பாதிப்பு - ஒரே நாளில் 83 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37,776ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. எனக்கு லிட்டர் கணக்கில் ஆக்சிஜன் தேவைப்பட்டது - பிரிட்டன் பிரதமர்

    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது, தனக்கு ஏதேனும் நிகழ்ந்தால் அடுத்து என்ன செய்வது என்பது குறித்து திட்டம் போடப்பட்டதாக தெரிவித்துள்ளார பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்.சன் பத்திரிகைக்கு பேட்டி அளித்த அவர், தன்னை உயிரோடு வைத்திருக்க, லிட்டர் கணக்கில் ஆக்சிஜன் தேவைப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட போரிஸ் ஜான்சன், லண்டனில் உள்ள புனித தாமஸ் மருத்துவமனையில், 3 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இதில் இருந்து எப்படி மீண்டு வரப் போகிறேன் என்று என்னை நானே கேட்டுக் கொண்டிருந்தேன் என்று அவர் தெரிவித்தார்.

    இருதினங்களுக்கு முன்பு பிரட்டன் பிரதமர் ஜான்சனுக்கும், அவரது வருங்கால மனைவியான கேரி சிமண்டசுக்கும் ஆண் குழந்தை பிறந்தது.தங்களது தாத்தாக்கள மற்றும் தனக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக குழந்தைக்கு வில்ஃப்ரெட் லாரி நிக்கோலஸ் ஜான்சன் என்று பெயரிட்டுள்ளதாக கேரி சிமண்டஸ் இன்ஸடாகிராமில் பதிவிட்டுள்ளார்.

  2. நேற்று நடந்த சில முக்கிய நிகழ்வுகள்

    கொரோனா வைரஸ் தொற்று குறித்து நேற்று நடந்த சில முக்கிய நிகழ்வுகளை தற்போது பார்க்கலாம்.

    • கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிமாநிலங்களில் அல்லது வெளி நாடுகளில் தங்கியிருக்கும் தமிழர்கள், தங்களது சொந்த ஊர் திரும்ப விரும்பினால், http://nonresidenttamil.org என்ற இணைய படிவம் வாயிலாக பதிவு செய்யலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
    • சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றிய 102 வயது மூதாட்டி சிகிச்சைக்குப் பின் முழுமையாக குணமடைந்துள்ளார்.
    • தமிழகத்தில் புதிதாக 231 நபர்களுக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2757ஆக உயர்ந்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    • ரஷ்ய பிரதமருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை தொடர்ந்து அங்கு ரஷ்யாவின் கட்டுமானத்துறை அமைச்சர் விளாதிமிர் யகுஷெவ்-க்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.
    • வளைகுடா நாடுகளில் சிக்கி தவிக்கும் இந்திய குடிமக்களைக் காப்பாற்ற 14 போர் கப்பல்கள் தயார் நிலையில் இருப்பதாக இந்திய கப்பல் படை அதிகாரியான ஜி. அஷோக் குமார் ஏஎன்ஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.
    • விமான நிலையங்களில் சமூக விலகலை கடைப்பிடிப்பது இயலாத காரியமென லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தின் தலைவர் கூறி உள்ளார்.
  3. காலை வணக்கம் நேயர்களே

    பிபிசி தமிழின் நேரலை பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறேன். கொரோனா வைரஸ் தொடர்பான தமிழக, இந்திய மற்றும் சர்வதேச செய்திகளை உங்களுக்காக பிபிசி டெல்லி அலுவலகத்திலிருந்து செய்தியாளர்கள் மு. நியாஸ் அகமதுவும், அபர்ணா ராமமூர்த்தியும் தொகுத்து வழங்குகிறோம்கொரோனா தொற்று தொடர்பான அனைத்து செய்திகளையும் இங்கு உடனுக்குடன் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.