You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

கொரோனா: “வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களை அழைத்து வர கடற்படை கப்பல்கள் தயார்”

கொரோனா தொற்றால் இதுவரை உலகில் 2 லட்சத்து, 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், கோவிட்-19 நோய்த்தொற்றில் இருந்து உலக அளவில் 10 லட்சம் குணமாகியுள்ளனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைகழக தரவுகளின்படி, உலக அளவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளது.

  2. மே 4 முதல் மலேசியாவில் வர்த்தக நிறுவனங்களை திறக்க அனுமதி

    வரும் மே 4-ஆம் தேதியிலிருந்து பெரும்பாலான தொழில் நிறுவனங்களை திறக்க அனுமதிக்க உள்ளதாக மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

    ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைகழக தரவுகளின்படி, இதுவரை மலேசியாவில் 6000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 102 பேர் மரணமடைந்துள்ளனர்.

  3. பாகிஸ்தானில் மேலதிக தொழிற்சாலைகள் செயல்பட அனுமதி

    பாகிஸ்தானில் மேலதிக வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளை திறக்க அனுமதி அளிக்கப்படும் என அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளதாக டான் நியூஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

    தற்போது வரை அந்நாட்டில் 16,697 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.385 பேர் மரணமடைந்துள்ளனர்.

    அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடும் போது பாகிஸ்தானில் கொரோனாவின் தீவிரம் குறைவாகவே இருப்பதாக இம்ரான் கான் முன்னர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் இரான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் தலைவர்களோடு ஆலோசித்து இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

  4. தென்கொரியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து கட்டுக்குள் இருக்கிறது

    தென்கொரியாவில் நேற்று மீண்டும் 9 புதிய கொரோனா தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் எட்டு பேர் வெளிநாடுகளிலிருந்து தென்கொரியா வந்தவர்கள் என நம்பப்படுகிறது.

    இரண்டரை மாதங்கள் கழித்து நேற்றுதான் அந்த நாட்டில் உள்ளூர் கொரோனா பரவல் தொற்று ஏதும் பதிவாகவில்லை.

    இதுவரை தென்கொரியாவில் 10,774 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 248 பேர் மரணமடைந்துள்ளனர்

  5. சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்

  6. கொரோனா இல்லாத மாவட்டமாக மாறிய தூத்துக்குடி

    தமிழகத்தில் தூத்துக்குடியை சேர்ந்த 72 வயது கடைசி நோயாளி குணமடைந்து வீடு திரும்புவதால் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக தூத்துக்குடி மாறியுள்ளது.

    ஏற்கனவே ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்கள் கொரோனா இல்லாத மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டன.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு ஒன்று கூட பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இதனிடையே, பெருநகர சென்னை மாநகராட்சியில் 32 கட்டுப்பாட்டு மையங்கள் உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

  7. சீனாவில் அண்மைய நிலவரம் என்ன?

    சீன பெருநிலப்பரப்பில் நேற்று கொரோனா வைரஸ் புதிதாக மேலும் 12 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    அதற்கு முந்தைய நாள் பாதிப்பு எண்ணிக்கையை விட இது 4 கூடுதலாகும்.

    அதேவேளையில் சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. சீனாவில் இதுவரை கொரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 4,633-ஆக உள்ளது.

    சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82, 874-ஆக உள்ளது. அதில் 90 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்.

  8. நேற்று நடந்த சில முக்கிய நிகழ்வுகள்

    • அறிவியல் உலகில் இருந்து ஒரு நற்செய்தியாக, கோவிட்-19 நோய்தொற்றில் இருந்து உயிர்களை காப்பாற்ற ஒரு மருந்து உதவக்கூடும் என அமெரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
    • .தென் கொரியாவில் 75 நாட்களுக்கு பிறகு யாருக்கும் புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
    • மாலத்தீவில் கொரோனா தொற்றால் முதன்முறையாக ஒருவர் உயிரிழந்தார்.
    • பிரேசிலில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று மட்டும் புதிதாக 6,276 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
    • சிங்கப்பூரில் மேலும் 528 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு, பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கையானது 16,169 ஆக அதிகரித்தது.
    • கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்துவிட்டாலும், இன்னும் சில காலலத்துக்கு மலேசியர்கள் வெளிநாட்டுப் பயணத்தை தவிர்த்தல் நல்லது என அரசு அறிவுறுத்தி உள்ளது.
    • இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1718 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    • இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமான மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10,000-ஐ கடந்துள்ளது.
    • தமிழகத்தில் நேற்று மட்டும் 161 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.
    • பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம், கொரோனா செய்திகள் அனைத்தும் ஒரே இணைப்பில்

      சர்வதேச அளவிலும், இந்தியா மற்றும் தமிழகத்திலும் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக நடக்கும் முக்கிய தகவல்களை இந்தப் பக்கத்தில் பிபிசி தமிழில் தொகுத்து வழங்குகிறோம்.

      தமிழகம் முதல் அமெரிக்கா வரை நடக்கும் அனைத்தும் தகவல்களும் இங்கு ஒளி, ஒலி, எழுத்து மற்றும் வரைகலை ஆகிய வடிவங்களில் தொகுத்திருக்கிறோம்.

      இந்நாள் இனிய நாளாக அமையட்டும்.