கொரோனா வைரஸ் பாதிப்பு: இந்தியாவில் கல்லூரிகள் தொடங்குவது எப்போது?
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், மே 3க்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
கொரோனா ஊரடங்கு: செல்லப்பிராணிகளை வாங்க இது சரியான நேரமா?
பட மூலாதாரம், Getty Images
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பிரிட்டனில் மக்கள் செல்லப்பிராணிகளாக நாய்க்குட்டிகளை அதிகம் வாங்க முயற்சிக்கின்றனர்.
ஆனால் நாய்க்குட்டிகள் வாழ்க்கையை அனுபவிக்க வாங்க வேண்டும், கொரோனா வைரஸின் காரணமாக வாங்கக்கூடாது என பிரிட்டனின் நாய்கள் நல அமைப்பான கென்னல் க்ளப் கூறியுள்ளது.
கலாசார புரட்சிக்குப் பின் முதல் முதலாக தள்ளிவைக்கப்பட்ட சீன மாநாடு
பட மூலாதாரம், EPA
கலாசார புரட்சிக்குப் பின் முதல் முறையாக சீன மாநாடு ஒன்று தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சீன தேசிய மக்கள் காங்கிரஸ் கூட்டம் மார்ச் 5ஆம் தேதி நடப்பதாக இருந்தது. ஆனால், கொரோனாவின் காரணமாக அந்த மாநாடு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
இப்போது மெல்ல அங்கு இயல்பு நிலை திரும்புவதை அடுத்து அந்த வருடாந்திர மாநாடு மே 22 ஆம் தேதி நடக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் 1966 -76வில் ஏற்பட்ட கலாசார புரட்சிக்குப் பின் இந்த வருடாந்திர கூட்டம் தள்ளிவைக்கப்படுவது இதுவே முதல் முறை.
இந்தியாவில் அண்மைய தகவல் என்ன?
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்து, 332-ஆக (31,332) அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதேவேளையில், இந்தியாவில் கோவிட்-19 நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1007-ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை நோய்தொற்றில் இருந்து 7,695 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
பட மூலாதாரம், Getty Images
கொரோனா வைரஸ்: உங்கள் காதலனையோ, காதலியையோ பிரிந்து இருக்கிறீர்களா?, இந்தக் கட்டுரை உங்களுக்கானது
பட மூலாதாரம், Getty Images
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கைகளால் ஏராளமான மக்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை சந்திக்க முடியாமல் தொலைத் தொடர்பு முறைகளில் உறவுகளைப் பேணி வருகின்றனர்.
இந்நிலையில், நாம் தொலைபேசி அல்லது வீடியோ செயலிகள் மூலம் எந்த அளவுக்கு தொடர்புகளை அர்த்தம் உள்ளதாக ஆக்கிக் கொள்ள முடியும்?
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்
YouTube பதிவின் முடிவு
``கொரோனா காலத்திலும் இட்லி 1 ரூபாய்தான் ``
கொரோனா காரணமாக உணவுப் பொருட்களின் விலை அதிகரித்திருந்தாலும், 1 ரூபாய் விலைக்கே இட்லிகளை விற்று வருகிறார் 85 வயதான கமலாத்தாள் பாட்டி.
கொரோனா வைரஸ் விளையாட்டை தடை செய்த சீனா
பட மூலாதாரம், Steam
கொரோனா வைரஸை மையக்கருவாக கொண்ட விளையாட்டை தடை செய்துள்ளது சீன அரசு.
கொரோனாவால் தாக்கப்பட்ட ஜோம்பிகள் (Zombies) வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதை தடுப்பதுதான் விளையாட்டின் மைக்கரு. சீன கொடி வண்ணத்தில் சிவப்பாகவும், கொடியில் நட்சத்திரங்கள் உள்ள இடத்தில் கொரோனாவைரஸ் வடிவத்தை வைத்தும் இந்த விளையாட்டு வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
அதுபோல தைவான் சீனாவின் பகுதி அல்ல, ஹாங்காங்கை விடுதலை செய் போன்ற அரசியல் விஷயங்களும் இந்த விளையாட்டில் இடம் பெற்றிருக்கிறது. இதன் காரணமாகவே இந்த மொபைல் விளையாட்டு தடை செய்யப்பட்டிருக்கிறது.
கொரோனா வைரஸ்: வியட்நாம் போரில் மாண்டவர்கள் எண்ணிக்கையை விஞ்சிய அமெரிக்கா, அமெரிக்காவில் கொரோனாவால் 10 லட்சம் பேர் பாதிப்பு, 58 ஆயிரம் பேர் பலி
பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவில் கொரோனாவால் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வியட்நாம் போரில் இறந்தவர்களின் எண்ணிக்கையைவிட கொரோனாவால் பலியான அமெரிக்கர்களின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது.
வியட்நாம் போரில் மாண்டவர்கள் எண்ணிக்கை: 58,220. கொரோனாவால் இப்போது வரை அமெரிக்காவில் 58, 995 பேர் பலியாகி உள்ளனர்.
வெள்ளை மாளிகையின் மருத்துவ ஆலோசகர் மருத்துவர் அண்டனி ஃபெளசி கொரோனா தாக்கத்திலிருந்து நாம் வெளியேற வெகுதூரம் பயணிக்க வேண்டும் என கூறி உள்ளார்.
ஆராய்ச்சியாளர்கள் மருந்து கண்டுபிடிக்காவிட்டால் இந்த இலையுதிர்காலம் அமெரிக்கர்களுக்கு மிக மோசமான காலமாக அமையும் என கூறி உள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம், கொரோனா செய்திகள் அனைத்தும் ஒரே இணைப்பில்
பட மூலாதாரம், Getty Images
சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக நடக்கும் முக்கிய தகவல்களை இந்தப் பக்கத்தில் பிபிசி செய்தியாளர்களான சிவக்குமாரும், நியாஸ் அகமதுவும் தொகுத்து வழங்குகிறோம்.
தமிழகம் முதல் அமெரிக்கா வரை நடக்கும் அனைத்தும் தகவல்களும் இங்கு ஒளி, ஒலி, எழுத்து மற்றும் வரைகலை ஆகிய வடிவங்களில் தொகுத்திருக்கிறோம்.
இந்நாள் நன்னாள் ஆகட்டும்.
நேற்று நடந்த சில முக்கிய தகவல்கள்:
போர்ச்சுகல் முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள அவசரநிலை மே இரண்டாம் தேதி முதல் அன்று முடிவுக்கு வரும் என்று அந்நாட்டின் அதிபர் மார்செலோ ரெபெலோ டிசோசா அறிவித்துள்ளார். 24 ஆயிரத்து 322 பேர் கோவிட்- 19 தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள போர்ச்சுக்கல் நாட்டில் 948 பேர் உயிரிழந்துள்ளனர்;
நெதர்லாந்தில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 171 அதிகரித்து 38,416 ஆக உள்ளது. இதுவரை அங்கு 4,566 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்கா: மே நான்காம் தேதி முதல் தங்கள் நிறுவனத்தின் விமானங்களில் பயணிக்கும் பயணிகள் முகக் கவசம் அணிவது கட்டாயம் என்று அமெரிக்காவின் ஜெட் ஏர்வேஸ் விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.அமெரிக்க விமான சேவை நிறுவனம் ஒன்று இவ்வாறு முகக் கவசங்களை கட்டாயமாக்குவது இதுவே முதல் முறை.
ரஷ்யாவில் புதிதாக 1411 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருப்பதாக செவ்வாய்க்கிழமையன்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் அங்கு மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 93, 558 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை அங்கு கோவிட்- 19 தொற்றின் காரணமாக 867 பேர் உயிரிழந்துள்ளனர்.
சிங்கப்பூரில் நேற்று புதிதாக 528 பேருக்கு கிருமித் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 14,951 ஆக அதிகரித்துள்ளது.
மலேசியாவில் நேற்று புதிதாக 31 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் 75 நோயாளிகள் குணமடைந்திருப்பதாக நிர்வாகத் தலைநகரான புத்ரா ஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.
தமிழ்நாடு:கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை, செறுவல்லூர், புலியூர்சாலை, பளுகல் ஆகிய பகுதிகளில் பெரும்பாலான கிராமங்களில்சாலையின் ஒரு பகுதி தமிழக பகுதியாகவும் மற்ற பகுதி கேரளப் பகுதியாகவும் உள்ளது.கேரளாவில் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில் தமிழக போலீசார் திடீரென தமிழகத்திலிருந்து கேரளாவை இணைக்கும் கிராமப்புறச் சாலைளை தடுப்பு வேலிகள் அமைத்ததுடன் அந்த வழிகளையும் மண் கொட்டி குவித்து சாலைகளை முற்றிலுமாக அடைத்துள்ளனர்.