கொரோனா வைரஸ் பாதிப்பு: இந்தியாவில் கல்லூரிகள் தொடங்குவது எப்போது?

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், மே 3க்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. தாயை காண 480கிமீ சைக்கிள் பயணம் - மகனை கண்டதும் உயிரைவிட்ட தாய்

    புதுச்சேரிக்கு உட்பட்ட ஏனாம் பகுதியில் உடல்நிலை பாதித்த தாயைக்காண 480 கிமீ தூரம் சைக்கிள் மூலம் தனது மனைவியுடன் பயணித்துள்ளார் கூலித்தொழிலாளி ஒருவர். ஆனால் மகனை பார்த்த சில நிமிடங்களில் அந்த தாயார் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    உயிருக்கு போராடிய தாய்

    ஆந்திர மாநிலத்தால் சூழப்பட்டுள்ள புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட ஏனாம் பகுதியில் வசித்து வரும் 27 வயது ரேவுஸ்ரீதனு என்பவர் தனது மனைவி லட்சுமியுடன் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தங்கி கூலித்தொழில் செய்து வருகிறார். இதனிடையே புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவரது தாயார் மகாலட்சுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி வருவதாக உறவினர்கள் மூலம் தகவல் கொடுக்கப்பட்டது.

    இதனையடுத்து, போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தினால் தனது தாயைக் காண்பதற்கு ரேவுஸ்ரீதனு அவரது மனைவியுடன்தனித்தனி சைக்கிள் மூலம் ஐதராபாத்தில் இருந்து யானம் செல்ல தொடங்கினர். ஊரடங்குகாரணமாகபல்வேறு இடர்பாடுகளுக்கு இடையே பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் உதவியால் 480 கிமீ பயணம் செய்து, 4 நாட்களுக்குப் பிறகு புதுச்சேரி யானம் பகுதிக்கு வந்து சேர்ந்தார். பிறகு அவர்கள் இருவரையும் தனிமைப்படுத்தி பரிசோதனை மேற்கொண்ட பிறகு தாயைப் பார்க்க அனுமதித்தனர். ஆனால், மகனை பார்த்த சில நிமிடங்களில் அவரது தாயார் மகாலட்சுமி உயிரிழந்துள்ளார்.

    மகனின் கண்ணீர்

    இதுகுறித்து மகன் ரேவுஸ்ரீதனு கூறியதாவது, "எனதுதாயார் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதை அறிந்தது,நானும் எனது மனைவியும் சைக்கிள் மூலமாக யானம் வந்து சேர்ந்தோம். வெளி மாநிலத்திலிருந்து வந்த காரணத்தினால் எங்களை மருத்துவபரிசோதனை செய்து, இரவு நேரம் முழுவதும் தனிமைப்படுத்தினர். பிறகு மறுநாள் காலையில் எனது தாயைப் பார்க்க அனுமதித்தனர். எனது தாயைச் சந்தித்த சிறிது நேரத்தில்அவர் உயிரிழந்துவிட்டார். இதனைத்தொடர்ந்து,தாயாருக்கு இறுதி காரியங்கள் செய்ய அனுமதித்தபிறகு, எங்களை தற்போது தனிமைப்படுத்தியுள்ளனர். முடியாத காலத்தில் தாயாருடன் இருக்க முடியாமல் போனது மிகுந்த வேதனையளிப்பதாக," கண்ணீர் மல்க தெரிவித்தார்.

  2. பிரிட்டன் பிரதமருக்கு ஆண் குழந்தை

    போரிஸ் ஜான்சன்

    பட மூலாதாரம், PA Media

    பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் அவருடன் திருமணம் செய்துகொள்ள நிச்சயமான கேரி சைமண்ட்ஸுக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

    போரிஸ் ஜான்சன் கொரோனா தொற்றுக்காக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு திங்களன்று பணிக்கு திரும்பியுள்ளார்.

    கேரிக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    55 வயதாகும் போரிஸ் ஜான்சனும், 32 வயது கேரியும் கோடைக்காலத்தின் தொடக்கத்தில் தங்களுக்கு குழந்தை பிறக்கவிருப்பதாக அறிவித்தனர்.

    மேலும் கடந்த ஆண்டின் இறுதியில் அவர்களின் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

    பிரிட்டன் பிரதமருக்கான அதிகாரப்பூர்வ இல்லத்தில் முதன்முறையாக திருமணம் செய்து கொள்ளாமல் குடியேறிவர்கள் போரிஸ் ஜான்சன் தம்பதியினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக போரிஸ் ஜான்சனின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

  3. இணையத்தில் வெளியாகும் படங்களும் ஆஸ்கர் போட்டியில் பங்குபெறலாம்

    oscar

    பட மூலாதாரம், Getty Images

    இணையத்தில் வெளியான படங்களும் அடுத்த வருட ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த மாற்றம் கொரோனா தொற்று பரவலால் ஏற்பட்டுள்ளது.

    தற்போதுவரை தியேட்டர்களில் ஓடிய படங்கள் மட்டுமே ஆஸ்கர் விருதுகளுக்காக பரிந்துரைக்கப்படலாம் என இருந்தது.

    ஆனால் கொரொனா தொற்று பரவலால் உலகெங்கும் பல தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில் பல படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.

    இந்த கொரோனா தொற்று பரவல் நெருக்கடி முடிந்த பிறகு மீண்டும் பழைய விதிகள் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  4. கொரோனா வைரஸ்: ஒலிம்பிக் நடத்துவது கடினம்

    ஒலிம்பிக்

    பட மூலாதாரம், Reuters

    கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை என்றால் அடுத்தாண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது கடினம் என ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.

    இவ்வாண்டு நடக்க வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா காரணமாக அடுத்தாண்டு ஜூலை மாதம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    ஜப்பானில் 13,985 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதுவரை 413 பேர் பலியாகி உள்ளனர்.

  5. பெண்கள் ஆளும் நாடுகளில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட கொரோனா வைரஸ்

    பெண்கள் ஆளும் நாடுகளில் வெற்றிகரமாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட கொரோனா வைரஸ் – எப்படி சாத்தியமானது? இதில் பெண் தலைவர்களின் பங்களிப்பு என்ன?

  6. வீழும் வங்கதேச தொழில்துறை

    கொரோனா வைரஸ் தாக்கத்தால், சர்வதேச அளவில் ஆடை ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கும் வங்கதேசத்தின் தொழில்துறை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

    உலகெங்கிலுமிருந்து 3 பில்லியன் டாலர் மதிப்பிலான அளவுக்கு ஆடை ஆர்டர் கொடுக்கப்பட்டிருந்ததாகவும், கொரோனா காரணமாக அது ரத்து செய்யப்பட்டுவிட்டதாகவும் கூறுகின்றது வங்கதேச ஆடை ஆயத்த உற்பத்தி மற்றும் ஏற்றுமது சங்கம்.

    இதன் காரணமாகப் பலர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    வங்க அரசு ஊக்கத் தொகையாக 588 மில்லியன் டாலர்களை அறிவித்து இருந்தாலும், இது போதாது என்கின்றனர் மக்கள்.

  7. திருப்பூருக்கு இன்னொரு தொழில் வாய்ப்பை தந்துள்ள நோய்த்தொற்று

    திருப்பூருக்கு இன்னொரு தொழில் வாய்ப்பை தந்துள்ள நோய்த்தொற்று

    பட மூலாதாரம், Getty Images

    இந்திய அளவில் ஆடை தயாரிப்பில் முக்கிய நகரமாக உள்ள தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில், மருத்துவ பாதுகாப்பு கவச உடை தயாரிப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஆடை உற்பத்தி தொழிற்சாலைகள் திருப்பூரில் செயல்பட்டு வருகின்றன. கொரோனா தாக்குதல் காரணமாக ஆடை விற்பனைச் சந்தை கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தாலும், மருத்துவ பாதுகாப்பு கவச உடைக்கான தேவை அதிகரித்திருப்பதால், பெரும்பாலான ஆடை உற்பத்தியாளர்கள் பாதுகாப்பு கவச உடை தயாரிப்பிற்கு மாறியுள்ளனர்.

    இதனால், கொரோனா ஏற்படுத்தியுள்ள பொருளாதார பாதிப்பிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளமுடியும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் திருப்பூரைச் சேர்ந்த ஆடை உற்பத்தியாளர்கள்.

  8. கொரோனா: கங்கை இப்படித்தான் இருக்கிறது

    கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது, சூழலியலில் நல்ல விதமாக தாக்கம் செலுத்த தொடங்கி உள்ளது.

    கங்கை நதி இப்போது இப்படி இருக்கிறது என்று பாருங்கள்

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  9. கொரோனா வைரஸ்: இந்திய நிலவரம்

    Corona

    பட மூலாதாரம், Goi

  10. தமிழக நாளிதழ்களில் வந்த மூன்று முக்கிய செய்திகள், விஜய் மல்லையா உள்ளிட்ட முன்னணி தொழிலதிபர்களின் ரூ.68,607 கோடி கடன்கள் ரத்து

    Vijay Malaya

    பட மூலாதாரம், Getty Images

    முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான மூன்று முக்கிய செய்திகளை தொகுத்து வழங்கி இருக்கிறோம்.

  11. திருச்சியில் நேற்றிரவு காய்கறி வாங்க திரண்ட மக்கள்

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  12. மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் வியட்நாம்

    Vietnam

    பட மூலாதாரம், Getty Images

    சமூக முடக்கம் வியட்நாமில் முடிவுக்கு வந்து ஒரு வாரம் ஆகி உள்ள சூழலில், சில கட்டுப்பாடுகளுடன் மெல்ல மொத்த நாடும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது.

    உணவகங்களில் உணவு மேஜைகள் ப்ளாஸ்டிக் தடுப்புகள் கொண்டு பிரிக்கப்பட்டுள்ளது. முக கவசங்கள் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.

    கொரோனாவை சிறப்பாக கட்டுப்படுத்தியதற்காக உலக நாடுகள் வியட்நாமை கொண்டாடுகின்றன.

    சீனாவுடன் எல்லையை வியட்நாம் பகிர்ந்து கொள்கிறது.

    9.7 கோடி மக்கள் தொகை கொண்ட வியட்நாமில் வியட்நாமில் 270 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

    இதுவரை ஒரு இறப்புக் கூட பதிவாகாத நாடாக வியட்நாம் திகழ்கிறது.

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  13. ஊரடங்கை மீறியதாக தமிழ்நாட்டில் 3,55,603 பேர் கைது

    ஊரடங்கை மீறியதாக தமிழ்நாட்டில் 3,55,603 பேர் கைது

    பட மூலாதாரம், Getty Images

    ஊரடங்கை மீறியதாக தமிழ்நாட்டில் 3,55,603 பேர் கைது செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக 3,36,426 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. ஊரடங்கிய மீறிய குற்றச்சாட்டுகளில் 3,01,111 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கை மீறியது தொடர்பாக 3.47 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

  14. வந்துகொண்டிருக்கும் செய்தி, சென்னை மாநாகராட்சி: தீவிர ஊரடங்கு தளர்வு

    கொரோனா

    பட மூலாதாரம், Getty Images

    சென்னை உள்ளிட்ட மாநகராட்சிப் பகுதிகளில் நாளை முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டு, முன்பிருந்த நிலையே தொடருமென தமிழக அரசு அறிவித்துள்ளது. வியாழக்கிழமையன்று மாலை ஐந்து மணிவரை கடைகள் திறந்திருக்குமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தீவிரமாக இருந்ததால், அதனைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக சென்னை, மதுரை, கோயம்புத்தூர், சேலம், திருப்பூர் ஆகிய இடங்களில் தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சென்னை, மதுரை, கோயம்புத்தூரில் ஞாயிற்றுக்கிழமை முதல் புதன்கிழமை வரையிலும் சேலம், திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் செவ்வாய்க் கிழமை வரையிலும் இந்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

    புதன்கிழமை இரவோடு இந்த தீவிர ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், நாளை முதல் அனைத்து பகுதிகளிலும் முன்பிருந்த நிலையே தொடருமென தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுமக்கள் காய்கறிகள், பழங்களை வாங்க ஏதுவாக வியாழக்கிழமை மட்டும் காலை ஆறு மணி முதல் மாலை ஐந்து மணிவரை கடைகள் திறந்திருக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

    வெள்ளிக்கிழமை முதல் பழையபடியே காலை ஆறு மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரையிலிலுமே கடைகள் திறந்திருக்கும். பொதுமக்கள் கடைகளுக்குச் செல்லும்போது நிதானமாகவும் முகக் கவசங்களை அணிந்தும் செல்ல வேண்டுமென அரசு எச்சரித்துள்ளது.

  15. கொரோனா வைரஸ்: மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை கூட்டம்

    கொரோனா தடுப்பு மற்றும் அடுத்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வமும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  16. கொரோனா வைரஸ்: உலகெங்கும் வெறிச்சோடிய சாலைகள்

    லாஸ் ஏஞ்சல்ஸ் சாலை

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, லாஸ் ஏஞ்சல்ஸ் சாலை
    டோக்கியோ சாலை

    பட மூலாதாரம், Getty Images

    japan

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, ஜப்பான் சாலை
    Turkish Road

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, துருக்கி சாலைகள்
  17. கொரோனா வைரஸ்: கமல் ஹாசன் பகிர்ந்த ட்வீட்டுகள்

    கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவியதிலிருந்தே கமல் ஹாசன் தொடர்ந்து பல ட்வீட்டுகளை பகிர்ந்து வருகிறார்.

    அவற்றின் தொகுப்பு

    X பதிவை கடந்து செல்ல, 1
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 1

    X பதிவை கடந்து செல்ல, 2

    X பதிவின் முடிவு, 2

    X பதிவை கடந்து செல்ல, 3

    X பதிவின் முடிவு, 3

    X பதிவை கடந்து செல்ல, 4

    X பதிவின் முடிவு, 4

    X பதிவை கடந்து செல்ல, 5

    X பதிவின் முடிவு, 5

  18. மதுபான லாரிகளுக்கு பாதுகாப்பு கேட்டு புதுச்சேரியில் போராட்டம்

    புதுச்சேரி எல்லையில் 1.5 கோடி மதிப்புள்ள மதுபானங்களை கொண்டுவந்த 12 லாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன; இரவு நேரங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் லாரிகளில் இருந்து மது கேட்டு மர்ம நபர்கள் மிரட்டுவதால் ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கோவா மாநிலத்திலிருந்து கடந்த மார்ச் மாதம் 21-ஆம் தேதி ரூபாய் 1.5 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள மதுபானங்கள் 12 லாரிகள் மூலம் புதுச்சேரிக்குப் புறப்பட்டன. அதனைத்தொடர்ந்து, தமிழக எல்லையான ஒசூரை அடைந்ததும் ஊரடங்கு உத்தரவுகாரணமாக, மதுபான லாரிகளை காவல்துறையினர் தடுத்துநிறுத்தினர்.

    பின்னர், நிறுத்திவைக்கப்பட்ட லாரிகளை 25 நாட்களுக்குப் பிறகுபுதுச்சேரிக்குச் செல்ல அனுமதித்தனர். அதன்படி, ஓசூரிலிருந்து கடந்த ஒருவாரத்திற்கு முன்பு மதுபானலாரிகள் புதுச்சேரி எல்லைப்பகுதிக்கு வந்து சேர்ந்தன. இதனிடையே அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறி லாரிகளுக்கு மட்டுமே புதுச்சேரிக்குள் அனுமதிப்படும் என்பதால், மதுபான லாரிகளை உள்ளே வர அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் லாரிகள் அனைத்தும் தற்போது விழுப்புரம் மாவட்ட எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில் ஊரடங்கு காரணமாக மதுபான கடைகள் மூடப்பட்டிருப்பதால் மது அருந்துவோர் இரவு நேரங்களில் மதுபானங்களைக் கேட்டு மிரட்டுவதாக லாரி ஓட்டுநர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், இதனால் இரவு நேரங்களில் திருட்டு ஏற்பட வாய்ப்பிருப்பதால் ரூபாய் 1.5 கோடி மதிப்புள்ள மதுபானங்களை தூக்கமின்றி பாதுகாத்துவருவதாக ஓட்டுநர்கள் கூறுகின்றனர்.

    இதனால், உடனடியாக அனைத்து லாரிகளுக்கும் காவல்துறையினர் பாதுகாப்பு வழங்கவும், புதுச்சேரி அரசு லாரிகளை உள்ளே அனுமதிக்கக்கோரியும் லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்காரணமாக, எல்லைப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவாதம் கொடுத்த பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.

  19. சர்வதேச அளவில் முக்கிய செய்திகள் என்ன?

    • ஜெர்மனியில் மேலும் 202 பேர் கொரோனா தொற்றால் உயிரிந்துள்ளதையடுத்து, அந்நாட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை 6115-ஆக உயர்ந்துள்ளது. ஜெர்மனியில் அதிக அளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் இருந்தபோதிலும், மற்ற ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடுகையில், உயிரிழப்புகள் குறைவு தான்.
    • லத்தீன் அமெரிக்காவில் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பிரேசிலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சீனாவை விஞ்சியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அந்நாட்டில் மேலும் 474 பேர் இறந்துள்ள நிலையில், பிரேசிலில் கொரோனா தொற்றால் இறந்தவர்கள் எண்ணிக்கை 5000-த்தை கடந்துள்ளது.
    • செவ்வாய்க்கிழமையன்று முடக்கநிலை தளர்த்தப்பட்டுள்ள நியூசிலாந்தில் பர்கர் போன்ற உணவுகளை வாங்கும்போது மக்கள் சமூக கட்டுப்பாடுகளை கடைபிடிக்கவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.இது தொடர்பாக அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் உள்ளூர் பர்கர் உணவகத்தை விமர்சித்துள்ளார்.
    • அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ள நிலையில், உலக அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.
    சர்வதேச  அளவில் முக்கிய செய்திகள் என்ன?

    பட மூலாதாரம், Getty Images

  20. இறைச்சி பதப்படுத்தும் நிலையங்களை திறந்து வைக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவு

    Donald Trump

    பட மூலாதாரம், Getty Images

    அமெரிக்க மக்களுக்கான உணவு வழங்கல் தடைபடாமல் இருக்க இறைச்சி பதப்படுத்தும் நிலையங்களை திறந்து வைக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

    கொரிய போர் காலத்து சட்டங்களை மீண்டும் உயிர்பித்துள்ள அமெரிக்கா, உணவு பதப்படுத்தும் நிலையங்களை திறந்து வைத்திருப்பதை கட்டாயமாக்கி உள்ளது.

    அமெரிக்காவில் உணவு பதப்படுத்தும் நிலையங்களில் பணியாற்றும் 3300 ஊழியர்களுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, 20 பேர் பலியாகி உள்ளனர்.