You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

கொரோனா: சிங்கப்பூரில் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு; இந்தியாவில் அண்மைய நிலை என்ன?

செவ்வாய் காலை நிலவரப்படி உலகளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,70,042 ஆக உள்ளது என ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவிக்கிறது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நேற்று நடந்தவை - சில முக்கியத் தகவல்கள்

    • இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,265ஆக உயர்ந்துள்ளது.
    • ஊரடங்கைப் பொறுத்தவரை மே மூன்றாம் தேதிவரை தமிழ்நாட்டில் தற்போதுள்ள நிலையே நீடிக்கும் என தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
    • ரயில், விமான சேவையை மீண்டும் தொடங்குவது தொடா்பாக மத்திய அரசு இதுவரை இறுதி முடிவெடுக்கவில்லை என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.
    • அமெரிக்காவின் மட்டும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 40,000-ஐ தாண்டியது.
    • ஏற்கனவே ஊரடங்கு உத்தரவுகளை தளர்த்து வரும் சீனா, தற்போது அந்நாட்டில் உள்ள சீன பெருஞ்சுவர் உள்ளிட்ட 73 முக்கிய சுற்றுலா தளங்களை மீண்டும் திறந்துள்ளது.
    • கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்த இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் கொரோனா தொற்று குறைந்து வருவதைத் தொடர்ந்து, அங்கு ஊரடங்கைப் படிப்படியாக தளர்த்துவது குறித்து அந்நாட்டு அரசுகள் ஆலோசித்து வருகின்றன.
  2. வணக்கம் நேயர்களே!

    பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம்.

    பிபிசி தமிழ் இந்த நேரலை பக்கத்தில் உலகெங்கும் கொரோனா தொடர்பாக நடக்கும் அனைத்து செய்திகளையும் எழுத்து, ஒலி, ஒளி, வரைகலை வடிவத்தில் தொகுத்து வழங்குகிறது.

    தமிழகம், இந்தியா, இலங்கை மற்றும் உலக நாடுகளின் இன்றைய நிலவரம் குறித்து அறிய இந்தப் பக்திதான் தொடர்ந்து இணைந்திருங்கள்.