உலகெங்கும் 20 லட்சத்தை கடந்தது கொரோனா தொற்று பாதிப்பு

பிரேசிலில் 99 வயதான இரண்டாம் உலகப் போரில் போரிட்ட வீரர் ஒருவர், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு வந்துள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. இந்தியாவில் 11,000-ஐ கடந்த பாதிப்பு எண்ணிக்கை

    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 377ஆக உயர்ந்துள்ளது என்று இந்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,439 ஆக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் 274 பேர் குணமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் இதுவரை ஒட்டுமொத்தமாக கோவிட்-19 தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1305.

  2. வந்துகொண்டிருக்கும் செய்தி, கொரோனா தீவிரத்தை பொறுத்து மூன்றாக பிரிக்கப்படும் இந்திய மாவட்டங்கள்

    "இந்தியாவில் இருக்கும் அனைத்து மாவட்டங்களும் 3 பிரிவுகளாக பிரிக்கப்படும். கொரோனா தொற்று தீவிரமாக இருக்கும் மாவட்டங்கள், அதிக தீவிரம் இல்லாமல் இருக்கும் மாவட்டங்கள் மற்றும் கொரோனா தொற்று இல்லாமல் இருக்கும் மாவட்டங்கள் என மூன்றாக பிரிக்கப்படும்" என்று இந்திய சுகாதார அமைச்சகத்தின் இணை செயலாளர் லவ் அகர்வால் தெரிவித்தார்.

    அனைத்து மாநில தலைமை செயலாளர்கள், காவல்துறை இயக்குனர்கள், சுகாதாரத்துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், நகராட்சி ஆணையர்கள் மற்றும் முதல்வர் அலுவலக அதிகாரிகளுடன் அமைச்சரவை செயலாளர் காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார் என்றும், அப்போது கொரோனா தீவிரமாக இருக்கும் பகுதிகள் குறித்தும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக லவ் அகர்வால் தெரிவித்தார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  3. கொரோனா வைரஸ்: எது உண்மை? எது பொய்?

    வெள்ளி உலோகத்தை திரவமாக்கி அருந்தினால் கொரோனா குணமாகுமா? உடலை சூடாக வைத்துக் கொண்டால் கொரோனா குணமாகுமா? பசு கோமியம் கொரோனாவுக்கு தீர்வளிக்குமா? இப்படி பல கேள்விகளுக்கு இந்த காணொளியில் விடை கிடைக்கும்

  4. மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி

    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மதுபானம் கிடைக்காமல் போதைக்காக மெத்தனாலை (மரச்சாராயம்) தண்ணீரில் கலந்து குடித்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

  5. தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை இயல்பு நிலை திரும்பாது - ஸ்பெயின் பிரதமர்

    ஸ்பெயினில் 24 மணி நேரத்தில் சுமார் 5,100 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களில் இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

    எனினும் நாள் ஒன்றுக்கு கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது.

    இதுவரை ஸ்பெயினில் 1,77,633 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 18,500க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    இந்நிலையில், இத்தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை, வாழக்கை இயல்பு நிலைக்கு திரும்பாது என ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சன்செஸ் தெரிவித்தார்.

    இந்த வாரத் தொடக்கத்தில் அங்கு தொழிற்சாலைகள், கட்டுமானம் ஆகிய தொழில்கள் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி மீண்டும் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது.

    ஸ்பெயின்

    பட மூலாதாரம், EPA

  6. டென்மார்க்கில் தளர்த்தப்படும் கொரோனா கட்டுப்பாடுகள்

    டென்மார்க்கில் அமல்படுத்தப்பட்டிருந்த கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தளர்த்தும் வகையில், முதல் கட்டமாக அந்நாட்டின் நர்சரி மற்றும் தொடக்க பள்ளிகள் இன்று திறக்கப்பட உள்ளன.

    புதிய கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், கூடிய விரைவில் படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    டென்மார்க்கில் தளர்த்தப்படும் கொரோனா கட்டுப்பாடுகள்

    பட மூலாதாரம், Getty Images

  7. போபால் விஷவாயு விபத்தில் பிழைத்த 5 பேர் கொரோனாவால் பலி

    ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை காவு வாங்கிய 1984ல் நடந்த போபால் விஷவாயு விபத்தில் தப்பிப் பிழைத்த 5 பேர் தற்போது கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.

    உலகின் மோசமான அந்த விபத்தில் இருந்து பிழைத்த பலருக்கும் நுரையீரல் மற்றும் சிறுநீரகப் பிரச்சனைகள் இருப்பதால், இந்த வைரஸ் தொற்றால் இவர்களுக்கு 5 மடங்கு அதிக ஆபத்து இருப்பதாக கூறப்படுகிறது.

    தற்போது போபாலில் இறந்த 5 பேருமே விஷவாயு விபத்தில் இருந்து தப்பியவர்கள் ஆவர்.

  8. உலகளவில் 20 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை

    உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20 லட்சத்தை நெருங்கி வருகிறது.

    உலகளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 1 லட்சத்து 26 ஆயிரமாக உள்ளது.

    தோராயமாக 4 லட்சத்து 94 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.

  9. மகாராஷ்டிராவில் மேலும் 117 பேருக்கு கொரோனா தொற்று

    இந்தியாவில் கொரோனா வைரஸால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிராவில் இன்று மேலும் 117 பேருக்கு இத்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதில் 66 பேர் மும்பை மற்றும் 44 பேர் புனேவை சேர்ந்தவர்கள் ஆவர்.

    இதுவரை அம்மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,801ஆக உயர்ந்திருக்கிறது.

  10. சிங்கப்பூரில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

    சிங்கப்பூரை பொறுத்தவரை அந்நாட்டில் புதிய கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை நேற்றும் அதிகரித்துள்ளது.

    நேற்று மட்டும் அங்கு புதிதாக 334 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்நாட்டில் மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

    குறிப்பாக கடந்த சில நாட்களில் சமூக பரவல் காரணமாக அதிக தொற்றுகள் பதிவாகி வருகின்றன.

    சிங்கப்பூரின் கொரோனா தொற்று மையமாக வெளிநாட்டு தொழிலாளர்களின் தங்கும் முகாம்கள் கண்டறியப்பட்டதை தொடர்ந்து, அந்த இடங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன.

    தற்போது அந்நாட்டில் அமல்படுத்தப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு அதிகபட்ச அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

    சிங்கப்பூரில் அதிகரிக்கும் கொரோனா

    பட மூலாதாரம், Reuters

  11. தேர்தல் நடத்தும் தென் கொரியா

    கொரோனா தடுப்பில் சிறப்பாக செயல்பட்டு வரும் தென்கொரியாவில், பொதுத்தேர்தல் நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்கள் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு நிற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் வாக்காளர்களுக்கு உடல் வெப்பம் பரிசோதிக்கப்பட்டு, கிருமி நாசினிகளை கொண்டு கைகளை சுத்தப்படுத்திய பிறகே வாக்குச்சீட்டு அளிக்கப்படுகிறது. அந்த நாட்டில் சுமார் 44 மில்லியன் வாக்காளர்கள் உள்ளனர்.

    தென்கொரியாவில் எந்த காலத்திலும், எந்த காரணத்திற்காகவும் தேர்தல் தள்ளிவைக்கப்பட்ட்தில்லை. 1952-ஆம் ஆண்டு கொரிய போர் நடைபெற்ற நாட்களில் கூட அந்நாட்டில் தேர்தல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    தென்கொரியாவை போலவே கொரோனா தடுப்பில் சிறப்பாக செயல்பட்டு வரும் தைவானில், நேற்று புதிய கொரோனா தொற்றுகள் ஏதும் பதிவாகவில்லை.

    23 மில்லியன் மக்கள் தொகை கொண்ட அந்த நாட்டில், இதுவரை 393 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று உள்ளவர்களை விரைவாக கண்டறிந்து, தனிமைப்படுத்தி, அவர்களுடன் தொடர்புடையவர்களை உடனடியாக பரிசோதித்ததே தைவானின் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

    தென் கொரியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களும் வாக்களிக்க வேண்டும்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, தென் கொரியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களும் வாக்களிக்க வேண்டும்
  12. சென்னை சேத்துப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு

    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை சேத்துப்பட்டு, தடை செய்யப்பட்ட பகுதியாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    தற்போது சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள அப்பகுதியில் வாகனப் போக்குவரத்திற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  13. 2020 ஜபிஎல் போட்டிகள் காலவரையின்றி தள்ளிவைப்பு

    2020 ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி தள்ளிவைக்கப்படுவதாக பிசிசிஐ அதிகாரி தெரிவித்ததாக ஏஎன்ஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  14. சென்னை மாநகராட்சிப் பகுதியில் முகமூடி அணியாதவர்களுக்கு அபராதம்

    சென்னை மாநகராட்சிப் பகுதிக்குள் வெளியில் வருபவர்கள் முகமூடி அணிந்துதான் வெளியில் வர வேண்டுமென்றும் மீறுவோருக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படுமென்றும் சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

    இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் சென்னை மாநகராட்சியின் அதிகார எல்லைக்குட்பட்ட பகுதியில் அனைத்துப் பொதுமக்களும் வெளியில் வரும்போது கண்டிப்பாக முகமூடி (Mask) அணிந்திருக்க வெண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்த உத்தரவை மீறி வாகனத்தில் வந்தால், அவர்களது வாகனம் காவல்துறையால் பறிமுதல் செய்யப்படும் என்றும் ஆறு மாதங்களுக்கு ஓட்டுனர் உரிமம் ரத்துசெய்யப்படும் என்றும் பாதசாரிகள் இந்த உத்தரவை மீறினால் நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

    சென்னை

    பட மூலாதாரம், Getty Images

  15. கேரளா: கொரோனா மருத்துவமனையாக மாறும் சுற்றுலா படகுகள்

    கேரள மாநிலத்தின் பிரபல சுற்றுலா தளமான ஆலப்புழா மாவட்டத்தில் சுற்றுலா படகுகள், கோவிட் 19 நோயாளிகளுக்காக பயன்படுத்தப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் அஞ்சனா தெரிவித்துள்ளதாக ஏஎன்ஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

    கொரோனா தொற்று நோயாளிகளை தனிமைப்படுத்த அந்த படகுகள் பயன்படுத்தப்படும் என்றும் இதனால் 1500 முதல் 2000 படுக்கை வசதிகள் அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  16. வந்துகொண்டிருக்கும் செய்தி, தனிமைப்படுத்தப்பட்ட குஜராத் முதல்வர்

    கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட எம்எல்ஏ ஒருவரை சந்தித்திருந்த குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பிடிஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

    ஒரு வாரத்திற்கு முதல்வர் யாரையும் சந்திக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவருடைய அலுவலகம் தரப்பில் கூறப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

    குஐராத் முதல்வர் விஜய் ரூபானி, நேற்று காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார். அதில் கலந்துகொண்ட ஒரு எம்எல்ஏவிற்கு கொரோனா தொற்று இருப்பது பின்னர் உறுதி செய்யப்பட்டது.

    அதனை அடுத்தே குஜராத் முதல்வர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

    அவருக்கு கொரோனா தொற்றுக்கான எந்த அறிகுறிகளும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனினும் பாதுகாப்பு நடவடிக்கையாக அவர் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டதாக முதல்வரின் செயலாளர் அஷ்வனி குமார் தெரிவித்ததாக ஏஎன்ஐ முகமை கூறுகிறது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  17. சீனாவில் மூடப்பட்ட கொரோனா மருத்துவமனை

    சீனாவில் இரண்டே வாரங்களில் கொரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வுஹானில் இரண்டு மருத்துவமனைகள் கட்டப்பட்டது நினைவிருக்கிறதா?

    அதில் ஒன்றான லைஷென்சன் மருத்துவமனை தற்போது மூடப்படுவதாக அந்நாடு அறிவித்துள்ளது.

    அங்கு கொரோனா சிகிச்சை பெற்று வந்த கடைசி சில நோயாளிகள் வீடு திரும்பியதை அடுத்து அந்த மருத்துவமனை மூடப்பட்டது. கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு என பிரத்யேகமாக கட்டப்பட்ட அந்த தற்காலிக மருத்துவமனை தற்போதைக்கு இடிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சீனா

    பட மூலாதாரம், Getty Images

    சீனா

    பட மூலாதாரம், Getty Images

  18. கொரோனா உங்கள் உடலுக்குள் சென்றால் என்ன செய்யும்?

    கொரோனா நுரையீரலை எப்படி தாக்குகிறது? எப்படி வைரஸ் நமது உடலை பாதிக்கிறது? எப்படி இருமல் வருகிறது? ஏன் காய்ச்சல் ஏற்படுகிறது? - எளிமையாக புரிந்து கொள்ள உதவும் காணொளி இது.

  19. டிரம்பின் முடிவு ஆபத்தானது - பில் கேட்ஸ்

    உலக சுகாதார நிறுவனத்திற்கான நிதியை நிறுத்துவதாக அதிபர் டிரம்ப் எடுத்துள்ள முடிவு "மிகவும் ஆபத்தானது" என மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலினா கேட்ஸ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    எப்போதும் இல்லாத அளவிற்கு, இப்போதுதான் உலக சுகாதார நிறுவனத்தின் சேவை தேவைப்படுகிறது என அவர்கள் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.

    உலக சுகாதார நிறுவனத்திற்கு மிக அதிக அளவிலான நிதி வழங்கும் அமைப்புகளில் இவர்களின் கேட்ஸ் அமைப்பும் ஒன்று.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  20. சென்னை தடை உத்தரவு: 1,012 வழக்குகள் பதிவு

    சென்னையில் 144 தடை உத்தரவை மீறியது தொடர்பாக ஏப்ரல் 14ஆம் தேதி காலை முதல் 15ஆம் தேதி காலை வரை காவல்துறை மேற்கொண்ட சோதனையில் 1,012 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இதில் தொடர்புடைய 589 இருசக்கர வாகனங்கள், 36 இலகு ரக வாகனங்கள், 1 கனரக வாகனம் மற்றும் 92 இதர வாகனங்கள் என மொத்தம் 718 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.