BBC தமிழ் இணையதளத்தில் கடந்த சில நாட்களில் வெளியான, நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய செய்திகள்

செஸ் ஒலிம்பியாட்
பிரசுரிக்கப்பட்டது

வணக்கம் நேயர்களே! இந்த வாரம் உங்களுக்கு அருமையானதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறோம். இந்த வாரம் உலகமெங்கும் பல்வேறு விடயங்கள் நடந்தன, அவற்றை நாங்கள் தனித்தனி செய்திகளாக வெளியிட்டிருந்தோம். எனினும், நீங்கள் அவற்றில் சில முக்கியமான செய்திகளை தவற விட்டிருக்கலாம்.

கவலை வேண்டாம். உங்களுக்காகவே இந்த வாரத்தில் வெளியான ஐந்து சிறப்பு கட்டுரைகளின் துணுக்குகளை இங்கே ஒரே இடத்தில் தொகுத்தளிக்கிறோம். நீங்கள் விரும்பும் கட்டுரையை அதற்கு கீழே உள்ள இணைப்பில் கிளிக் செய்து முழுவதும் படிக்க முடியும்.

பிபிசி தமிழில் நாங்கள் எப்போதுமே செய்திகளை வேறுபட்ட கோணத்தில் அளிப்பதுடன், ட்ரெண்டில் உள்ள செய்திகளை கலவையாக அளித்து வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

அந்த வகையில், இந்த வாரம் செஸ் ஒலிம்பியாட், இயக்குநர் சுதா கொங்கரா பேட்டி, பாகிஸ்தானில் டிஎஸ்பி ஆன முதல் இந்து பெண், தமிழ்நாட்டில் தொடரும் மாணவர் மரணங்கள், இலங்கை கொந்தளிப்பின் நடுவே ராணுவத்தின் செயல்பாடு ஆகியவை குறித்த ஐந்து கட்டுரைகளை இங்கே தொகுத்தளித்துள்ளோம்.

தென்னிந்தியா சதுரங்கத்தில் முன்னோடியாகத் திகழ்வது ஏன்?

தம்பி - செஸ் ஒலிம்பியாட் சின்னம்.

பட மூலாதாரம், Getty Images

மாமல்லபுரத்தில் 7ம் நூற்றாண்டு குகைக் கோயில்களுக்கும் சிற்பங்களுக்கும் நடுவே வேட்டி கட்டிய ஒரு குதிரையின் உருவமும் தென்படுகிறது.

இவன்தான் 'தம்பி'. 44வது செஸ் ஒலிம்பியாட் சின்னம்.

இந்த சர்வதேச சதுரங்கப் போட்டி சென்னைக்கு அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28 தொடங்கி, ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெறுகிறது.

தென்னிந்தியா சதுரங்கத்தில் முன்னோடியாகத் திகழ்வது ஏன் என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்

"சூரரைப் போற்று" சுதா கொங்கரா பேட்டி

சுதா கொங்கரா

2020 ஆம் வருடத்திற்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை, சிறந்த படம், சிறந்த இசையமைப்பாளர் என 5 தேசிய விருதுகளை வென்றுள்ளது சூரரை போற்று திரைப்படம்.

நெகிழ்ச்சியான இந்த தருணம் குறித்து இத்திரைப்படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா பகிர்ந்து கொண்ட தகவல்களை இங்கே பார்க்கலாம்.

பாகிஸ்தானில் டிஎஸ்பி ஆன முதல் இந்து பெண்

மனிஷா ரூபேட்டா

பாகிஸ்தானின் முதல் இந்து பெண் டிஎஸ்பியாக மனிஷா ரூபேட்டா பொறுப்பேற்றிருக்கிறார். மருத்துவம் நீங்கலாக வேறு எந்த படிப்பிலும் பெண்கள் சேரக் கூடாது என்ற சிந்தனை ஆழமாக வேரூன்றிய சமூகத்தில் இருந்து கொண்டு இந்த இலக்கை எப்படி எட்டினார் மனிஷா?

மாணவர்கள், சிறுவர்கள் உளவியல் நெருக்கடி

மாணவர்கள், சிறுவர்கள் உளவியல் நெருக்கடி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம். மன அழுத்தத்தில் உள்ள சிறுவர்.

தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களில் பள்ளி மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்தடுத்து நடந்த மாணவர்களின் தற்கொலைக்குப் பின்னணியில் பல்வேறு காரணங்கள் இருந்தாலும் தொடர்ச்சியான மாணவர்கள் தற்கொலைக்கு ஒருமித்த காரணம் இருப்பதாக உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாடு

இலங்கையில் கொந்தளிப்புக்கு மத்தியில் ராணுவம்

பட மூலாதாரம், EPA

இலங்கையில் சுமார் 15 நாட்கள் நீடித்த அரசியல் குழப்பத்திற்குப் பிறகு புதிய அதிபர் பதவியேற்றுள்ளார். ஆனால் சில நாட்களுக்கு நாட்டிற்குள் நடந்த குழப்பங்களின் படங்களை உலகமே பார்த்தது.

13 ஆண்டுகளுக்கு முன்னர் வட இலங்கையில் தமிழ் பிரிவினைவாத கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரில் வெற்றி பெற்ற இலங்கை ராணுவம், நாட்டில் நடந்த ஆர்ப்பாட்டங்கள், வன்முறைகள் மற்றும் அராஜகங்களுக்கு மத்தியில் அரசியலில் தலையிடவில்லை.

காணொளிக் குறிப்பு, அடிபட்டு இறந்த தாய் தேவாங்கு; குட்டி பிழைத்தது எப்படி? வீடியோ காட்சி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: