BBC தமிழ் இணையதளத்தில் கடந்த சில நாட்களில் வெளியான, நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய செய்திகள்

பிரசுரிக்கப்பட்டது

வணக்கம் நேயர்களே! இந்த வாரம் உங்களுக்கு அருமையானதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறோம். இந்த வாரம் உலகமெங்கும் பல்வேறு விடயங்கள் நடந்தன, அவற்றை நாங்கள் தனித்தனி செய்திகளாக வெளியிட்டிருந்தோம். எனினும், நீங்கள் அவற்றில் சில முக்கியமான செய்திகளை தவற விட்டிருக்கலாம்.

கவலை வேண்டாம். உங்களுக்காகவே இந்த வாரத்தில் வெளியான ஐந்து சிறப்பு கட்டுரைகளின் துணுக்குகளை இங்கே ஒரே இடத்தில் தொகுத்தளிக்கிறோம். நீங்கள் விரும்பும் கட்டுரையை அதற்கு கீழே உள்ள இணைப்பில் கிளிக் செய்து முழுவதும் படிக்க முடியும்.

பிபிசி தமிழில் நாங்கள் எப்போதுமே செய்திகளை வேறுபட்ட கோணத்தில் அளிப்பதுடன், ட்ரெண்டில் உள்ள செய்திகளை கலவையாக அளித்து வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

அந்த வகையில், இந்த வாரம் காமன்வெல்த் 2022 விளையாட்டு போட்டிகள், காற்று மாசால் குறையும் இந்தியர்களின் ஆயுள், அக்னிபத் திட்டம், உத்தர பிரதேசத்தில் முஸ்லிம் வீடுகள் இடிக்கப்படுவது, செயற்கை நுண்ணறிவு ஆகியவை குறித்த ஐந்து கட்டுரைகளை இங்கே தொகுத்தளித்துள்ளோம்.

காமன்வெல்த் 2022: எங்கு எப்போது நடைபெறுகிறது?

காமன்வெல்த் அமைப்பின் உறுப்பு நாடுகளும் அதனை சார்ந்த பிராந்தியங்களுக்கும் இடையே நடைபெறும் விளையாட்டுப் போட்டியே 'காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி' என அழைக்கப்படுகிறது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த காமன்வெல்த் போட்டிகள் நடைபெறும். இந்த ஆண்டு காமன்வெல்த் போட்டிகளில் 72 நாடுகள் கலந்து கொள்கின்றன.

இதில் தடகளம், பேட்மின்டன், ஹாக்கி, குத்துச்சண்டை, பளு தூக்குதல், கிரிக்கெட் உள்ளிட்ட 19 போட்டிகளும், 8 பாரா விளையாட்டுகளும் இடம்பெறுகின்றன.

காமன்வெல்த் போட்டிகள் என்றால் என்ன? இந்திய வீரர்கள் யார்? அறிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்.

காற்று மாசுபாடு: 'இந்தியர்களின் சராசரி ஆயுள் காலம் 5 ஆண்டுகள் குறையும்'

காற்று மாசு காரணமாக இந்தியர்களின் சராசரி ஆயுள் 5 ஆண்டுகள் குறையும் என சிகாகோ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தின் ஏர் குவாலிட்டி லைஃப் இன்டெக் (ஏகியூஎல்ஐ) அமைப்பு காற்றின் தரம் மனித வாழ்வு, ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பாக விரிவான ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது குறித்து இங்கே படிக்கலாம்.

அக்னிபத்: நரேந்திர மோதி அரசின் திட்டத்தால் யாருக்கு பயன்?

இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செவ்வாயன்று இந்திய ராணுவத்தில் 'அக்னிபத்' என்ற திட்டத்தை அறிவித்தார், இதன் கீழ் குறுகிய கால நியமனங்கள் இருக்கும்.

இத்திட்டத்தின்படி, நான்கு ஆண்டுகளுக்கு இந்திய ராணுவத்தில் இளைஞர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பணிக்காலம் முடிந்ததும், அவர்களுக்கு சேவை நிதி தொகுப்பு வழங்கப்படும். அவர்களுக்கு அக்னிவீரர் என்ற பெயர் அளிக்கப்படும்.

பிரயாக்ராஜ் வன்முறை: "அவர்கள் எங்கள் குடும்பத்தை உடைத்துவிட்டார்கள்"

பிரயாக்ராஜில், தன்னார்வலர் முகமது ஜாவேதின் வீட்டின் மீது ஞாயிற்றுக் கிழமையன்று பிரயாக் ராஜ் மேம்பாட்டு அதிகார அமைப்பு புல்டோசர் நடவடிக்கையை மேற்கொண்டது. ஜூன் 10ஆம் தேதி நடந்த வன்முறைக்கு அவர்தான் முக்கிய காரணம் என்று நிர்வாகம் கூறுகிறது. அங்கு நடந்த விஷயங்கள் குறித்து, அவருடைய மகள் சுமையா பிபிசி செய்தியாளர் அனந்த் ஜனானேவுக்கு பேட்டி அளித்தார்.

இரவு வந்து, எங்கள் கைபேசியைக் கொடுக்காமல், அவர்களின் கைபேசி மூலம் வீட்டுக்குக் கூப்பிட்டுக் கொடுத்து, இரண்டு நிமிஷம் பேசுமாறும் வீட்டைக் காலி செய்யச் சொல்லுமாறும் கூறினார்கள். வீட்டை காலி செய்யும்படி, இரண்டு நிமிடத்தில் என்ன சொல்ல முடியுமோ அதை அம்மா கூறினார் என அவர் அந்தப் பேட்டியில் கூறினார்.

முகமது ஜாவேதின் மகள் சுமையா பிபிசிக்கு அளித்த சிறப்பு பேட்டி இங்கே.

உங்களைப் போலவே இருக்கும் செயற்கை நுண்ணறிவு சகோதரர்

நம்மைப் போலவே ஒருவர் இருப்பதாக நம்மில் பலரிடமும் நம் நண்பர்கள் சொல்லியிருப்பார்கள். அது, நம் தோற்றத்தோடு பெரிதும் ஒத்துப்போகக்கூடிய உருவ அமைப்பைக் கொண்ட, அவர்கள் கடந்து வந்த யாரோ ஒரு நபராக இருக்கலாம்.

ஆனால், இப்படி கற்பனை செய்து பாருங்கள், உங்களுடைய சொந்த இரட்டையரை, உங்களின் சரியான நகலாக, அதேவேளை முற்றிலும் டிஜிட்டலில் வாழக்கூடிய ஒருவரை நீங்களே உருவாக்க முடிந்தால்?

இதுகுறித்து மேலும் படிக்க இங்கே சொடுக்குங்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: