You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
BBC தமிழ் இணையதளத்தில் கடந்த சில நாட்களில் வெளியான, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டிய செய்திகள்
வணக்கம் நேயர்களே! இந்த வாரம் உங்களுக்கு அருமையானதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறோம். இந்த வாரம் உலகமெங்கும் பல்வேறு விடயங்கள் நடந்தன, அவற்றை நாங்கள் தனித்தனி செய்திகளாக வெளியிட்டிருந்தோம். எனினும், நீங்கள் அவற்றில் சில முக்கியமான செய்திகளை தவற விட்டிருக்கலாம்.
கவலை வேண்டாம். உங்களுக்காகவே இந்த வாரத்தில் வெளியான ஐந்து சிறப்பு கட்டுரைகளின் துணுக்குகளை இங்கே ஒரே இடத்தில் தொகுத்தளிக்கிறோம். நீங்கள் விரும்பும் கட்டுரையை அதற்கு கீழே உள்ள இணைப்பில் கிளிக் செய்து முழுவதும் படிக்க முடியும்.
பிபிசி தமிழில் நாங்கள் எப்போதுமே செய்திகளை வேறுபட்ட கோணத்தில் அளிப்பதுடன், ட்ரெண்டில் உள்ள செய்திகளை கலவையாக அளித்து வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
அந்த வகையில், இந்த வாரம் வெளியான இலங்கை பிரச்னை, விளையாட்டு, சினிமா, உடல்நலம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த ஐந்து கட்டுரைகளை இங்கே தொகுத்தளித்துள்ளோம்.
1. "கடின உழைப்பு தொடர்கிறது" - இந்திய அணிக்கு மீண்டும் திரும்பிய தினேஷ் கார்த்திக்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
கே.எல்.ராகுல் தலைமையிலான இந்த அணியில் தமிழ்நாட்டை சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.
36 வயதான தினேஷ் கார்த்திக் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 26 டெஸ்ட், 94 ஒருநாள் போட்டி மற்றும் 32 டி20 போட்டிகளில் தினேஷ் கார்த்திக் விளையாடியுள்ளார்.
கடைசியாக 2019ஆம் ஆண்டில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் அவர் விளையாடி இருந்தார். அதன்பின்னர் அவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.
இந்த செய்தியை விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
2. நடிகர் கார்த்தியின் அறியப்படாத பக்கம் - பிறந்தநாள் சிறப்பு பகிர்வு
நடிகர் கார்த்தி சினிமாவை பின்னணியாக கொண்ட குடும்பத்தில் இருந்து திரைத்துறையில் நடிகராக அறிமுகமாகி 15 வருடங்கள் கடந்துள்ள நிலையில் பரிசோதனை களங்களையும் கமர்ஷியல் வெற்றிப் படங்களையும் கொடுக்க தவறவில்லை.
'பருத்திவீரன்' படத்தில் ஆரம்பித்த பயணம் 'பொன்னியின் செல்வன்' வந்தியத்தேவனாக நீள்கிறது.
மே 25ஆம் தேதி நடிகர் கார்த்தி தனது 45வது பிறந்தநாளை கொண்டாடினார்.
'பொன்னியின் செல்வன்' தவிர்த்து 'விருமன்', இரட்டை வேடத்தில் நடிக்கும் 'சர்தார்' ஆகிய படங்கள் கைவசம் இருக்கிறது. இதில் நடிகர் கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு 'விருமன்' படத்தின் முதல் பாடலை வெளியிட்டு இருக்கிறது படக்குழு.
நடிகர் கார்த்தி குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இங்கே கிளிக் செய்து படிக்கலாம்.
3. டிஜிலாக்கர்: இனி ஆவணங்களை வாட்சப் மூலம் பெறுவது எப்படி?
ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை டிஜிட்டல் முறையில் பாதுகாத்து வைக்கும் டிஜிலாக்கர் வசதியை இனிமேல் வாட்சப் மூலம் பெறலாம் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது.
இதுவரை டிஜிலாக்கர் என்ற தனி செயலியில் பாதுகாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்த ஆவணங்களை, இனி வாட்சாப் மூலம் தேவைப்படும்போது பதிவிறக்கிக் கொள்ளலாம்.
அரசு சேவைகளை மென்மேலும் எளிமையாகவும், வெளிப்படைத்தன்மை வாய்ந்ததாகவும் மாற்ற வாட்சப் மூலம் டிஜிலாக்கர் சேவையை பெறும் வசதி அறிமுகப்படுத்தப்படுவதாகவும் இதன்மூலம் டிஜிலாக்கர் கணக்கை உருவாக்குவது, உள் நுழைவது, குறிப்பிட்ட ஆவணங்களை தரவிறக்குவது ஆகிய சேவைகளை வாட்சாப் மூலமே பெற முடியும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
இந்த சேவையை எப்படி பயன்படுத்துவது என்று இங்கே விரிவாக படிக்க இங்கே சொடுக்குங்கள்.
4. "1 லட்சம் கோடி ரூபாய் பணம் அச்சிட திட்டம்" - இலங்கை பிரதமர் ரணில் தகவல்
இலங்கை பொருளாதார நெருக்கடி தீவிர நிலையை அடைந்துள்ள இந்த தருணத்தில், மேலும் பணத்தை அச்சிடுவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இதன்படி, மேலும் ஒரு லட்சம் கோடி ரூபாய் பணத்தை அச்சிட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
''எங்களுக்கு ஒரு ரூபாய் வருமானம் கூட இல்லை. நாங்கள் ஒரு லட்சம் கோடி ரூபாய் பணத்தை மேலும் அச்சிடுகிறோம்" என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், எதிர்வரும் மாதங்களில் நாட்டின் பணவீக்கமானது 40 வீதத்தை எட்டும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
ரணில் விக்ரமசிங்கவின் முழு கருத்தை இங்கே கிளிக் செய்து படிக்கலாம்.
5. தைராய்டு நோய் என்றால் என்ன? அறிகுறிகள் என்ன?
தைராய்டு சுரப்பி குறைபாட்டால் இந்தியாவிலுள்ள பத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். 2021ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி இந்தியாவில் 4.2 கோடி பேர் தைராய்டு நோய் உடையவர்கள்.
தைராய்டு நோய் உண்டானவர்களுக்கு இருக்கும் பிரச்னை என்னவென்றால் அதனால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கு பேருக்குத் தங்களுக்கு பாதிப்பு இருப்பதே தெரியாது. பெண்களிடையே இது அதிகம் நிலவுகிறது.
கருவுற்றிருக்கும் பெண்கள் மற்றும் குழந்தை பெற்ற பெண்களில் 44.3 சதவீதம் பேருக்கு மகப்பேறுக்கு பிந்தைய முதல் மூன்று மாத காலத்தில் தைராய்டு சுரப்பி குறைபாடு உண்டாகிறது.
தைராய்டு சிக்கல் குறித்த மேலதிக தகவல்களை அறிய இங்கே சொடுக்குங்கள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்