ஏற்காடு கோடை விழா: 5 லட்சம் மலர்களைக் கொண்டு கண்காட்சி - கண்கவர் படங்கள்

    • எழுதியவர், ஏ.எம்.சுதாகர்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த ஏற்காடு கோடைவிழா இன்று மே 25 தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது.

இன்று நடந்த துவக்கவிழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், மதிவேந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவையொட்டி அண்ணா பூங்காவில் 5 லட்சம் மலர்களை கொண்டு மலர் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் காய்கறி கண்காட்சி, மாம்பழக் கண்காட்சி ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் பல்வேறு மலர்களை கொண்டு பட்டாம்பூச்சி, அரசு பேருந்து, மேட்டூர் அணை, வள்ளுவர் கோட்டம், மாட்டு வண்டி, தமிழக அரசின் மீண்டும் மஞ்சப்பை திட்டம், குழந்தைகளை கவரும் சின்சான் உள்ளிட்ட வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கோடை விழாவையொட்டி ஏற்காட்டிற்கு 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: