டி. ராஜேந்தர் உடல்நிலை இப்போது எப்படி உள்ளது? - சிலம்பரசன் அறிக்கை

பட மூலாதாரம், Insta @elakkiya_rajendar
நடிகரும் இயக்குநருமான டி. ராஜேந்தர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டி. ராஜேந்தர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 19ம் தேதி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.
இப்பொழுது நடிகர் சிலம்பரசன் டி. ராஜேந்தர் உடல்நிலை குறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ரசிகர்களுக்கும் ஊடக பத்திரிக்கை நண்பர்களுக்கும் வணக்கம் என ஆரம்பிக்கும் அந்த அறிக்கையில் தனது தந்தைக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம் என்ற தகவலை உறுதிப்படுத்தி இருக்கிறார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
மேலும் அங்கு பரிசோதித்ததில் அவருக்கு வயிற்றில் இரத்த கசிவு ஏற்பட்டிருப்பதால் அவருக்கு உயர் சிகிச்சை கொடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதாகவும் அதில் தெரிவித்து இருக்கிறார்.
இதனால், அவரது உடல் நலன் கருதியும் உயர் சிகிச்சைக்காகவும் வெளிநாடு அழைத்து செல்வதாகவும் டி. ராஜேந்தர் முழு சுயநினைவுடன் நலமாக இருப்பதையும் தெரிவித்து உள்ளார். சீக்கிரமாக சிகிச்சை முடிந்து அனைவரையும் சந்திப்பார் என கூறியுள்ள சிலம்பரசன் அனைவரது அன்புக்கும் பிரார்த்தனைகளுக்கும் நன்றி எனவும் கூறியுள்ளார்.
டி. ராஜேந்தர், சினிமா, அரசியல்

பட மூலாதாரம், Insta @elakkiya_rajendar
நடிகர், இயக்குநர், பின்னணி பாடகர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்டவர் டி. ராஜேந்தர். 67 வயதாகும் ராஜேந்தர் தன்னுடைய பன்முக திறமைக்காகவும் அடுக்கு மொழி வசனங்களுக்காகவும் திரைத்துறையில் புகழ் பெற்றவர்.
1980-ம் வருடம் 'ஒரு தலை ராகம்' படம் மூலமாக நடிகர், இயக்குநர் மற்றும் இசையமைப்பாளராக திரைத்துறையில் அறிமுகமானார். பின்பு, 'வசந்த அழைப்புகள்', 'உயிருள்ளவரை உஷா', 'வீராசாமி' உள்ளிட்ட பல படங்களை இயக்கி நடித்துள்ளார். தனது மூத்த மகன் சிலம்பரசனை, 1984-ல் தாம் இயக்கிய 'உறவை காத்த கிளி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார். இவருக்கு குறளரசன் என்ற மகனும், இலக்கியா என்ற மகளும் உள்ளனர்.
இவர் கடந்த 2004ம் வருடம் லட்சிய திராவிட முன்னேற்ற கழகம் என்ற அரசியல் கட்சியையும் ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டி.ராஜேந்தர் உடல்நிலை குறித்து நடிகர் சிலம்பரசனின் நெருங்கிய நண்பரான ஹரிஹரன் கஜேந்திரன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், 'டி.ஆர். இப்போது நலமுடன் இருப்பதாக செய்திகள் கேள்வி பட்டேன். ஆனால், அது தவிர மேலதிக தகவல்கள் தெரியவில்லை. இது குறித்து சிலம்பரசன் அண்ணா விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என எதிர்ப்பார்க்கிறேன்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
டி.ஆர்-ரின் நல்ல குணத்திற்கு அவர் விரைவில் நலமுடன் திரும்புவார். எனது பிராத்தனைகள்' என கூறியுள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்




























