ரானே கைது: சட்டம் என்ன சொல்கிறது? தமிழகத்திலும் இப்படி நடந்த வரலாறு தெரியுமா?

நாராயன் ரானே

பட மூலாதாரம், NARYAN RANE TWITTER

படக்குறிப்பு, நாராயண் ரானே
    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்த மத்திய அமைச்சர் நாராயண் ரானேவை மகாராஷ்டிர மாநில அரசு கைது செய்துள்ளது. மத்திய அமைச்சர்களை மாநில அரசுகள் கைது செய்தால் என்ன நடக்கும்?

"மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை அறைந்திருப்பேன்" என்று கூறிய மத்திய அமைச்சர் நாராயண் ரானேவை, முதல்வரை அவதூறாக பேசியதாகக் கூறி அம்மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக ரானே மீது புனே, மஹாட், நாசிக்கில் வழக்குகள் பதிவாகியுள்ளன.

இதற்கிடையே, தன்னை காவல்துறையினர் கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் வழங்கக் கோரி நாராயண் ரானே சார்பில் ரத்னகிரி செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், அதில் சில குறைபாடுகள் இருப்பதாகக் கூறி அந்த மனு ஏற்கப்படவில்லை. இதையடுத்து முன்ஜாமீன் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் ரானே சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், அதை அவசரகால மனுவாக ஏற்க உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. இந்த நிலையில்தான் ரத்னகிரியில் வைத்து அவரை நாசிக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

சட்டம் என்ன சொல்கிறது?

மத்திய அரசில் அமைச்சராக இருக்கும் ஒருவரை, மாநில அரசு கைது செய்ய முடியுமா? பொதுவாக, சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கைது செய்யப்படும்போது அது குறித்த தகவல் சம்பந்தப்பட்ட அவையின் தலைவர்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்.

நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பொருத்தவரை, நாடாளுமன்ற கூட்டத் தொடரின்போதோ, தொடருக்கு 40 நாட்கள் முன்பாகவோ, பின்பாகவோ சிவில் வழக்குகளில் கைது செய்ய முடியாது. ஆனால், கிரிமினல் வழக்குகளுக்கு இந்த சலுகை பொருந்தாது.

கூட்டத் தொடரில் உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும்; அதனால் என்னை கைது செய்யக்கூடாது என எந்த உறுப்பினரும் கோர முடியாது என்பதை சென்னை உயர்நீதி மன்றம் உறுதி செய்திருக்கிறது.

ஆனால், உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டால், அவர் என்ன காரணத்திற்காக, எங்கே கைதுசெய்யப்பட்டார் என்ற விவரம் அவையின் தலைவருக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். இதில் தாமதம் ஏற்பட்டால், தெரிவிக்கத் தவறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிமை மீறல் பிரச்னையைக் கொண்டு வரலாம்.

மத்திய அமைச்சர்கள் கைது செய்யப்படுவது இது முதல் முறையல்ல. இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக மத்திய அமைச்சர்கள் தமிழ்நாட்டில்தான் கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் கைதான இரு அமைச்சர்கள்

கருணாநிதி கைது
படக்குறிப்பு, 2001ல் கைது செய்யப்பட்ட பிறகு சென்னை மத்திய சிறையில் இருந்து வெளியே வரும் அப்போதைய எதிர்கட்சித் தலைவர் கருணாநிதி

2001ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

அப்போது மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சராக இருந்த முரசொலி மாறன், கருணாநிதியின் கைது நடவடிக்கையைத் தடுக்க முயன்றார். அப்போது அவர் தள்ளிவிடப்பட்டார். முரசொலி மாறன் ஏற்கனவே உடல்நலமில்லாமல் இருந்ததால் அவர் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அப்பல்லோ மருத்துவமனையில் முரசொலி மாறனை நேரில் சந்தித்த மாஜிஸ்திரேட் கைது தொடர்பான உத்தரவை அளித்தார். அவர் சிகிச்சை பெற்று வருவதால் அவர் சிறையில் அடைக்கப்படவில்லை.

கருணாநிதி கைது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2001, ஜூலை 4ஆம் தேதி சென்னை சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை சந்தித்த பிறகு சிறைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசும் அப்போதைய மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறன், டி.ஆர். பாலு.

அடுத்தாக, முரசொலி மாறன் வீட்டினுள் காவல்துறை நுழைய முயன்றபோது, அதனைத் தடுக்க முயன்றதால் மற்றொரு மத்திய அமைச்சரான டி.ஆர். பாலு கைது செய்யப்பட்டார்.

டி.ஆர். பாலு அப்போது மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்தார். கைது செய்யப்பட்ட டி.ஆர். பாலு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். காவல்துறையினரை கடமையாற்ற விடாமல் தடுத்ததாக இவர்கள் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. ஆனால், சில நாட்களிலேயே இவர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன.

முரசொலி மாறன், டி.ஆர். பாலு ஆகியோர் கைது செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்ட பிறகு நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விவகாரம் காரசாரமாக விவாதிக்கப்பட்டது.

மாநில அரசின் விருப்பப்படி மத்திய அமைச்சர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க, சில சட்ட நடைமுறைகளை விதிக்க ஆலோசிக்கப்பட்டது. ஆனால், அதன் தொடர்ச்சியாக ஏதும் நடைபெறவில்லை.

"கிரிமினல் குற்றம்சாட்டப்பட்ட மத்திய அமைச்சர்களைக் கைது செய்வதில் எந்தத் தடையும் இல்லை. கிரிமினல் குற்றம் சுமத்தப்பட்ட யாராக இருந்தாலும் மாநில காவல்துறையால் நிச்சயம் கைது செய்ய முடியும்" என்கிறார் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஹரி பரந்தாமன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :