உலகக்கோப்பை கால்பந்து 2026: தொடக்க விழா மற்றும் அதில் பதிவான வண்ணமயமான புகைப்படங்கள்

மெக்சிகோ,  2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள்

பட மூலாதாரம், Reuters

    • எழுதியவர், வில் கிராண்ட்
    • பதவி, பிபிசியின் மெக்சிகோ, மத்திய அமெரிக்கா மற்றும் கியூபா செய்தியாளர்
    • எழுதியவர், குவாசி கியாம்ஃபி அசியேடு
    • எழுதியவர், நார்டின் சாட்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

மெக்சிகோ நகரில், வண்ணமயமான அலங்காரங்கள், நடனம் மற்றும் உலகப் புகழ்பெற்ற இசை நட்சத்திரமான ஷகிராவின் கலை நிகழ்ச்சியுடன் கூடிய தொடக்க விழாவுடன் 2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் தொடங்கியுள்ளன.

கடந்த 40 ஆண்டுகளில் தங்கள் சொந்த மண்ணில் நடக்கும் முதல் உலகக் கோப்பை என்பதால், பெரும் உற்சாகத்துடன் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மெக்சிகோ நகரில் உள்ள புகழ்பெற்ற அஸ்டெகா (Azteca) மைதானத்திற்கு வந்தனர்.

மைதானத்திற்கு வெளியே, போராட்டக்காரர்களை பாதுகாப்பு படையினர் கட்டுப்படுத்த முயன்ற போது ஆங்காங்கே மோதல்கள் ஏற்பட்டன.

இருப்பினும், பெரும்பாலும் கால்பந்தாட்டமே முதன்மை பெற்றதுடன், மெக்சிகோ தனது ஆட்டத்தை தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றியுடன் தொடங்கியதால் பெரும் கொண்டாட்டங்கள் இருந்தன.

மெக்சிகோ,  2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, மெக்சிகோ நகரில் நடைபெற்ற தொடக்க விழாவில் உலகப் புகழ்பெற்ற இசை நட்சத்திரம் ஷகிரா

ஹாவியர் பெரெஸ் தொடக்க ஆட்டத்திற்காக தனது குடும்பத்துடன் வந்திருந்தார், இதுவரை சந்தித்த சிரமங்களை விட இப்போது இருக்கும் உற்சாகமே அதிகமாக உள்ளது என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

"அதிர்ஷ்டவசமாக எங்களுக்கு சிறப்பு (Hospitality) டிக்கெட்டுகள் கிடைத்தன, இது ஒரு தனித்துவமான அனுபவம். நான் இதற்கு முன்பு ஒருபோதும் உலகக் கோப்பைக்குச் சென்றதில்லை, எனவே எனது குடும்பத்தினரை அழைத்து வந்தது அற்புதமான அனுபவம்," என்று அவர் கூறினார்.

"மெக்சிகோ சரியான தொடக்கத்தைப் பெற வேண்டும், இன்று வெற்றி பெற்று நிறைய கோல்களை அடிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்! அதன் பிறகு நாம் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்று பார்ப்போம்!" என்றார்.

82,000 பேர் அமரக்கூடிய மைதானத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்த போதிலும், போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களால் அருகிலுள்ள மெட்ரோ நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

சுமார் 800 போராட்டக்காரர்களைக் கொண்ட இரண்டு குழுக்களில் இருந்து கிட்டத்தட்ட 200 முகமூடி அணிந்த நபர்கள் பிரிந்து சென்று பாதுகாப்புப் படையினருடன் மோதலில் ஈடுபட்டதாகவும், ஆனால் நிலைமை போலீசாரால் "கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது" என்றும் மெக்சிகோ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையில், மெக்சிகோ சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ள நிலையில், தங்கள் கோரிக்கைகளை முன்னிலைப்படுத்துவதற்காக ஆசிரியர்கள் மற்றும் மெக்சிகோவின் போதைப்பொருள் போரில் காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் பல்வேறு போராட்டங்களில் அணிவகுத்துச் சென்றனர்.

அமெரிக்கா மற்றும் கனடாவுடன் இணைந்து மெக்சிகோ 2026 உலகக்கோப்பை போட்டியை கூட்டாக நடத்துகிறது.

முதல் போட்டிக்கு முன்னதாக, மைதானத்தில் இருந்த ரசிகர்களுக்காக ஷகிரா, கொலம்பியாவின் ஜே பால்வின், ஆஃப்ரோபீட்ஸ் நட்சத்திரம் பர்னா பாய் மற்றும் லத்தீன் இசை நட்சத்திரம் டேனி ஓஷன் ஆகியோரின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

பாப் பங்க் (pop punk) இசைக்குழுவான மனாவின் (Maná) மெக்சிகன் பாடகர்-பாடலாசிரியர் ஃபெர் ஆல்வேரா மேடையில் தோன்றி புகழ்பெற்ற 'ஓயே மி அமோர்' (Oye Mi Amor) பாடலைப் பாடினார்.

மெக்சிகோ,  2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள்

பட மூலாதாரம், Will Grant / BBC

படக்குறிப்பு, ஹாவியர் பெரெஸ் தொடக்க ஆட்டத்திற்காக தனது குடும்பத்துடன் வந்திருந்தார்.
மெக்சிகோ,  2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள்

பட மூலாதாரம், Getty Images

மெக்சிகோ,  2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள்

பட மூலாதாரம், Reuters

"Bienvenida a México. மெக்சிகோவிற்கு வரவேற்கிறோம்," என்று ஒரு கலைஞர் தெரிவித்தார்.

"நாங்கள் பன்முகத்தன்மை, பாரம்பரியம் மற்றும் பெருமை கொண்ட ஒரு தேசம். கால்பந்து அதே பண்பைக் கொண்டுள்ளது, தலைமுறைகளை ஒன்றிணைக்கிறது."

கலைஞர்கள் பழங்குடியின ஆடைகளை அணிந்திருந்தனர், மற்றவர்கள் முற்றிலும் தங்க நிற உடைகளை அணிந்து தங்கள் தலைக்கு மேலே ராட்சத தங்க நிற கால்பந்துகளை ஏந்தியிருந்தனர்.

மெக்சிகோ,  2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தென்னாப்பிரிக்க தேசிய கீதத்தைப் பாடிய டைலா
மெக்சிகோ,  2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள்

பட மூலாதாரம், Reuters

மெக்சிகோ,  2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள்

பட மூலாதாரம், Reuters

தென்னாப்பிரிக்க தேசிய கீதத்தைப் பாடிய டைலா

ஓபரா சூப்பர் ஸ்டார் ஆண்ட்ரியா போசெல்லி மற்றும் கே-பாப் பாடகர் எஜே ஆகியோர் போட்டியின் அதிகாரப்பூர்வ கீதமான 'டிஎன்ஏ' (DNA) பாடலைப் பாடினர், இது புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

பழம்பெரும் பாடகர் விசென்டே பெர்னாண்டஸின் மகனான மெக்சிகன் பாடகர் அலெஜான்ட்ரோ பெர்னாண்டஸ், 80,000 ரசிகர்களுடன் இணைந்து மெக்சிகன் தேசிய கீதத்தைப் பாடினார்.

கிராமி விருது பெற்ற தென்னாப்பிரிக்க நட்சத்திரம் டைலா தனது நாட்டின் தேசிய கீதத்தைப் பாடினார்.

'வாட்டர்' (Water) பாடல் மற்றும் ஃபிஃபாவின் 'கேம் டைம்' (Game Time) பாடல் உள்ளிட்ட ஹிட் பாடல்களைப் பாடியுள்ள டைலா, கேட்டி பெர்ரி, ஃபியூச்சர், லிசா மற்றும் அனிட்டா ஆகியோருடன் இணைந்து லாஸ் ஏஞ்சலிஸில் நடக்கும் அமெரிக்க தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக வெள்ளிக்கிழமை மீண்டும் உலகக் கோப்பை மேடைக்குத் திரும்புவார்.

ஃபிஃபா இந்த விழாக்களுக்காக சர்வதேச கலைஞர்கள் பலரைத் தேர்ந்தெடுத்துள்ளது, அவர்களில் பலர் 18 பாடல்கள் கொண்ட அதிகாரப்பூர்வ ஃபிஃபா உலகக் கோப்பை 2026 ஆல்பத்தில் இடம்பெற்றுள்ளனர்.

மெக்சிகோ,  2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கொலம்பியப் பாடகர் ஜே பால்வின் தொடக்க விழாவின் போது பாடுகிறார்.
மெக்சிகோ,  2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள்

பட மூலாதாரம், Reuters

மெக்சிகோ,  2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள்

பட மூலாதாரம், AFP via Getty Images

மெக்சிகோ,  2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள்

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, ஆண்ட்ரியா பொசெல்லி மற்றும் எஜே
மெக்சிகோ,  2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள்

பட மூலாதாரம், AFP via Getty Images

கூடுதல் தகவல்கள்- அஸ்டெகா ஸ்டேடியத்திலிருந்து பிபிசி ஸ்போர்ட்ஸ்-இன் எலிசபெத் கான்வே

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு