You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டெல்லியில் பிரதமர் மோதிக்கு எதிரான போஸ்டர்; 25 பேர் கைது, ராகுல் ட்வீட்
கொரோனா தொடர்பான செய்திகளை இந்தப் பக்கத்தில் பகிர்கிறோம்.
டெல்லியில் வியாழக்கிழமையன்று தடுப்பூசி தொடர்பாக பிரதமர் மோதியை விமர்சிக்கும் போஸ்டர்கள் பல்வேறு இடங்களில் காணப்பட்டன.
`எங்கள் குழந்தைகளின் தடுப்பூசியை ஏன் வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தீர்கள்` என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் அவை.
டெல்லி காவல்துறைக்கு இது தொடர்பாக தகவல் செல்ல தற்போது 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் பெரும்பாலானவர்கள் ஏழைகள், தினக்கூலிக்காக போஸ்டர் ஒட்டியவர்கள்.
இதை கண்டிக்கும் வகையில் அந்த போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ராகுல் காந்தி "என்னையும் கைது செய்யுங்கள்" என தெரிவித்துள்ளார்.
கொரோனா அலைக்கு மக்கள், அரசாங்கம், நிர்வாகம் அனைவரும் காரணம்: ஆர்.எஸ்.எஸ். தலைவர் புகார்
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சற்றே குறையத் தொடங்கி இருக்கிறது.
நேற்று சனிக்கிழமை இந்தியாவில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டோர் எண்ணிக்கை 3.11 லட்சமாக குறைந்திருக்கிறது. ஆனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,077 ஆக அதிகரித்து இருக்கிறது.
ஒட்டுமொத்தமாக இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 2.70 லட்சத்தைக் கடந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கொரோனா பிரச்சனை தீவிரமடைந்து வரும் இந்த சூழலில், கொரோனா பரவல் பிரச்சனைக்கு பொது மக்கள், அரசாங்கம், நிர்வாகம் என அனைவருமே காரணம் என ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளதாக ஏ என் ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.
"பொது மக்கள், அரசாங்கம், நிர்வாகம் என நாம் அனைவருமே முதல் அலையின் போது திருப்தி அடைந்துவிட்டோம். மருத்துவர்கள் நம்மை எச்சரித்தார்கள், ஆனால் நாம் தான் அசட்டையாக இருந்துவிட்டோம். ஆகையால் தான் இப்போது நாம் இந்த பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறோம். இப்போது கொரோனா மூன்றாவது அலை குறித்த பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன. நாம் இதற்கு அஞ்சக் கூடாது, ஆனால் தயாராக இருக்க வேண்டும்" என நேற்று (மே 15, சனிக்கிழமை) நாக்பூரில் பாசிடிவிட்டி அன்லிமிடெட் என்கிற கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளார்.
இது ஒருவரை ஒருவர் குறை கூறிக் கொள்ளவோ, செய்த நன்மை தீமைகளை குறிப்பிட்டுக் கூறுவதற்கான நேரமோ அல்ல எனவும் அவர் கூறினார்.
"கொரோனா வைரஸ் பெருந்தொற்று என்பது மனித குலத்துக்கு எதிரான சவால். அதில் இந்தியா ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். குறை நிறைகளை விவாதிக்காமல் நாம் அனைவரும் இணைந்து ஒரு அணி போல செயல்பட வேண்டும். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து ஓரணியாக நம் பணிகளை விரைவுபடுத்தினால், நாம் இதை கடந்து வந்துவிடலாம்" என கூறினார்.
"இந்த வாழ்வா சாவா போராட்டம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். கொரோனா பெருந்தொற்று நம்மை பயத்தில் ஆழ்த்தக் கூடாது. இந்த மாதிரியான சூழல்கள் நம்மை எதிர்காலத்துக்கு தயார்படுத்தும். வெற்றி இலக்கல்ல, தோல்வி நிலையல்ல, தொடர்ந்து உழைப்பதுதான் முக்கியம்" என அவர் கூறியதாக ஏ என் ஐ முகமை செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
பிற செய்திகள்:
- இஸ்ரேல் - பாலத்தீன சண்டை: இந்தியா ஆதரிப்பது யாரை?
- 'தேவை உள்ள வரை காசாவை தாக்குவோம்' - இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
- ரெம்டெசிவிர் மருந்து உயிரைக் காக்குமா? கொரோனா சிகிச்சையில் இதன் பங்கு என்ன?
- '60 லட்சம் யூதர்களைக் கொன்ற' நாஜி அதிகாரியை இஸ்ரேல் உளவாளிகள் சிறைபிடித்த கதை
- வீகர் இன முஸ்லிம்களை கட்டாய உழைப்பில் ஈடுபடுத்துகிறதா சீன அரசு?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்