குஜராத் கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து: 18 பேர் பலி

தீ விபத்து ஏற்பட்ட மருத்துவமனை.
படக்குறிப்பு, தீ விபத்து ஏற்பட்ட மருத்துவமனை.
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

குஜராத் மாநிலம் பரூச் என்ற இடத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டனர்.

பட்டேல் நல மருத்துவமனை என்ற அந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கு வாக்கில் தீப்பிடித்தது.

அந்த அவசர சிகிச்சைப் பிரிவில் சில நோயாளிகள் வென்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டிருந்தனர்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

அவசர சிகிச்சைப் பிரிவு முழுவதும் இந்த தீ பரவியிருந்தது என்கிறார் பிபிசி குஜராத்தி சேவைக்காக பரூச்சியில் இருந்து செய்தி அளிக்கும் சஜித் பட்டேல்.

மருத்துவமனையில் தீப்பிடித்தது குறித்து அறிந்ததும் அக்கப்பக்கத்தில் இருந்தவர்கள் அங்கே விரைந்து வந்து உதவினர்.

தீயணைப்புத் துறையினரும் விரைந்து வந்தனர்.

அவசர சிகிச்சைப் பிரிவின் கதவை தீ சூழ்ந்துகொண்டதால், ஜன்னல்களை உடைத்து உள்ளே மாட்டிக்கொண்டவர்கள் மீட்கப்பட்டனர்.

இந்த விபத்தில் 18 பேர் இறந்திருப்பதாக பரூச் காவல் கண்காணிப்பாளர் ராஜேந்திர சிங் சுடாஸ்மா தெரிவித்துள்ளார்.

பிற மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட நோயாளிகளின் விவரங்கள் தெரிந்த பிறகுதான் இறந்தவர்களின் முழு எண்ணிக்கை தெரியவரும் என்கிறது மருத்துவமனை நிர்வாகம்.

வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படும் நோயாளிகள்.

பட மூலாதாரம், BB/Sajid Patel

படக்குறிப்பு, வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படும் நோயாளிகள்.

அங்கிருந்து மீட்கப்பட்ட நோயாளிகள் அல் மஹ்மூத் மருத்துவமனை, சேவாஸ்ரம் மருத்துவமனை, பரூச் சிவில் மருத்துவமனை ஆகிய இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

தீவிபத்தில் பாதிக்கப்பட்ட மருத்துவமனையின் ஒரு பகுதி.
படக்குறிப்பு, தீவிபத்தில் பாதிக்கப்பட்ட மருத்துவமனையின் ஒரு பகுதி.

இந்த தீ விபத்துக்கான காரணம் உடனே தெரியவில்லை. எனினும் மின் கசிவால் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்கின்றன ஆரம்ப கட்டத் தகவல்கள்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :