விவசாயிகள் போராட்டம்: குடியரசு தினத்தில் டெல்லி டிராக்டர் பேரணிக்கு போலீஸ் அனுமதி

பட மூலாதாரம், Getty Images
டெல்லி எல்லைகளில் கடந்த இரண்டு மாதங்களாக நெடுஞ்சாலைகளை மறித்துப் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் குடியரசு தினத்தில் டெல்லி நகரில் டிராக்டர் பேரணி நடத்த போலீஸ் அனுமதி அளித்துள்ளது.
சர்ச்சைக்குரிய மூன்று விவசாய சட்டங்களையும் ரத்து செய்யவேண்டும் என்று வலியுறுத்தி விவசாயிகள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரசாங்கம் நடத்திய பல கட்டப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. விவசாய சட்டங்களை நிறுத்திவைத்தும், அது குறித்துப் பரிசீலிக்க குழுக்களை அமைத்தும் உச்சநீதிமன்றம் உத்தரவுபிறப்பித்தது.
ஆனால், இதை ஏற்று விவசாயிகள் போராட்டத்தைக் கைவிடவில்லை. பிறகு மத்திய அரசே இந்த சட்டத்தை 18 மாதங்களுக்கு நிறுத்திவைப்பதாக அறிவித்தது. அதையும் விவசாயிகள் நிராகரித்தனர். சர்ச்சைக்குரிய மூன்று சட்டங்களையும் திரும்பப் பெறவேண்டும் என்ற கோரிக்கையில் விவசாயிகள் உறுதியாக நிற்கிறார்கள்.
இந்நிலையில், குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தப்போவதாக அவர்கள் அறிவித்தனர். அந்தப் போராட்டத்துக்கு இதுவரை அனுமதி அளிக்காமல் இருந்த டெல்லி போலீஸ் இன்று சனிக்கிழமை அனுமதி அளித்துள்ளதாக பி.டி.ஐ. செய்தி முகமை குறிப்பிடுகிறது. விவசாயிகள் தலைவர் அபிமன்யு கோஹரை மேற்கோள் காட்டி இந்த செய்தியை ட்விட்டரில் தெரிவித்துள்ளது பிடிஐ.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
போராடும் விவசாயிகள் அமைப்புகள் போலீசை சந்தித்த பிறகு இந்த அறிவிப்பு வெளியானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஜிபூர், டிக்ரி, சிங்கு எல்லைப் போராட்டக் களங்களில் இருந்து டிராக்டர் பேரணிகள் கிளம்ப வாய்ப்புள்ளது என்றும் இன்று இரவு இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் போராடும் விவசாயிகள் சங்கங்களின் தலைவர்கள் கூறியுள்ளனர் என்றும் பி.டி.ஐ. தெரிவித்துள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
ஏற்கெனவே பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து இந்தப் பேரணியில் பங்கேற்பதற்காக விவசாயிகள் தங்கள் டிராக்டர்களில் அணி அணியாக கிளம்பி டெல்லி நோக்கிப் பயணிக்கிறார்கள். அந்த டிராக்டர் அணிகளில் வழியில் உள்ள விவசாயிகளும் சேர்ந்துகொள்கிறார்கள். யு.என்.ஐ. செய்தி நிறுவனம் உள்பட பல ஊடகங்கள் இது தொடர்பான செய்திகளைப் பதிவு செய்துள்ளன.
இதனிடையே ஹரியாணாவில் குண்ட்லி, மனேசர், பல்வால் ஆகிய இடங்களில் இருந்து சிங்கு எல்லைப் பகுதி வரையில் டிராக்டர் பேரணிக்காக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சோனிபட் காவல் கண்காணிப்பாளர் ஜஷன்தீப் சிங் ரண்தவா தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
- "என்னை அழைத்து அவமதிக்காதீர்கள்" - மோதி முன்னிலையில் கோபப்பட்ட மம்தா பேனர்ஜி
- மனித உரிமை மீறலை விசாரிக்க இலங்கை ஜனாதிபதி நியமித்த குழு: தமிழர்கள் கருத்து என்ன?
- கார் பார்க்கிங்கில் தூங்கிய அமெரிக்க பாதுகாப்புப் படையினர்: பைடன் மன்னிப்பு கேட்டார்
- "கொரோனா வைரஸின் புதிய திரிபு உயிரிழப்பை தீவிரப்படுத்தக்கூடும்" - எச்சரிக்கும் பிரிட்டன்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்















