You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி எப்போது? தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2021 ஏப்ரல் அல்லது மே?
தமிழகத்தில் செய்யப்பட்டு வரும் தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக தேர்தல் ஆணைய அதிகாரி உமேஷ் சின்ஹா தலைமையிலான அதிகாரிகள் டிசம்பர் மாத மத்தியில் சென்னைக்கு வந்தனர்.
அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
அப்போது மே மாதத்தில் வெயில் அதிகமாக இருக்கும் என்பதால், ஏப்ரல் மாதம் மூன்றாவது, நான்காவது வாரத்திலேயே ஒரே கட்டமாக தேர்தலை நடத்தி முடித்துவிட வேண்டும் என அ.தி.மு.க. சார்பில் கோரப்பட்டுள்ளது என அக்கட்சியின் தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.
தி.மு.கவைப் பொறுத்தவரை ஒரே கட்டமாகத் தேர்தலை நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருப்பதாக அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்தார். "இந்த முறை இரண்டு அல்லது மூன்று கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என செய்திகள் வருகின்றன. ஆகவே ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டுமென சொல்லியிருக்கிறோம். மேலும் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் மூலம் வாக்களிக்க அனுமதிக்கக்கூடாது என்றும் கோரியிருக்கிறோம்" என செய்தியாளர்களிடம் ஆர்.எஸ். பாரதி கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் சார்பிலும் 80 வயதுக்கு மேற்பட்டவர்களை தபால் மூலம் வாக்களிக்க அனுமதிக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டதாக அக்கட்சியின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டுமெனக் கோரியுள்ளது.
ஒருவேளை அதிமுகவின் கோரிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டால் ஏப்ரல் மாதம் மூன்றாவது, நான்காவது வாரத்திலேயே வாக்குப்பதிவு நடக்க வாய்ப்புள்ளது. இல்லாவிட்டால் தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் தேதியில் வாக்குப்பதிவு நடைபெறும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: