கொரோனா விதிகளை மீறினால் அபராதம்: தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல்

பட மூலாதாரம், Arun Sankar/ Getty Images
கொரோனா பெருந்தொற்று கட்டுப்பாடு விதிகளை மீறினால் கடுமையான அபராதம் விதிக்க வகை செய்யும் தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்பதல் வழங்கியுள்ளார்.
சமூக இடைவெளியை கடைபிடிப்பது, முக கவசம் அணிவது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்காதவர்கள் மீது அபராதம் விதிக்க தமிழக பொது சுகாதார சட்டத்தில் திருத்தம் கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி, பொது இடங்கள், பணியிடங்கள் என அனைத்து இடங்களிலும் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதேபோல, கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் தனிமைப்படுத்திக்கொள்வதும் சட்ட ரீதியாக கட்டாயமாக்கப்படுகிறது.
மேலும், தீவிரமான விழிப்புணர்வு அளிக்கப்பட்டுள்ளபோதும் ஒரு சில நபர்கள் மற்றும் நிறுவனங்களில் கொரோனா தடுப்பு வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும் அதன் மூலம் பிறருக்கு தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால் புதிய சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அதற்கு ஏதுவாக அரசு முன்னமொழிந்துள்ள அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார் என்றும் அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே டெங்கு போன்ற பரவும் நோய்களை ஏற்படுத்தும் தொழில் நிறுவனங்களுக்கு ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கலாம் என்று நடைமுறை உள்ளது. அதேபோல கொரோனா தொற்று நோய் தடுப்பு நடைமுறைக்கும் அபராதம் விதிக்க புதிய சட்டத்திருத்தம் வகை செய்யும்.
கொரோனா தொற்று தடுப்பு நடைமுறைகளை பின்பற்றாத நபர்கள் மீது 500 முதல் 5000 வரை புதிய சட்டம் மூலம் அபராதம் விதிக்க முடியும்.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

பட மூலாதாரம், AFP
பிற செய்திகள்:
- ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார் ஹர்பஜன் சிங் - காரணம் என்ன?
- "சிங்கம்" பட ஹீரோ போல இருக்காதீர்கள் - ஐபிஎஸ் பயிற்சி அதிகாரிகளுக்கு பிரதமர் மோதி அறிவுரை
- கஃபீல் கான்: தேசத்துக்கு அச்சுறுத்தலா அல்லது அடக்குமுறையின் அடையாளச் சின்னமா?
- காட்டுமன்னார்கோயில் அருகே பட்டாசு தொழிற்சாலையில் விபத்து - 7 பெண்கள் பலி
- பாலியல் சுதந்திரம் தரும் நிர்வாண விடுதி கொரோனா மையமாக மாறியது
- தமிழக கோயில்கள்: பண்பாட்டுப் பெருமிதத்தின் உச்சம்
- பெய்ரூட் வெடிப்பு: இடிபாடுகளுக்கு இடையே இதயத் துடிப்பை தேடும் மக்கள்
- பாஜக எம்எல்ஏ ராஜா சிங்: இல்லாத பேஸ்புக் கணக்கை எப்படி முடக்குவார்கள்? பேஸ்புக் நடவடிக்கை பற்றி கேள்வி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:





















