You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சந்திரயான் 2 விண்கலம் சேகரித்த தரவுகள் அக்டோபரில் வெளியீடு - இஸ்ரோ
இந்தியா நிலவுக்கு அனுப்பிய சந்திரயான் 2 விண்கலம் செவ்வாய் அன்று முதல் ஆண்டை நிறைவு செய்தது.
இதனிடையே சந்திரயான்-2 விண்கலம் சேகரித்த தரவுகள் 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற இருந்த ஏனுவல் லூனார் ப்ளானட்டரி சயின்ஸ் கான்ஃபரன்ஸ் என்ற அறிவியல் மாநாட்டில் இஸ்ரோ வெளியிட இருந்தது.
எனினும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த மாநாடு ரத்து செய்யப்பட்டது.
ஜூலை 22 2019 ஆம் ஆண்டு 'பாகுபலி' என்று அழைக்கப்பட்ட ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஒன்றின் மூலம் சந்திரயான்-2 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.
பாகுபலி என்பது இந்த விண்கலத்தின் அலுவல்பூர்வமான பெயர் கிடையாது. ஜிஎஸ்எல்வி MK-III M-1 என்பது அந்த ராக்கெட்டின் பெயர்.
ஆகஸ்டு 20 2019 அன்று நிலவின் சுற்றுவட்ட பாதையை சந்திரயான்-2 விண்கலம் சென்றடைந்தது.
இந்த விண்கலத்தில் 8 பாகங்களும் தற்போது சரியாக நன்றாக வேலை செய்வதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்:
- பாலியல் தொழிலாளியின் பெயரில் டெல்லியில் ஒரு மசூதி: வரலாறு என்ன?
- அதிமுகவை விமர்சிக்கும் பாஜக: கந்த சஷ்டி கவசத்தால் கூட்டணியில் முரண்?
- 'நான் ஒன்றும் முட்டாள் கிடையாது': கிரண்பேடி; 'பலமுறை சொல்லிவிட்டேன்': நாராயணசாமி
- N-95 முகக்கவசம்: இந்திய அரசு புதிய எச்சரிக்கை - யார், எப்படி பயன்படுத்த வேண்டும்?
- ஆணுறை டூ டயர்: ரப்பர் உற்பத்தி - குருதியால் எழுதப்பட்ட சர்ச்சைக்குரிய வரலாறு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :