Tik Tok, Helo ஆப்கள் தடையால் முடக்கம்: சமூக ஊடகங்களில் ட்ரெண்டாகும் RiptiktokIndia

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

தேச பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி சீனாவின் ‘டிக் டாக்’, ஹெலோ ‘ஷேர்இட்’ செயலிகள் உள்பட 59 செல்போன் செயலிகளுக்கு இந்தி அரசு திங்கட்கிழமை தடை விதித்தது.

இந்திய அரசு தடை விதித்த கேம் ஸ்கேனர், ஷேர் இட் உள்ளிட்ட பல செயலிகள் இன்னும் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் சூழலில், சமூக ஊடகமான டிக் டாக், ஹெலோ ஆப்கள் முழுவதுமாக முடங்கின. ஆப் ஸ்டோர்களிலிருந்தும் அவை நீக்கப்பட்டன.

இந்திய அரசு விதித்த தடையை அடுத்து இந்த செயலிகள் முடக்கப்படுவதாகக் கூறும் டிக் டாக் மற்றும் ஹெலோ நிறுவனங்கள், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாக கூறுகின்றன.

டிக் டாக் அறிக்கை

“தனிநபர் தரவுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களில் இந்திய சட்டங்களுக்கு இணைந்து தொடந்து செயல்பட தயாராக உள்ளோம். இந்திய பயனாளர்களின் எந்த ஒரு தரவுகளையும் நாங்கள் சீனா உள்பட எந்த ஒரு நாட்டுடனும் பகிர்ந்து கொள்வது கிடையாது. கோரிக்கை வரும் பட்சத்தில் வரும் காலத்தில் இதே அணுகுமுறையை பின்பற்ற தயாராக இருக்கிறோம். தனிநபர்களின் அந்தரங்க தகவல்கள், மரியாதைக்கு அதிகபட்ச முக்கியத்துவம் அளிப்போம்,” என்று டிக் டாக் கூறியதாக சில நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ட்விட்டரில் அஞ்சலி

இந்தியாவில் டிக் டாக் மிக பிரபலம். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் இந்திய பாடல்களை டிக் டாக் செய்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி இருக்கிறார்.

குறிப்பாக தமிழகத்தில் பல சாமானியர்களை பிரபலமடைய செய்தது டிக்டாக்.

இந்த நிலையில் டிக் டாக்கிற்கு இளைஞர்கள் வேடிக்கையாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

RipTiktokIndia என்ற ஹாஷ்டேகும் சமூக ஊடகமான ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.

இந்த ஹாஷ்டேகின் கீழ் ஏராளமான பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: