பஞ்சாப் சீக்கிய ஊர்வலம்: பட்டாசு ஏற்றிச் சென்ற வண்டி வெடித்ததில் இருவர் பலி

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்

பஞ்சாபில் சீக்கிய ஊர்வலம் ஒன்றில் பட்டாசு ஏற்றிச் சென்று கொண்டிருந்த டிராக்டர் ட்ரோலி வெடித்ததில் இருவர் பலியாகினர். இதில் பலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர். 9 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் டார்ன் டரன் மற்றும் குரு நானக் பல்நோக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்று துணை ஆணையர் பிரதீப் குமார் சபர்வால் தெரிவித்தார்.

டார்ன் டரன் நகரத்தில் உள்ள பஹுவின்ட் கிராமத்திற்கு அருகே இந்த சம்பவம் நிகழ்ந்தது.

"ஒரு சில சிறுவர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தபோது, அதில் இருந்த நெருப்பு, அருகில் இருந்த பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த ட்ராக்டர் ட்ரோலியின் மீது விழுந்ததில் இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது" என எஸ்பி த்ருவ் தெரிவித்தார்.

விசாரணை நடத்த பஞ்சாப் முதல்வர் உத்தரவு

இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் காயமடைந்தவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

"டார்ன் டரனில் நடந்த வெடிப்பு சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த மாவட்ட நீதிபதிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என முதல்வர் அமரிந்தர் சிங் ட்வீட் செய்துள்ளார்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: