சிதம்பரம் கோயில் தீட்சிதர் விவகாரம் - பிபிசி தமிழ் பெயரில் பரவும் போலிச் செய்தி

போலிச் செய்தி
பிரசுரிக்கப்பட்டது

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர் ஒருவர் அர்ச்சனை செய்ய வந்த பெண்ணைத் தாக்கிய சம்பவத்தில் பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவை தொடர்புபடுத்தி பிபிசி தமிழ் பெயரில் போலிச் செய்தி ஒன்று பரப்பப்பட்டு வருகிறது.

அந்த செய்தியில் பிபிசி தமிழின் சமூக ஊடகப்பக்கங்களில் வெளியிடப்படும் புகைப்படங்களைப் போன்று போலியாக தயார் செய்யப்பட்டு அதில் ஹெச். ராஜாவின் கருத்து என்று ஒரு செய்தி இடம்பெற்றிருந்தது.

பிபிசி தமிழுக்கும் சமூக ஊடங்களில் பகிரப்படும் இந்த செய்திக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.

தயவு செய்து நேயர்கள் இதுபோன்ற போலி கருத்துகளை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :