#KashmirBleeds #StandwithKashmir காஷ்மீருக்காக ஒன்று திரண்டு குரல் கொடுக்கும் இணையவாசிகள்

காஷ்மீர்

பட மூலாதாரம், TAUSEEF MUSTAFA

பிரசுரிக்கப்பட்டது

கடந்தவாரம் முதலில் 10 ஆயிரம் கூடுதல் பாதுகாப்புப் படையினரும், பிறகு 25 ஆயிரம் படையினரும் காஷ்மீருக்கு அனுப்பப்பட்டனர். இதையடுத்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க சென்ற பக்தர்களை அங்கிருந்து வெளியேறும்படி கவர்னர் ஆட்சியில் இருக்கும் காஷ்மீர் மாநில அரசு அறிவுறுத்தியது.

ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் முன்னாள் முதல்வர்கள் உள்ளிட்ட மையநீரோட்ட அரசியல் தலைவர்கள் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.

அங்கு முக்கிய தலைவர் வீட்டுச்சிறையில் அடைப்பு, 144 தடை உத்தரவு, இணைய சேவை முற்றிலும் முடக்கம் என்று நிலைமை மேலும் மோசமாகியுள்ளது.

இந்நிலையில், ட்விட்டரில் #KashmirBleeds #StandwithKashmir போன்ற ஹேஷ்டாகுகள் திங்கட்கிழமை காலையில் இருந்து ட்ரெண்ட் ஆகி வருகின்றன.

காஷ்மீரில் நிலவும் சூழல் சரிசெய்யப்பட வேண்டும் என்று இணையவாசிகள் அறிவுறுத்தி வருகிறார்கள். மேலும் பலரும் அங்குள்ள மோசமான நிலையையும் பதிவிட்டு வருகிறார்கள்.

Twitter

பட மூலாதாரம், Twitter

Twitter

பட மூலாதாரம், Twitter

Twitter

பட மூலாதாரம், Twitter

ஒவ்வொரு இந்தியரும் காஷ்மீருக்காக குரல் கொடுக்க வேண்டும் என்றும் அம்மாநில மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Twitter

பட மூலாதாரம், Twitter

Twitter

பட மூலாதாரம், Twitter

Twitter

பட மூலாதாரம், Twitter

காஷ்மீரில் தகவல் தொடர்பு சேவை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அங்குள்ள குடும்பங்களை தொடர்பு கொள்ள முடியாமல் பலரும் கவலைப்படுவதாக கூறப்படுகிறது.

Twitter

பட மூலாதாரம், Twitter

Twitter

பட மூலாதாரம், Twitter

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :