You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டிக் டாக், வி சாட் செயலிகளுக்கு அமெரிக்காவில் தடை – அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் திடீர் நடவடிக்கை
அமெரிக்காவில் நாளை (ஞாயிற்றுக்கிழமையிலிருந்து) டிக் டாக் மற்றும் வீ சாட் செயலிகள் தடை செய்யப்படுகின்றன.
இருப்பினும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கடைசி நேர ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொள்ளும்பட்சத்தில் இந்த தடை விலக வாய்ப்புகள் உள்ளன.
இந்த ஒரு ஆப் ஸ்டோரிலும் இந்த செயலிகள் பதிவிறக்கம் செய்யப்படுவது நிறுத்தப்படும் என அமெரிக்க வர்த்தத் துறை தெரிவித்துள்ளது.
இந்த செயலிகள் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளன எனவும் இந்த செயலிகளில் சேகரிக்கப்படும் பயனர்களின் தகவல்கள் சீனாவுக்கு வழங்கப்படலாம் டிரம்ப் நிர்வாகம் தெரிவிக்கிறது ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை சீனாவும் அந்நிறுவனங்களும் மறுக்கின்றன.
வீ சாட் செயலியை பயனர்கள் ஞாயிற்றுக்கிழமையிலிருந்து பயன்படுத்த இயலாது ஆனால் டிக் டாக் செயலியை நவம்பர் 12ஆம் தேதி வரை பயன்படுத்தலாம்.
இந்த ஆணையின் மூலம் “அதிருப்தி” அடைந்திருப்பதாக டிக் டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் டிரம்ப் நிர்வாகத்தின் சந்தேகங்களை கருத்தில் கொண்டு இதுவரை இல்லாத அளவு கூடுதல் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
வி – சாட் நிறுவனத்தை நிர்வகிக்கும் டென்சன்ட் நிறுவனம் இந்த தடை “துரதிருஷ்டவசமானது” என தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து தொடர்ந்து அமெரிக்க அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவித்துள்ளது.
அதிபர் டிரம்ப் ஆகஸ்டு மாதம் நிர்வாக ஆணை ஒன்றில் கையெழுத்திட்டார். அதன்பின் வர்த்தகத் துறை இந்த செயலிகளுக்கான தடை ஆணையை வெளியிட்டுள்ளது.
இருப்பினும் திட்டமிட்டுள்ள அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான ஓரக்கலுக்கும், டிக் டாக்கை நிர்வகிக்கும் பைட் டான்ஸ் நிறுவனத்துக்கும் ஒப்பந்தம் ஏற்பட்டு அது அமெரிக்க அதிபரால் ஒப்புக் கொள்ளப்பட்டால் இந்த தடை இருக்காது.
வெள்ளியன்று டிக் டாக் தொடர்பாக விரைவில் ஒரு ஒப்பந்தம் ஏற்படும் என தான் நம்புவதாக டிரம்ப் தெரிவித்தார்.
"தீவிர பாதிப்புகளுக்கான ஆக்ஸிஜன் தேவை மேலும் அதிகமாகும்"
கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் இனி வரும் நாட்களில் ஆக்ஸிஜன் தேவை மேலும் அதிகமாகும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் இந்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக வெள்ளிக்கிழமை இரவு அவர் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
அதில், "கோவிட்-19 வைரஸ் கடுமையான பாதிப்புள்ள நோயாளிகளுக்கு, போதுமான மற்றும் தடையற்ற ஆக்ஸிஜன் விநியோகம் இருப்பது அவசியமான நடவடிக்கை என்பதை அறிந்துள்ள அதே சமயம், வரும் நாட்களில் ஆக்ஸிஜன் தேவை மேலும் அதிகமாகலாம்" என்று அவர் கூறியுள்ளார்.
விரிவாக படிக்க: https://bbc.com.im/tamil/india-54212750%3C/a%3E%3C/p%3E%3C/div%3E%3Cdiv dir="ltr" class="css-1k9op6x e17x9cvu0">
விவசாயிகள் மசோதா: கடுமையாக எதிர்த்த தமிழக எம்.பி.க்கள்; ஒரே கட்சியாக ஆதரித்த அதிமுக
விரிவாக படிக்க: https://bbc.com.im/tamil/india-54209515%3C/a%3E%3C/p%3E%3C/div%3E%3Cdiv dir="ltr" class="css-1k9op6x e17x9cvu0">
விரிவாக படிக்க: https://bbc.com.im/tamil/india-54207263%3C/a%3E%3C/p%3E%3C/div%3E%3Cdiv dir="ltr" class="css-1k9op6x e17x9cvu0">
விரிவாக படிக்க: https://bbc.com.im/tamil/india-54204078%3C/a%3E%3C/p%3E%3C/div%3E%3Cdiv dir="ltr" class="css-1k9op6x e17x9cvu0">
சமூக மாற்றம் படைக்கும் கோயம்புத்தூர் திருநங்கைகள், காணொளியை காண கீழே கிளிக் செய்யவும்
- ”பூதம் உங்களை ஒரு நாள் காவு வாங்கும்” - மோதி அரசுக்கு எதிராக சீறிய பெண் எம்.பி
- பாபர் மசூதி இடிந்த கதை தெரியுமா? எங்கோ தொடங்கி எங்கோ சென்ற வரலாறு
- நீட் விவகாரம் தொடர்பாக சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை இல்லை - உயர் நீதிமன்றம்
- இலங்கையில் ஒரு கிலோ மஞ்சள் ரூ.4500 வரை விற்கப்படுவதற்கான காரணம் என்ன?
- இந்தியாவில் கொரோனா வைரஸ் நாம் நினைப்பதை விட பெரிய பிரச்சனையாக உருவெடுக்கிறதா?
- “வணக்கம். நான் இறந்தவன் பேசுகிறேன்” – இறுதிச் சடங்குகளில் வருமானம் ஈட்டும் நபர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :