You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சிரியா நாட்டிலிருந்து புறப்பட்டு இராக் செல்லும் அமெரிக்கா துருப்புகள் மற்றும் பிற செய்திகள்
இராக் செல்லும் அமெரிக்க திருப்புகள்
வடக்கு சிரியாவிலிருந்து திரும்பப்பெறப்பட்ட அமெரிக்க துருப்புகள் அங்கிருந்து புறப்பட்டு மேற்கு இராக்கிற்கு செல்ல இருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய திட்டத்தின்படி ஏறத்தாழ 1000 ராணுவ வீரர்கள் ஐ.எஸ் அமைப்பின் எழுச்சியைக் கட்டுப்படுத்துவதற்காக அனுப்பப்படுகிறார்கள் என்று எஸ்பர் கூறி உள்ளார். அமெரிக்கத் துருப்புகள் அனைத்தும் நாடு திரும்பும் என முன்னர் டொனால்ட் டிரம்ப் கூறி இருந்தார்.
இராக் நாட்டில் மீண்டும் ஐ.எஸ் எழுச்சி பெறுகிறது. அவர்களுக்கு எதிராக அமெரிக்கப் படைகள் இராக் அரசுக்கு ஆதரவாக இருக்குமென எஸ்பர் தெரிவித்துள்ளார்.
"யாழ் விமான நிலையத்தில் தமிழுக்கு முன்னுரிமையா?"
இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையம், யாழ்ப்பாணம் பலாலி பகுதியில் கடந்த 17ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. உள்ளக விமானச் சேவைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த பலாலி விமான நிலையம், இந்தியாவின் நிதியுதவியின் கீழ் புனரமைக்கப்பட்டு சர்வதேச விமான நிலையமாகத் திறந்து வைக்கப்பட்டது.
நிஜ கே.ஜி.எஃப் கதை: வைர சுரங்கங்களில் ஆப்ரிக்கர்கள் சுரண்டப்படுகிறார்களா?
பட்டைத் தீட்டப்படாத வைரங்களை ஜிம்பாப்வேவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு அமெரிக்க அரசு இம்மாத தொடக்கத்தில் தடை விதித்தது. இதற்கு அமெரிக்க சொல்லிய காரணம், "ஆப்ரிக்கா நாடுகளில் இருக்கும் வைர சுரங்கங்களில் ஊழியர்கள் கட்டாயமாக பணியமர்த்தப்பட்டு சுரண்டப்படுகிறார்கள்" என்பதுதான். ஆனால், ஆப்ரிக்கா இந்த குற்றச்சாட்டை மறுத்துவிட்டது. இது பொய்யான குற்றச்சாட்டு அல்லது அமெரிக்காவை யாரோ தவறாக வழிநடத்துகிறார்கள் எனக் கூறிவிட்டது.
எகிப்து அகழாய்வு: பழங்கால சவப்பெட்டிகள் கண்டுபிடிப்பு
எகிப்து நகரமான லக்சாருக்கு அருகே மரத்தாலான 20 சவப்பெட்டிகளை அகழ்வாராய்ச்சி குழு ஒன்று கண்டுபிடித்துள்ளது.
இதனை அந்நாட்டின் தொல்பொருள் அமைச்சகமும் உறுதிப்படுத்தி உள்ளது.
இந்த சவப்பெட்டிகளின்மீது பூசப்பட்ட வண்ணம் இன்றும் தெரிகிறது.
விரிவாகப் படிக்க:எகிப்து அகழாய்வு: பழங்கால சவப்பெட்டிகள் கண்டுபிடிப்பு
பாகிஸ்தான் - இந்தியா ராணுவத் தாக்குதல்
பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், பயங்கரவாதிகள் 6 முதல் 10 பேர் வரை கொல்லப்பட்டதாக ராணுவத் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் தாங்தார் பிரிவைத் தாண்டி பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் செயல்பட்டுவந்ததாக சொல்லப்படும் நான்கு தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் தொடுத்துள்ளதாக இந்திய ராணுவத் தரப்பை மேற்கோள் காட்டி ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்