You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
புதிய அரசியல் சாசனம் தொடர்பாக மக்கள் கருத்தறியும் ஐவரி கோஸ்ட்
நெருக்கடி மிகுந்த ஆண்டுகளுக்கு பின்னர் நாட்டை முன்னேற்றப் பாதையில் நடத்தி செல்ல உதவும் என்று அதிபர் அல்லசாம் வட்டெரா கூறுகின்ற புதிய அரசியல் சாசனத்தை ஏற்றுகொள்வது தொடர்பாக, மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு ஒன்றை ஐவரி கோஸ்ட் நடத்துகிறது.
இந்த மசோதாவின் வரைவு மிக அவசரகதியில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதிபருக்கு அதிக அதிகாரங்களை இது வழங்கும் என்று கூறி, இதற்கு வாக்காளிக்காமல் எதிர்ப்பு தெரிவிக்க எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.
ஐவரி கோஸ்ட்-இல் 2002 ஆம் ஆண்டிலிருந்து இரண்டு உள்நாட்டு போர்கள் நடைபெற காரணமாகியிருக்கும் ஒரு பிரச்சினையான, அதிபர் வேட்பாளர்களுக்கு குடியுரிமை விதிகளை தளர்த்துவது என்பது, இந்த புதிய அரசியல் சாசனத்தின் முக்கிய அம்சமாகும்.
நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்களை கொண்ட செனட் அவையை அதிபர் நியமிப்பதையும் இந்த புதிய அரசியல் சாசனம் குறிப்பிடுகிறது.