You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சுஷாந்த் சிங் நடித்த ’தில் பேச்சாரா’ படத்தின் டிரெய்லர் - பாராட்டி ட்வீட் பகிர்ந்த ஏ. ஆர். ரகுமான், நவாசுதீன் சித்திக்
ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் சுஷாந்த் சிங் நடித்த தில் பேச்சாரா படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.
ஜான் கிரீன் எழுதிய தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ் என்கிற நாவலை மையமாகக் கொண்டு தில் பேச்சாரா என்கிற ஹிந்திப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
முகேஷ் சாப்ரா இயக்கியுள்ள இந்தப் படத்தில் சுஷாந்த் சிங், சஞ்சனா சங்கி போன்றோர் நடித்துள்ளார்கள்.
டிரெய்லர் வெளியாகிய சில மணி நேரங்களில் ஏறத்தாழ ஐந்து லட்சம் பேர் அதனை பார்த்துள்ளனர்.
இந்திய அளவில் #DilBecharaTrailer என்ற ஹாஷ்டேகும் ட்ரெண்டாகி உள்ளது.
சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலர் இந்த ஹாஷ்டேகில் ட்வீட் பகிர்ந்து வருய்கின்றனர்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பகிர்ந்த ட்வீட்டில், "தில் பேச்சாரா படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இந்த காதல் கதையை கொண்டாடுங்கள்," என குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் நவாசுதீன் சித்திக்கும் இந்த படத்தின் டிரெயிலரை பகிர்ந்துள்ளார்.
இது போன்று பல பிரபலங்களும் இந்த படத்தினை பார்க்கக் கோரி ட்வீட் பகிர்ந்துள்ளனர்.
இந்த படத்தின் இயக்குநர் முகேஷ் பகிர்ந்துள்ள ட்வீட்டில், இந்த படத்தை திரைக்கு கொண்டு வர இரண்டு வருடங்கள் காத்திருக்க நேரிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த படம் குறித்து உருக்கமான பதிவை அவர் பகிர்ந்துள்ளார்.
இந்த படத்தின் டிரெயிலரில் வரும் ஒரு காட்சியில் 'HELP!' என்ற வாசகம் பொறித்த ஒரு டீ சர்ட்டை சுஷாந்த் அணிந்துள்ளார். அதனை குறிப்பிட்டு பலர் ட்வீட் பகிர்ந்துள்ளனர்.
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :