You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வெப்ப அலை: மக்களுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படலாம்? தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
மார்ச்-ஏப்ரல் மாதங்களில் வெயிலின்போது வெளியே செல்லவே அச்சமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் உச்சி வெயிலில் வெளியே செல்லாதே என்ற அறிவுரைகளை வீட்டின் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருப்போம்.
அனல் காற்றின் வெப்ப உணர்வு முகத்தில் வீசும்போது, தொண்டை வறண்டு நீரைத் தேடச் சொல்லிக் கெஞ்சுவதை உணராதவர்கள் இருக்கமுடியாது.
வெயிலில் வைக்கும் செடிகள் கருகத் தொடங்குவது, துவைத்து காயவைத்த துணிகள் அதிவேகமாக உலர்ந்துவிடுவது என்று கோடைக்கால அனுபவங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
இந்நிலையில் வெப்ப அலையால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள என்னவெல்லாம் செய்ய வேண்டும்?
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)