You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சுடுகாட்டில் ஊஞ்சல் அமைத்த நிர்வாகம் - வித்தியாசமாக எதிர்ப்பு தெரிவித்த மக்கள்
மகாராஷ்டிராவில் உள்ள ஒரு சுடுகாட்டில் ஊஞ்சல் மற்றும் உடற்பயிற்சி உபகரணங்கள் அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, உள்ளூர்வாசிகள் பேயை சித்தரிக்கும் வகையில் உடையணிந்து நகராட்சி அலுவலகத்துக்கு சென்றனர். இந்த சம்பவம் வசய் விரார் பகுதியில் நடந்தது.
'பேய்களை கவனித்துக் கொண்டதற்கு நன்றி' என கூறி கேலி செய்யும் விதமாக அதிகாரிகளுக்கு பூங்கொத்தை வழங்கினர். உள்ளூர் மக்கள் எதிர்ப்பை தொடர்ந்து, ஊஞ்சல் மற்றும் உடற்பயிற்சி உபகரணங்களை நகராட்சி அதிகாரிகள் அகற்றினர். சுடுகாட்டு இடத்துக்கு பதிலாக அருகே உள்ள திறந்தவெளியில் இதை அமைத்திருக்கலாம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு