காஸாவில் மருத்துவமனை மீது தாக்குதல் - நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு

காஸாவில் மருத்துவமனை மீது தாக்குதல் - நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு
பிரசுரிக்கப்பட்டது

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நடைபெற்று வரும் மோதல் காரணமாக காஸாவில் தொடர் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. காஸா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வருகிறது.

எந்தவொரு போரிலும் மருத்துவமனைகள் மனிதாபிமான அடிப்படையில் தாக்கப்படுவது தவிர்க்கப்படும். ஆனால் காஸாவில் தற்போது அல் அஹலி அரபு மருத்துவமனை ராக்கெட் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. இதில் 471 பேர் உயிரிழந்துள்ளதாக காஸா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல் இஸ்ரேலால் நிகழ்த்தப்பட்டது என பாலத்தீன அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் இஸ்ரேல் இந்த தாக்குதலை தான் நடத்தவில்லை, பாலத்தீன இஸ்லாமிய ஹிஜாத் அமைப்பு நடத்தியது என்றும் கூறுகிறது. அந்த அமைப்பு தவறாக ராக்கெட்டை மருத்துவமனை மீது ஏவியது என்று இஸ்ரேல் கூறுகிறது.

இஸ்ரேல் வந்திருந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தவில்லை, எதிரணியில் இருப்பவர்கள் நிகழ்த்தியதாக தெரிகிறது என்றார். இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்திய பிரதமர் நரேந்திர மோதி இந்த தாக்குதலுக்கு பொறுப்பானவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் .

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)