காணொளி: ஹோர்மூஸை மூடுவதாக இரான் அறிவிப்பு

காணொளி: ஹோர்மூஸை மூடுவதாக இரான் அறிவிப்பு
பிரசுரிக்கப்பட்டது

ஹோர்மூஸை மூடுவதாக இரான் மீண்டும் அறிவித்திருக்கிறது. அமெரிக்காவும் இஸ்ரேலும் போர் நிறுத்தத்தை மீறுவதாக குற்றம்சாட்டி இரான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. என்ன நடந்தது?

இந்த வார தொடக்கத்தில் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான 14 அம்சங்களை கொண்ட ஒப்பந்தத்தில் அமெரிக்காவும் இரானும் கையெழுத்திட்டிருந்தன. இந்த நிலையில், தெற்கு லெபனானில் இஸ்ரேலின் தாக்குதல் தொடர்வதை குறிப்பிட்டு இந்த அறிவிப்பை இரான் வெளியிட்டிருக்கிறது. ஹோர்மூஸ் நீரிணையை நெருங்காதீர்கள். இல்லையெனில், உங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என அனைத்து கப்பல்களுக்கும் இரான் கடற்படை கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அதே நேரம், ஹோர்மூஸ் திறந்தே இருப்பதாக அமெரிக்க துணை அதிபர் ஜேடிவான்ஸ் கூறுகிறார். ஃபாக்ஸ் நியூஸிடம் பேசிய அவர், இரான் ஹோர்மூஸ் நீரிணையை மூடி வருவதற்கான எந்த ஆதாரத்தை நாங்கள் காணவில்லை என கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு